Follow by Email

சனி, 10 ஜனவரி, 2015

பாலசந்தர் என்றதொரு பல்கலை கழகம்...

ஆரம்ப நாட்களில் நான் சிவாஜி ரசிகன்.எம்.ஜி.ஆர்.ரசிகர்களுடன் பள்ளி நாட்களில் சூடான விவாதம் செய்வதுண்டு.எனது வகுப்பு தோழர்கள் இந்த வாக்கு வாதத்தை கைகலப்பு வரை கொண்டு செல்வார்கள்.இந்த ரசிகர் பிரியர்  வாக்குவாதம் குறுகி பிடி சண்டைகள் காரணத்தால் ஒருவருக்கு ஒருவர் வருடக்க கணக்கில் பேசாமல் இருந்ததுண்டு.  
 நண்பிகளுடன் தான் பார்த்த ஒரு திரைப்படத்தை என் சகோதரி ஓஹோ என்று பாராட்டியதால் நான் முதன் முதலாக சிவாஜி நடிக்காத அந்த படத்தை பார்க்க சென்றேன்.
அந்த திரைப்படம் தான் பாமா விஜயம்.
அந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.படத்தின் கவர்ச்சியே நாகேஷும், KB அவர்களின் சாதுர்யமான வசனங்களும்.
தான்.பெற்ற தாய் அடிக்கடி காட்டும் நாடக பாணி பாசம்,உடன் பிறந்த சகோதரன் தன் கள்ள காதலியுடன் செய்யும் மோசம்,கழுத்தில் புலிநகம் அல்லது கர்சிப் அணிந்து முரட்டு மீசை கெட்டவர்கள் செய்யும் நாசம் போன்றவை இல்லாதா அவரின் திரை படங்களால் நானும் என் வகுப்பு தோழர்களும் ஈர்க்கப்பட்டு அவரின் விசிறிகள் ஆகிவிட்டோம்.
புத்திசாலிதனமான நகைசுவை வசனங்கள், யதார்த்தமான காட்சிகள், வித்யாசமான பாத்திரங்கள்,ஏற்று நடிக்குக்கும் இளைஞர் பட்டாளம்,இது தான் KB. குமுதம் வார இதழில் அவர் எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகள் தான் எனக்கு சினிமா மீது ஒரு காதலை ஏற்படுத்தியது
வெள்ளிக்கிழமைகளில் பாலசந்தர் படம் ரிலீஸ் ஆகும்.சனிக்கிழமை கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு, காலைகாட்சிக்கு போய்விடுவோம்..
கல்லூரி நாட்களில் பாலசந்தர் அவர்களின் படங்கள் பற்றிய முழு தகவல்கள் இருக்கும்.புன்னகை படத்தையும்  அரங்கேற்றத்தையும்  நான்கைந்து முறை பார்த்து வியந்தோம்.சத்யஜித்ரே படங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு அந்த நாட்களில் கிட்டியதில்லை.சென்னை போன்ற பட்டின வாசிகள் தான் அந்த படங்களை பார்க்க இயலும்.இந்த குறையை ஓரளவு KB அவர்கள் ஈடுகட்டின.
பின்நாளில் ஓரளவு திருச்சி சினி போரம் இதை நிவர்த்தி செய்தது.
இவரின் படைப்புகளில் அதிகம் பேசப்படாதது –பத்தாம்பசலியும், நான்கு சுவர்கள் என்ற வண்ண படமும்தான். அற்புதமான படைப்புகள்.முன்னதில் நாகேஷ் அசத்தி இருப்பார்.பின்னதில் ரவிச்சந்திரனும் ஜெய சங்கரும்
ஒப்பனையும் இசையும் நடனமும் மனதை தொடும்

. மோசக்கரனுக்கு மோசக்காரன் என்ற தெலுங்கு டப்பிங் படத்துக்கு  கிடைத்ததில் பாதி வரவேற்பை  கூட பெறாத இந்த திரைப்படம்  ஹாலிவுட் ஜாங்கோ படங்களுக்கு நிகரானது..

