இடுகைகள்

பாலசந்தர் என்றதொரு பல்கலை கழகம்...

ஆரம்ப நாட்களில் நான் சிவாஜி ரசிகன்.எம்.ஜி.ஆர்.ரசிகர்களுடன் பள்ளி நாட்களில் சூடான விவாதம் செய்வதுண்டு.எனது வகுப்பு தோழர்கள் இந்த வாக்கு வாதத்தை கைகலப்பு வரை கொண்டு செல்வார்கள்.இந்த ரசிகர் பிரியர்  வாக்குவாதம் குறுகி பிடி சண்டைகள் காரணத்தால் ஒருவருக்கு ஒருவர் வருடக்க கணக்கில் பேசாமல் இருந்ததுண்டு.    நண்பிகளுடன் தான் பார்த்த ஒரு திரைப்படத்தை என் சகோதரி ஓஹோ என்று பாராட்டியதால் நான் முதன் முதலாக சிவாஜி நடிக்காத அந்த படத்தை பார்க்க சென்றேன். அந்த திரைப்படம் தான் பாமா விஜயம். அந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.படத்தின் கவர்ச்சியே நாகேஷும், KB அவர்களின் சாதுர்யமான வசனங்களும். தான்.பெற்ற தாய் அடிக்கடி காட்டும் நாடக பாணி பாசம்,உடன் பிறந்த சகோதரன் தன் கள்ள காதலியுடன் செய்யும் மோசம்,கழுத்தில் புலிநகம் அல்லது கர்சிப் அணிந்து முரட்டு மீசை கெட்டவர்கள் செய்யும் நாசம் போன்றவை இல்லாதா அவரின் திரை படங்களால் நானும் என் வகுப்பு தோழர்களும் ஈர்க்கப்பட்டு அவரின் விசிறிகள் ஆகிவிட்டோம். புத்திசாலிதனமான நகைசுவை வசனங்கள், யதார்த்தமான காட்சிகள், வித்யாசமான பாத்திரங்கள்,ஏற்று நடிக்குக்கும் இளைஞர் பட்டாள
படம்
இரண்டு தமிழ் படங்கள்     தற்போதைய சுவாரஸ்யம் சமிபத்தில் வந்த இரண்டு தமிழ் திரைபடங்கள்ஒன்று சென்னை எக்ஸ்பிரஸ்;மற்றது தலைவா .இரண்டு படங்களின் நாயகர்களும் இளைய தலைமுறையினரால் ரசிக்கப்பட்டவர்கள்.அதிகமாய் விமர்சிக்கப்பட்ட ஆக்ஷன் ஹீரோக்கள். .ப ாக்ஸ் ஆபிஸ் சாதனையாளர்கள். இர ண்டு படங்களின் "ஆடெட் அட்ராக்ஷன் "சத்யராஜ். இந்த இரண்டு படங்களூம்.அதிக எதிர்பார்ப்புகளையும், ஏராளமான விமர்சன கணைகள் தாக்குதல்களுக்கு ஆளான படங்கள்.                   செ ன்னை எக்ஸ்பிரஸ் வெளி வந்து செமயாய் ஓடிக் கொண்டிருக்கிறது.      வழக்கமான செலுலாய்ட் ஹீரோக்களின் மசாலா கதை.சென்னை எக்ஸ்பிரஸ்.இக் கதையில் .மசாலா மிகவும் தூக்கலாய் இருந்தாலும்.ரசிகைகளும் சிலாகிக்கும் பதத் திதில் பறிமாறப்பட்டுள்ளதுதான் இதன் வெற்றி. வர்த்தக ரீதியில் எடுக்கப்படும் ஷாருக்கின் படங்களில் வித்யாசம் இருக்கும். "துவச்ச துணியையே துவைக்கும்" லிஸ்டில் வாராது. இந்த முறை-தி பவர் ஆப் காமன்மென்         ஒரு சாதரண மனிதன் ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து காதலிக்காக உயிரை துச்சமாக நினைத்து வில்லனுடன் போரடும் கதை."காதலியர் கடைக் க

குமாஸ்தாவின் மகன்..

