நடந்து வந்த பாதை
திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து
கையை அகல விரித்து வானத்திடம்
யாசகம் கேட்டபடி மரம் இருந்தது பகலில்
இருளில் கொட்டிக்கிடந்த, நட்சத்திர பொக்கிஷத்தை
கள்வர் கண்ணிலிருந்துகாத்து மறைக்க
உயர் அடர் பசுமை கிளைப் போர்வையை வான்
வேண்டாமலே மரமளித்து மகிழ்ந்தது.
திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து
இந்த இருண்டகானகத்திநூடே
பயணித்தபழையநாட்கள் விழுதென பற்றி உயர ஏறிய பின் தெரிந்ததது நாகமென
பாம்பு என்று எண்ணி விலகி நகர்ந்தால்
அது வயோதிக மரத்தின் ஊன்று கோல் வேர்
இடர்கள் ஆயிரமா யினும் கால தேவன்
ஞான போதனையால் அது இனிய பயனமானது
திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து
.பகலும் இரவும் மாறி வராததால்,தெரியவில்லை
கடந்து போனது விலங்கா மனிதானா என்று.
மனிதன்எனின்,மறந்திருப்பான்
விலங்காயிருந்தால் இருந்தால் விழுங்கியிருக்கும்
சறுக்கல்,வழுக்கல்கள், தந்த வலி யை விட
அதிக வேதனை வலி பற்றி நினைவு .
ஆறுதலாய் நிழல் துணை இல்லை,
போகும் தூரமும், தெரியவில்லை கால நேரமும் கருத்தாகவி ல்லை
ஆனாலும் தூரத்து வெளிச்சம் காட்டிய நன் நம்பிக்கை
போ முன்னே என்றது.
திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து
கருத்துகள்