தன் வாழ்நாளை கலைக்கு அர்ப்பணம் செய்த இவர் ஒரு பல்கலை கழகம்......   

புதன், 28 ஆகஸ்ட், 2013

இரண்டு தமிழ் படங்கள்
   தற்போதைய சுவாரஸ்யம் சமிபத்தில் வந்த இரண்டு தமிழ் திரைபடங்கள்ஒன்று சென்னை எக்ஸ்பிரஸ்;மற்றது தலைவா .இரண்டு படங்களின் நாயகர்களும் இளைய தலைமுறையினரால் ரசிக்கப்பட்டவர்கள்.அதிகமாய் விமர்சிக்கப்பட்ட ஆக்ஷன் ஹீரோக்கள்..பாக்ஸ் ஆபிஸ் சாதனையாளர்கள்.இரண்டு படங்களின் "ஆடெட் அட்ராக்ஷன் "சத்யராஜ். இந்த இரண்டு படங்களூம்.அதிக எதிர்பார்ப்புகளையும், ஏராளமான விமர்சன கணைகள் தாக்குதல்களுக்கு ஆளான படங்கள்.
Chennai Express

                  சென்னை எக்ஸ்பிரஸ் வெளி வந்து செமயாய் ஓடிக் கொண்டிருக்கிறது.     வழக்கமான செலுலாய்ட் ஹீரோக்களின் மசாலா கதை.சென்னை எக்ஸ்பிரஸ்.இக் கதையில் .மசாலா மிகவும் தூக்கலாய் இருந்தாலும்.ரசிகைகளும் சிலாகிக்கும் பதத் திதில் பறிமாறப்பட்டுள்ளதுதான் இதன் வெற்றி. வர்த்தக ரீதியில் எடுக்கப்படும் ஷாருக்கின் படங்களில் வித்யாசம் இருக்கும். "துவச்ச துணியையே துவைக்கும்" லிஸ்டில் வாராது.
இந்த முறை-தி பவர் ஆப் காமன்மென்
        ஒரு சாதரண மனிதன் ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து காதலிக்காக உயிரை துச்சமாக நினைத்து வில்லனுடன் போரடும் கதை."காதலியர் கடைக் கண் காட்டிவிட்டால் மண்ணில் மாணவருக்கு மா மலையும் ஓர் கடுகாம்" என ஷாருக் கையில் சம்மட்டியுடன் படத்தின் ஆரம்பத்தில் இருந்து காத்திருக்கிறார் ப்ளாஷ் பேக்கில் கதை சொல்ல.

              தந்தையின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்கப்போவதாய் சொல்லிவிட்டு கோவாவுக்கு கம்பி நீட்ட முயன்றவரை விதி சென்னை எக்ஸ்பிரஸில் வலிக்கிறது.ஓடி வந்த கதாநாயகி டிரெயின் 'கம்பார்ட்மெண்டில்' மட்டுமின்றி கான் உள் அப்பார்ட்மெண்டிலும் குடியேறி விடுகிறாள்.உடனே மங்களம் பாட முடியாதபடி நாலைந்து தமிழ் நாட்டு முரடர்களும் கதைக்குள் நுழைகிறார்கள்.அதனால்  நாயகி அந்தாக்ஷரி (அந்தாதி)  டைப்பில், நாயகனுக்கு தன் அவல நிலையை விளக்குகிறாள். சத்ய ராஜ் முரடர்களுடன்  கதை நாயகி வரவு தேடி ரயிலடியில் கதையை நகர்த்த காத்திரிருக்கிறார்.விநோத பெயருடன் வில்லன்.சட்டையை கிழித்துக்கொண்டு அலைகிறார் ஒரு தலை காதலிக்காய்.காதலின் பவர் உணர்ந்த ஷாருக் ஊரில் உள்ள அனைத்து வில்லன்களயும் சிங்கத்தின் குகையிலேயே சந்தித்து துவம்சம் செய்தபின் மாமனார் ஆசியுடன் நாயகி கைத்தலம் பற்றி ரசிகர்களை ஆனந்த கடலில் ஆழ்த்தி விடை பெறுகிறார்.   
.” அடிக்கடி ஷாருக் தி பவர் ஆப் காமன்மென் என்று சொல்லி மக்களை பூரிக்க வைகிறார்.புல்லரிக்க வைகிறார். பூவும் வைக்கிறார் காதில்…”
தலைவா!