படம்
குமாஸ்தாக்களை தயாரிக்கும் கரிகுலம் காலாவதியாகிய பின்னும்,நினைத்த டார்ஜெட்டை நாம் தொடவில்லை.தந்தையை விட தனயன் அறிவாளி. பேரன் அவர்களை விட அதிகம் சிந்தித்து செயல் படுகிறான்.ஆனாலும் இது பெரிய நகரங்களிலும் ,மெட்ரோக்களிலும் மட்டுமே சாத்யமான நிகழ்வு. இந்திய சிறு நகரங்களில் கல்வி தரம் உயரவில்லை.காரணம் படிப்பை விட அரசியலும்,சினிமாவும் அதிக தாக்கத்தை எற்படுத்திய வண்ணம் இருப்பதுதான்.போஸ்டர் ஒட்ட,ஏணியை பிடித்துக்கொள்ள ஆள் தேவை; ஏணியில் சாமான்யர்கள் ஏறுவதை செமி அர்பன் சமுதாயம் பார்க்க விருப்புவதில்லை.                       ஆங்கில வழி  பாட போதனை,பேச்சு வழக்கு ஆங்கிலம், என அதிகமான தடைகள்.மீறி வந்தாலும் மெ ட்ரோ கலாச்சாரம் வசப்படுவதில்லை.ஆடை அணிகலன் முதல்,உண்ணும் சிறு தீனி வரை எல்லாவற்றிலும் ஈடுபட முடியா அந்நிய தன்மை விரவி இருக்கும்.இதனை ஜீரணிக்க முடிவதில்லை.இந்த Non-Urban காம்ப்ளெக்ஸ்க்கை தவிர்க்க , தேவை பர்ஸ்னலிட்டீ டெவலெப்மெண்ட் திட்டங்கள்.ஆங்கில பத்திரிக்கை வாசிப்பு, நண்பர்கள் மத்தியில் க்ரூப் டிஸ்கஷன் போன்றவை ஓரளவு நல்ல பலனை தரும்.தன்னம்பிக்கை தரும் மாலை நேர informal  சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு
படம்
பரத நாட்டியத்திற்கு தன் வாழ்கையை அர்பணித்து கொண்டவர்கள் என்றால் அதில் முதல் இடத்தில் வருபவர்கள் - பாலசரஸ்வதி சமிபத்தில் மறைந்த சாந்தா ராவ் , ருக்மிணி தேவி , மிருணாளினி சாராபாய் , சந்திரலேகா , போன்றவர்களுடன் இன்றைய தலைமுறையை சார்ந்த பத்மாசுப்ரமனியம் அவர்களும் ஆவார்கள் தஞ்சையை ஆண்ட மகாராஜா துலாஜாவின் (1763-1783) அவை குறிப்புகளில் . பாலசரஸ்வதி அவர்களின் முன்னோற்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன இவர் காலத்தில்தான் மகாதேவ அன்னாவி என்ற நட்டுவநார் மகாராஜாவின் சொந்த ஊரில் இருந்து தருவிக்கப்படுகிறார் . அன்னாவியின்பங்களிப்பு பற்றி சிறப்பாக எத்வும் சொல்லப்படவில்லை . ஆனால் இவரின் சகோதரரின் பேரர்கள்தான் பின்நாட்களில் த ஞ்சை நால்வர்கள் என் அழைக்கப்பட்ட , சின்னையா , பொன்னையா , சிவனந்தம் மற்றும் வடிவேலு என்பவர்கள் . இளவயதில் இருந்தே இவ்ருக்கு நாட்டியத்தின் மீதும் கடவுளின் மீதும் மிகவும் பற்று இருந்தது . ஆரம்ப நாட்களில் இவர் தாயார் ஜெயம்மளூடனும் சகோதரன் சீனிவாசனுடனும் சென்னை ஜார்ஜ்டவுன் யானை கவுனியில் ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்தார் . கீழ் பகுதியில் வீட்டின் உரிமையாளர் இருந்தார

பரத நாட்டியத்தை பற்றி ...

