Follow by Email

புதன், 28 ஆகஸ்ட், 2013

இரண்டு தமிழ் படங்கள்
   தற்போதைய சுவாரஸ்யம் சமிபத்தில் வந்த இரண்டு தமிழ் திரைபடங்கள்ஒன்று சென்னை எக்ஸ்பிரஸ்;மற்றது தலைவா .இரண்டு படங்களின் நாயகர்களும் இளைய தலைமுறையினரால் ரசிக்கப்பட்டவர்கள்.அதிகமாய் விமர்சிக்கப்பட்ட ஆக்ஷன் ஹீரோக்கள்..பாக்ஸ் ஆபிஸ் சாதனையாளர்கள்.இரண்டு படங்களின் "ஆடெட் அட்ராக்ஷன் "சத்யராஜ். இந்த இரண்டு படங்களூம்.அதிக எதிர்பார்ப்புகளையும், ஏராளமான விமர்சன கணைகள் தாக்குதல்களுக்கு ஆளான படங்கள்.
Chennai Express

                  சென்னை எக்ஸ்பிரஸ் வெளி வந்து செமயாய் ஓடிக் கொண்டிருக்கிறது.     வழக்கமான செலுலாய்ட் ஹீரோக்களின் மசாலா கதை.சென்னை எக்ஸ்பிரஸ்.இக் கதையில் .மசாலா மிகவும் தூக்கலாய் இருந்தாலும்.ரசிகைகளும் சிலாகிக்கும் பதத் திதில் பறிமாறப்பட்டுள்ளதுதான் இதன் வெற்றி. வர்த்தக ரீதியில் எடுக்கப்படும் ஷாருக்கின் படங்களில் வித்யாசம் இருக்கும். "துவச்ச துணியையே துவைக்கும்" லிஸ்டில் வாராது.
இந்த முறை-தி பவர் ஆப் காமன்மென்
        ஒரு சாதரண மனிதன் ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து காதலிக்காக உயிரை துச்சமாக நினைத்து வில்லனுடன் போரடும் கதை."காதலியர் கடைக் கண் காட்டிவிட்டால் மண்ணில் மாணவருக்கு மா மலையும் ஓர் கடுகாம்" என ஷாருக் கையில் சம்மட்டியுடன் படத்தின் ஆரம்பத்தில் இருந்து காத்திருக்கிறார் ப்ளாஷ் பேக்கில் கதை சொல்ல.

              தந்தையின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்கப்போவதாய் சொல்லிவிட்டு கோவாவுக்கு கம்பி நீட்ட முயன்றவரை விதி சென்னை எக்ஸ்பிரஸில் வலிக்கிறது.ஓடி வந்த கதாநாயகி டிரெயின் 'கம்பார்ட்மெண்டில்' மட்டுமின்றி கான் உள் அப்பார்ட்மெண்டிலும் குடியேறி விடுகிறாள்.உடனே மங்களம் பாட முடியாதபடி நாலைந்து தமிழ் நாட்டு முரடர்களும் கதைக்குள் நுழைகிறார்கள்.அதனால்  நாயகி அந்தாக்ஷரி (அந்தாதி)  டைப்பில், நாயகனுக்கு தன் அவல நிலையை விளக்குகிறாள். சத்ய ராஜ் முரடர்களுடன்  கதை நாயகி வரவு தேடி ரயிலடியில் கதையை நகர்த்த காத்திரிருக்கிறார்.விநோத பெயருடன் வில்லன்.சட்டையை கிழித்துக்கொண்டு அலைகிறார் ஒரு தலை காதலிக்காய்.காதலின் பவர் உணர்ந்த ஷாருக் ஊரில் உள்ள அனைத்து வில்லன்களயும் சிங்கத்தின் குகையிலேயே சந்தித்து துவம்சம் செய்தபின் மாமனார் ஆசியுடன் நாயகி கைத்தலம் பற்றி ரசிகர்களை ஆனந்த கடலில் ஆழ்த்தி விடை பெறுகிறார்.   
.” அடிக்கடி ஷாருக் தி பவர் ஆப் காமன்மென் என்று சொல்லி மக்களை பூரிக்க வைகிறார்.புல்லரிக்க வைகிறார். பூவும் வைக்கிறார் காதில்…”
தலைவா!


                                        தமிழ் நாட்டுக்கு வந்து தமிழனுக்கு தண்ணீர் காட்டிய பாம்பே வாலாவுக்கு பதில் தருவது போல் வந்துள்ளது தலைவா!
கதை மும்பாயில் வேலு நாயக்கருக்குப் பின் தாராவியில் தமிழர் நிலையை கோலிவுட் பார்வையில் படைத்துள்ளார்கள்.எந்த விஜய் படம் இது என்பது புரிய நீண்ட நேரமாகிறது.அதற்குள் அவசரமாய் இடைவேளை. பின் பாதியிலும் ஏக குழப்பம்..பூரி ஜெகன்னாத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் எகபட்ட ட்விஸ்டுகள்.தலைவர் யாருக்கு தலைமை தாங்க இத்தனை பஞ்ச் டயலாக்குகள் அடிக்கிறார் தமிழர்களுக்கா ,பிற மாநில அப்பாவிகளுக்கா அல்லது மைனாரிட்டி சமுகத்துக்கா.தலைவனின் இலக்கு இல்லா பயணம்,பஞ்ச் டயலாக்குகளையும் ஏகபட்ட ட்விஸ்டுகளயும் நம்பி உள்ளது.மக்களை நம்பி இல்லை.
காமிரா வீடியோ கஸெட்டை கண்டுபிடிக்க வில்லனும், நாயகனும் நடத்தும் தேடுதல் வேட்டை செம சுவாரஸ்யம்.பீபீ ரைஸர். 
 கவுண்டமணியின் மறுபதிப்பு,சந்தானம் சந்தனம்தான்.யூ ட்யூபும் வூட்டு கிழவியும் ஒன்று என அவர் அடிக்கும் டயலாக் வீடு வந்தும் நினைத்து, நினைத்து சிரிக்க செய்வது
மற்றபடி படத்தில் அப்படி எதுவும் இல்லை..
சாதாரண மனிதனுக்கு தலைவன் என்பவன் அடியாளோ ஆபத்பாந்தவனே இல்லை இவன் நமக்காக வாழ்பவன்.;நம் நலனுக்காய் உழைபவன் என எவனை சாதாரண பிரஜைகள் நம்புகிறார்களோ அவன் தான் தலைவன்; இதை விடுத்து எந்த பம்மாத்து வேலை  செய்தாலும் தலைவனாக முடியாது.இன்றும் என்.டி.ஆரை ஆந்திராவிலும் எம்.ஜீ.ஆரை தமிழகத்திலும் தலைவனாய் நினைக்கக் காரணம் சினிமா அல்ல.மக்களுக்காக அவர்கள் ஆற்றிய தன்னலம் பாரா சலியாத உழைப்பு. 
தலைவனாக தேவை தியாகம்-சிக்ஸ் பேக்ஸல்ல..!
தலைவா + சத்ய ராஜ் = TIME to learn
சென்னை எக்ஸ்பிரஸ்-சத்யராஜ்=மலபார் எக்ஸ்பிரஸ் 
.