                                        தமிழ் நாட்டுக்கு வந்து தமிழனுக்கு தண்ணீர் காட்டிய பாம்பே வாலாவுக்கு பதில் தருவது போல் வந்துள்ளது தலைவா!
கதை மும்பாயில் வேலு நாயக்கருக்குப் பின் தாராவியில் தமிழர் நிலையை கோலிவுட் பார்வையில் படைத்துள்ளார்கள்.எந்த விஜய் படம் இது என்பது புரிய நீண்ட நேரமாகிறது.அதற்குள் அவசரமாய் இடைவேளை. பின் பாதியிலும் ஏக குழப்பம்..பூரி ஜெகன்னாத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் எகபட்ட ட்விஸ்டுகள்.தலைவர் யாருக்கு தலைமை தாங்க இத்தனை பஞ்ச் டயலாக்குகள் அடிக்கிறார் தமிழர்களுக்கா ,பிற மாநில அப்பாவிகளுக்கா அல்லது மைனாரிட்டி சமுகத்துக்கா.தலைவனின் இலக்கு இல்லா பயணம்,பஞ்ச் டயலாக்குகளையும் ஏகபட்ட ட்விஸ்டுகளயும் நம்பி உள்ளது.மக்களை நம்பி இல்லை.
காமிரா வீடியோ கஸெட்டை கண்டுபிடிக்க வில்லனும், நாயகனும் நடத்தும் தேடுதல் வேட்டை செம சுவாரஸ்யம்.பீபீ ரைஸர். 
 கவுண்டமணியின் மறுபதிப்பு,சந்தானம் சந்தனம்தான்.யூ ட்யூபும் வூட்டு கிழவியும் ஒன்று என அவர் அடிக்கும் டயலாக் வீடு வந்தும் நினைத்து, நினைத்து சிரிக்க செய்வது
மற்றபடி படத்தில் அப்படி எதுவும் இல்லை..
சாதாரண மனிதனுக்கு தலைவன் என்பவன் அடியாளோ ஆபத்பாந்தவனே இல்லை இவன் நமக்காக வாழ்பவன்.;நம் நலனுக்காய் உழைபவன் என எவனை சாதாரண பிரஜைகள் நம்புகிறார்களோ அவன் தான் தலைவன்; இதை விடுத்து எந்த பம்மாத்து வேலை  செய்தாலும் தலைவனாக முடியாது.இன்றும் என்.டி.ஆரை ஆந்திராவிலும் எம்.ஜீ.ஆரை தமிழகத்திலும் தலைவனாய் நினைக்கக் காரணம் சினிமா அல்ல.மக்களுக்காக அவர்கள் ஆற்றிய தன்னலம் பாரா சலியாத உழைப்பு. 
தலைவனாக தேவை தியாகம்-சிக்ஸ் பேக்ஸல்ல..!
தலைவா + சத்ய ராஜ் = TIME to learn
சென்னை எக்ஸ்பிரஸ்-சத்யராஜ்=மலபார் எக்ஸ்பிரஸ் 
.

திங்கள், 8 அக்டோபர், 2012

குமாஸ்தாவின் மகன்..