படம்
                கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாகிய தமிழ் சமுகத்தின் நாகரீகமும் பண்பாடும் மிகவும் தொன்மையானது.இதன் கலை இலக்கிய வடிவம் மிகவும் தேர்ந்த அறிவுஜீவிகளால் வடிவமைக்கப்பட்டவை.                   இதில் மிகவும் பிரதானமாகக் கருதப்படுவது, பரதம் நிகழ் கலை என்று சொல்லப்படும் Performed Arts களில் சிறப்பான இடத்தில் இருப்பது நமது பரதம்.காரணம் இது நுட்பமாய், மனித நுண் உணர்வுகளை வெளிப்படுதுகிறது.மேலும் மோகினி ஆட்டம், ஒடிசி.கதக் போன்ற நாட்டியங்களின் தாயக இருப்பதாலும் தான். நாகரிக வளர்ச்சியின் உச்சம் என்றும், இயற்கையுடன் இணைந்த தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லப் படுவது பரத நாட்டியம் பரதம் என்ற சொல்- ப-பாவம்=Expression ர-ராகம்=Tune அல்லது music த-தாளம்= Beats - என்று உருவானதாய் சொல்வார்கள் புராணவியல் ரீதியில் பரத நாட்டியம் பரத முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அவரின் நாட்டிய பாடங்கள் தில்லை அம்பலத்தின் ப்ரகார மதில் சுவர்களில் சிற்பங்கள் வழியாக எழுதப்பட்டுள்ளதாயும் ஒரு செவி வழி சொல் வழக்கு உண்டு.இதற்கு சான்றாய் அம்பலத்தில் எழுந்து அருளி இரு

தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை....

படம்
                               "தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை...." காதலை பற்றி ஜெயகாந்தன் இப்படி குறிப்பிட்டுஇருந்தார்.' காதல் அற்பமானது.காரணம் அது அற்ப காரணங்களினால் தோன்றி அற்ப காரணங்களுக்காக மரித்துவிடும்.ஆகையால் அது அற்பமானது." ஆனால் கல்லூரி நாட்களில் காதல் அற்புதமானது.சொப்பன உலக இசை மயமான கவிதை அது.                             அப்போது மங்கையர் தம் கடைக்கண் பார்வையால் மாமலையும் ஓர் கடுகாய் காட்சியளிக்கும்.எனக்கு படிக்கும் நாட்களில் பஸ்ஸில் பயனிக்கும் போது உடன் பயணிக்கும் பிரியா மீது காதல் வரும். அவளின் கம்பிர தோற்றமும் comanding கண்களும் மனதை வருடும்..அது தெய்வீக காதலாயும், புனிதமான காவிய status  இருக்கிற மாதிரியும் படும். பின்னாளில் அவள்கண்டிப்பாய் ஒரு கல்லூரி பிரின்ஸியாய் வேலை பார்ப்பாள் என்று நினத்துக் கொள்வோம். 'டிரெயினில் போகும் சமயம் சக பயணி ஹேமா  என்னை காதலிப்பதாய் படும்.நானும் அவளை பதிலுக்கு நேசிக்க விரும்புவேன்.அந்த காதல் மரபு சாராத ஒன்றாயும்,மிக நவினத்துவம் வாய்ந்ததாயும், நடப்பு சமுதாயத்துக்கு அது ஒரு எடுத்துக்காட்டாய் கருதப்படும் தகுதியை உ

ஏன் பிறந்தாய் மரமே...

படம்
இந்தப் படத்தைFace Book ல் பார்ததும் கவிதை புனைய ஆசை கற்பனை குதிரைக்கு கால் முளைத்து,அது காற்றில் பறந்தது..                                                  பாலியல் பலாத் காரத்து பலியான தமிழ்                          சினிமா பெண் மாதிரி                          ஏன் ,நீ...                          சிதைந்து கிடக்கிறாய்                          என ஏளனித்த, எனை பார்த்து                          மரம் சொல்லியது                          "ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்ததை                         குறியீடாய் சொல்லத்த்தான்                         வீழ்ந்து கிட்க்கிறேன்                         விழித்துக்கொள் என் மகனே..!"