குமாஸ்தாக்களை தயாரிக்கும் கரிகுலம் காலாவதியாகிய பின்னும்,நினைத்த டார்ஜெட்டை நாம் தொடவில்லை.தந்தையை விட தனயன் அறிவாளி. பேரன் அவர்களை விட அதிகம் சிந்தித்து செயல் படுகிறான்.ஆனாலும் இது பெரிய நகரங்களிலும் ,மெட்ரோக்களிலும் மட்டுமே சாத்யமான நிகழ்வு. இந்திய சிறு நகரங்களில் கல்வி தரம் உயரவில்லை.காரணம் படிப்பை விட அரசியலும்,சினிமாவும் அதிக தாக்கத்தை எற்படுத்திய வண்ணம் இருப்பதுதான்.போஸ்டர் ஒட்ட,ஏணியை பிடித்துக்கொள்ள ஆள் தேவை; ஏணியில் சாமான்யர்கள் ஏறுவதை செமி அர்பன் சமுதாயம் பார்க்க விருப்புவதில்லை.
                      ஆங்கில வழி  பாட போதனை,பேச்சு வழக்கு ஆங்கிலம், என அதிகமான தடைகள்.மீறி வந்தாலும் மெ ட்ரோ கலாச்சாரம் வசப்படுவதில்லை.ஆடை அணிகலன் முதல்,உண்ணும் சிறு தீனி வரை எல்லாவற்றிலும் ஈடுபட முடியா அந்நிய தன்மை விரவி இருக்கும்.இதனை ஜீரணிக்க முடிவதில்லை.இந்த Non-Urban காம்ப்ளெக்ஸ்க்கை தவிர்க்க , தேவை பர்ஸ்னலிட்டீ டெவலெப்மெண்ட் திட்டங்கள்.ஆங்கில பத்திரிக்கை வாசிப்பு, நண்பர்கள் மத்தியில் க்ரூப் டிஸ்கஷன் போன்றவை ஓரளவு நல்ல பலனை தரும்.தன்னம்பிக்கை தரும் மாலை நேர informal  சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.ஆங்கில பதப்பிரயோகம் நம் நிலைப்பாட்டை ஒரளவு கவனிக்கச்செய்யும்.குனிந்து பார்பவர்களை நிமிர்ந்து பார்க்கச் செய்யும்.
சமிபகாலமாய் பாடி லாங்க்வெஜ் முக்கிய பங்கு வகிகிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக Need of the hour தன்நம்பிக்கை தான்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
பரத நாட்டியத்திற்கு தன் வாழ்கையை அர்பணித்து கொண்டவர்கள் என்றால் அதில் முதல் இடத்தில் வருபவர்கள்-
பாலசரஸ்வதி சமிபத்தில் மறைந்த சாந்தா ராவ், ருக்மிணி தேவி, மிருணாளினி சாராபாய், சந்திரலேகா, போன்றவர்களுடன் இன்றைய தலைமுறையை சார்ந்த பத்மாசுப்ரமனியம் அவர்களும் ஆவார்கள்
தஞ்சையை ஆண்ட மகாராஜா துலாஜாவின் (1763-1783)அவை குறிப்புகளில்.பாலசரஸ்வதி அவர்களின் முன்னோற்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன இவர் காலத்தில்தான் மகாதேவ அன்னாவி என்ற நட்டுவநார் மகாராஜாவின் சொந்த ஊரில் இருந்து தருவிக்கப்படுகிறார்.அன்னாவியின்பங்களிப்பு பற்றி சிறப்பாக எத்வும் சொல்லப்படவில்லை. ஆனால் இவரின் சகோதரரின் பேரர்கள்தான் பின்நாட்களில் த ஞ்சை நால்வர்கள் என் அழைக்கப்பட்ட, சின்னையா, பொன்னையா,சிவனந்தம் மற்றும் வடிவேலு என்பவர்கள்.
இளவயதில் இருந்தே இவ்ருக்கு நாட்டியத்தின் மீதும் கடவுளின் மீதும் மிகவும் பற்று இருந்தது.ஆரம்ப நாட்களில் இவர் தாயார் ஜெயம்மளூடனும் சகோதரன் சீனிவாசனுடனும் சென்னை ஜார்ஜ்டவுன் யானை கவுனியில் ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்தார். கீழ் பகுதியில் வீட்டின் உரிமையாளர் இருந்தார்.அவரது போர்ஷனில் ஒரு கிருஷ்னர் ஓவியம் இருந்தது.(tanjore painting) தன்னை ந ன்கு   அலங்கரித்துக் கொண்டு பாலசரஸ்வதி அவர்கள் பாடி ஆடுவார்களாம். பின் நாட்களில் இதை பற்றி நினைவு கூறும்   சமயம்
சித்திரமாய் சலனமின்றி இருக்கும் கிருஷ்ணரை தான் விழிக்க செய்யவே ஆடியதாய் சொல்லி உள்ளார்.
மயிலை கௌரியம்மளும்,கண்டப்ப பிள்ளையும் இவருக்கு நாட்டியம் கற்று தந்தவர்கள்.இவரின் வளர்ச்சிக்கு வீணைதனம் அம்மாளின் பங்கும் குறிப்பிடதக்கது.பால சரஸ்வதி அவர்கள் நடனமாடத்துவ்ங்கிய நாட்களீல் வீணைதனம் அம்மாளின் பார்வை குறைவு அதிகமாகி விட்டது.வீணைதனம் அம்மாள் அவ்ரின் நடனத்தை பார்க்க முடியாதது தான் சோகத்தின் உச்சம்.
பரதத்தை ஒரு யோக பயிற்சியாய் பார்த்தவர் இவர்.பாட்டையும் பரதத்தையும் பரம் பொருளுடன் தன்னை இணக்கும் பாலமாய் பார்த்தவ்ர். அதில் தான் பயனிப்பதை நன்கு அறிந்துணர்ந்தவர்.
சத்ய ஜித் ராய்  எடுத்த இவரை பற்றிய ஆவண படம் உலகின் அனைத்து அறிவு ஜிவிகளாலும் போற்றப்பட்டது.
இந்தியா தவிர மேல் நாட்டிலும் இவர் நடன வகுப்புக்கள் எடுத்துள்ளார்.ஏறத்தாழ 50 வருடங்கள் கலைக்கு சேவை செய்துள்ளார்


மறைந்த சாந்தா ராவை பற்றி நாடக வெளி ரெங்கராஜன் அவர்கள் எழுதியதில்
 சில பகுதி-- .
மங்களூரில் பிறந்து மகராஷ்டிரத்தில் வளர்ந்து தென் இந்திய நடனத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இளம் வயதிலேயே கேரளத்துக்கு வந்து  அங்கு மோகினியாட்டத்தையும், கதகளியையும் கற்று பிறகு தமிழ்நாட்டில் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியம் பயின்றவர் தன் இறுதி நாள் வரை நடனத்துக்காக வாழ்ந்து, வாழ்வீன் பெரும் பகுதியை கலை தேடலில் செலவிட்டார்.
உலகம் முழுவதும் சாந்தா ராவின் புகழ் பரவி அவருக்கு சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவை கிடைத்தன. இரும்பு மற்றும் பட்டின் கலவை, குமிழியிடும் நீர் மற்றும் சம்மட்டியின் ஓசை, கணிதத்தின் கச்சிதம் மற்றும் நாடகத்தின் ஆச்சரியம், உணர்ச்சியின் தீவிரம் மற்றும் அரூபத்தன்மை ஆகிய குணங்களை அவருடைய கலை கொண்டிருப்பதாக விமர்சகர்கள் கருதினர். குறிப்பாக, அவருடைய மோகினியாட்டம் மிகவும் தனித்துவத்துவம் வாய்ந்தது.. அவர் தன்னுடைய வீட்டை ஒரு கலைக்கூடம் போலவே வைத்திருந்தார். ஓவியங்கள், எழுத்துப் பிரதிகள், நடனப்பயிற்சி அரங்கம், பார்வையாளர்களுக்கான ஆடிட்டோரியம் என்று தன்னுடைய வீட்டை கலை தேடலுக்கு ஏற்றது போல் வடிவமைத்து இருந்தார்.
அவருடைய முழுவாழ்க்கையும் தனிமையிலும் சிந்தனையிலும் கழிந்தது.
பெங்களூரில்  டிசம்பர் 2007இல்  நடனக் கலைஞர் சாந்தா ராவ் மறைந்தார்.

 நன்றி:-நெட்டில் சுட்ட இந்த படங்களை எடுத்தவருக்கும்,வெளி ரெங்க ராஜனுக்கும்..

திங்கள், 14 மே, 2012

பரத நாட்டியத்தை பற்றி ...


                கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாகிய தமிழ் சமுகத்தின் நாகரீகமும் பண்பாடும் மிகவும் தொன்மையானது.இதன் கலை இலக்கிய வடிவம் மிகவும் தேர்ந்த அறிவுஜீவிகளால் வடிவமைக்கப்பட்டவை.
                  இதில் மிகவும் பிரதானமாகக் கருதப்படுவது, பரதம்
நிகழ் கலை என்று சொல்லப்படும் Performed Arts களில் சிறப்பான இடத்தில் இருப்பது நமது பரதம்.காரணம் இது நுட்பமாய், மனித நுண் உணர்வுகளை வெளிப்படுதுகிறது.மேலும் மோகினி ஆட்டம், ஒடிசி.கதக் போன்ற நாட்டியங்களின் தாயக இருப்பதாலும் தான். நாகரிக வளர்ச்சியின் உச்சம் என்றும், இயற்கையுடன் இணைந்த தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லப் படுவது பரத நாட்டியம்
பரதம் என்ற சொல்-
ப-பாவம்=Expression
ர-ராகம்=Tune அல்லது music
த-தாளம்= Beats - என்று உருவானதாய் சொல்வார்கள்
புராணவியல் ரீதியில் பரத நாட்டியம் பரத முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அவரின் நாட்டிய பாடங்கள் தில்லை அம்பலத்தின் ப்ரகார மதில் சுவர்களில் சிற்பங்கள் வழியாக எழுதப்பட்டுள்ளதாயும் ஒரு செவி வழி சொல் வழக்கு உண்டு.இதற்கு சான்றாய் அம்பலத்தில் எழுந்து அருளி இருக்கும் நடராஜரின் நாட்டிய கோலத்தையும்,அதன் வழி அவரது ஊழி த்தாண்டவம் என்கிற cosmioc Dance  என்ற தத்துவம் சொல்லப்படுவதாயும் ஒரு நம்பிக்கை உண்டு. நாட்டிய கடவுளாய் சிவ பிரானை சொல்வதுண்டு.அவரின் மகிழ்ச்சியை குறிப்பது ஆனந்த தாண்டவம் என்றும் கோபத்தை குறிப்பது ருத்ர தாண்டவம் என்றும் சொல்வதுண்டு.
                                      பரத நாட்டியத்தை பற்றி --.
ஆரம்ப நாட்களில் ஆதி மனிதன் குகைகளில் வாழ்ந்த போது, தன் உணர்வுகளை கோபம்,ஆனந்தம்,சோகம் போன்ற மன எழுச்சிகளை வித விதமான ஒலிகளை எழுப்புவதன் முலம் தன் எண்ணத்தை வெளிப் படுத்திக் கொண்டிருந்தான். காலப் போக்கில் ஒலியுடன் உடல் சமிக்கைகள் முலம்,தன் எண்ணத்தை இன்னும் சிறப்பாகவும் குறிப்பாகவும் வெளிப் படுத்தத் துவங்கினான்.மனிதன் குழுக்களாய் கூடி வாழும் நாட்களில், இரவு நேரங்க்களிலும்,ஓய்வு நேரங்களிலும் பொழுது போக்க, ஆடல்,பாடல்களில் ஈடுபட்டான்.ஒழுங்கில்லா சமிக்கைகளும் சத்தங்களும் காலப் போக்கில்,ஒருங்கினைந்த அசைவாகியது.அதாவது.harmonious Gesture.சலிப்பில்லாத, தொடர்ச்சியான பொழுது போக்கிற்கு அர்த்தமில்லாத ஆட்டம் பாட்டத்தை மிறிய புதிய வடிவங்கள் தேவைப்பட்டது

                     கதையுடன் கூடிய சம்பவக் கோர்வைகள், நீதி போதனைகள்,  புராண,இதிகாச கதைகள்,இவைகளின் தொகுப்பாய் ஆரம்ப நாட்களீல் நிகழ் கலைகள் இருந்து வந்தது,அந்த சமயங்களில் அதன் பிரதான வடிவு கூத்து என்று சொல்லப்பட்டது.கூத்து-
நாட்டுக் கூத்து,வள்ளி கூத்து,குரவைகூத்து என்று பல வகையாக இருந்தது.ஜனரஞ்சகமான அதன் வடிவம், தெருக்கூத்து எனப்பட்டது.கூத்துக்கள் நிகழ்த்த பெரிய அரங்கங்கள்,மனித சக்தி,ஒப்பனைகள்,அரங்கத்தில் வித விதமான மலர் அலங்கரிப்பு, வாத்திய வகைகள்,பல அரங்க நிர்மாண பொருட்கள் என பல விஷயங்கள் அடிப்படையில் தேவைபட்டது.மேலும் இதற்கு பொருளாதார நிர்பந்தங்களால் அரசின் அதரவு தேவைபட்டது
                                             
                                               காலப் போக்கில் கோவில்கலாச்சாரம் முக்கியத்துவம் பெற்றதும்,கலைகளும் கலை வடிவங்களும் மாற்றங்களுக்கு உட்படவேண்டிய கட்டாயதுக்குள்ளானது.அதனால் உருவம்,உள்ளடக்கம்,மற்றும் நிகழ்விடங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டது.பெரிய அரங்கத்தில் இரண்டு மூன்று நபர்கள் பங்கேற்ற கூத்து,ஒரு தனியாரின் நிகழ்ச்சியாகி, சதுரமான சிறிய அரங்கத்தில்,கோவிலில் நடைபெற்றது.அதனால் அது சதிர் என்று சொல்லப்பட்டது.அபினயங்களுடன் ஆட்டம் பாட்டும் சேர்ந்து கொண்டதால் முக பாவங்கள் மூலம் உணர்ச்சிகளையும் கண்கள் முலம் கதை சொல்லும் ஆற்றல் பெண்களிடம் அதிகம் இருந்ததால் சதிராட்டங்களில் பெண்கள் அதிகம் பங்கேற்றனர்.இதன் அடிபடையில் தான் தேவதாசி முறை வந்திருக்கலாம்.
                      மேலும் ஆலயங்களீல் எழுந்து அருளி இருக்கும் இறைவனுக்கு தரவேண்டிய 15 உபசரணகளில்(Hospitality) ,பொறிகளுக்கு இன்பம் அளிக்க வல்ல இசையும், நடனமும் ஒன்று.
இயல் இசை,நாடகம் என்ற முத்தமிழின் வடிவத்தை காலப்போக்கில் பரதம் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு ஒரு பிரதான இடத்தை பரதக்கலை நாளடைவில் தனக்கு ஏற்படுத்தி கொண்டது.
பரதத்தின் அடிப்படை என்று சொல்லப்படுவது-நிருத்தம்,நாட்டியம்,நிருத்தியம்.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றூம் மேலக்கடம்பூர்ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
                                 பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' எனப்படும் . இக்கலையின் ஆசிரியர்களில், 'வழுவூர் ராமையா பிள்ளை,திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை', 'தனஞ்சயன்', 'அடையார் லக்ஷ்மணன்', 'கலாநிதி நாராயணன்' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்.
தஞ்சை தரணியும், மெய் பொருள் உறைக்கும் சிதம்பரமும்.பரத பயிர் வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சிய பூமி.
                                    தஞ்சை நால்வர்கள் என்று சொல்லப்பட்ட சின்னையா, பொன்னையா,சிவனந்தம் மற்றும் வடிவேலு என்கிற இவர்கள் சரபோஜி மாமன்னனின் அரசசபையில் இருந்தவர்கள்.இவர்கள் தான் பரத நாட்டியத்தின் தற்போதய வடிவான, அலாரிப்பு,ஜதிஸ்வரம்,வர்ணம்,சதனம்,பதம்,தில்லாணா அகிய இவைகளை உருவாக்கியவர்கள்.
இதற்கு முன்பு ஸ்வர ஜதி.பத வர்ணம், தில்லாணா என்ற வடிவம் மட்டும் இருந்தது.இந்த தஞ்சை நால்வரின் வாரிசுகளால் பின் சந்ததியினருக்கு பரத நாட்டியம் போதிக்கப்பட்டது.பரம்பரை நட்டுவாங்கம் இவர்களால் தொடர்ந்தது.
                    பரத நாட்டியத்திற்கு தன் வாழ்கையை அர்பணித்து கொண்டவர்கள்பற்றி சில வரிகள் குறிப்பிட்டு விட்டு நான் விடை பெற்றுக்கொள்ள ஆசை படுகிறேன்.
                                                                                                                    (மீதி அப்புறம்ந்தேன்..! )

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை....


                               "தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை...."

காதலை பற்றி ஜெயகாந்தன் இப்படி குறிப்பிட்டுஇருந்தார்.' காதல் அற்பமானது.காரணம் அது அற்ப காரணங்களினால் தோன்றி அற்ப காரணங்களுக்காக மரித்துவிடும்.ஆகையால் அது அற்பமானது."
ஆனால் கல்லூரி நாட்களில் காதல் அற்புதமானது.சொப்பன உலக இசை மயமான கவிதை அது.
                            அப்போது மங்கையர் தம் கடைக்கண் பார்வையால் மாமலையும் ஓர் கடுகாய் காட்சியளிக்கும்.எனக்கு படிக்கும் நாட்களில் பஸ்ஸில் பயனிக்கும் போது உடன் பயணிக்கும் பிரியா மீது காதல் வரும். அவளின் கம்பிர தோற்றமும் comanding கண்களும் மனதை வருடும்..அது தெய்வீக காதலாயும், புனிதமான காவிய status  இருக்கிற மாதிரியும் படும். பின்னாளில் அவள்கண்டிப்பாய் ஒரு கல்லூரி பிரின்ஸியாய் வேலை பார்ப்பாள் என்று நினத்துக் கொள்வோம். 'டிரெயினில் போகும் சமயம் சக பயணி ஹேமா  என்னை காதலிப்பதாய் படும்.நானும் அவளை பதிலுக்கு நேசிக்க விரும்புவேன்.அந்த காதல் மரபு சாராத ஒன்றாயும்,மிக நவினத்துவம் வாய்ந்ததாயும், நடப்பு சமுதாயத்துக்கு அது ஒரு எடுத்துக்காட்டாய் கருதப்படும் தகுதியை உடையதாயும் தோன்றும்.அவளின் காற்றாய் அசையும் நடை இதயத்தில் இசை முழக்கத்தை ஏற்படுத்தும்.
கோவிலுக்கு போகும் சமயம் எதிர்பாராமல் எதிர்ப்படும் அலமுவின் மஞ்சள் நிற மேனி காதலின் வேகத்தை அதிகரிக்கும்.சாண்டில்யன் கதை நாயகி மாதிரியான தேக அமைப்பு அவளுக்கு.சிரித்தால் குழந்தை மாதிரி இருக்கும்.
                                               இதுகளை பார்கையில் பா' புனையும் ஆர்வம் வரும்.இயல்பாய் கவிதை கங்கையாய் ஊற்றெடுக்கும்.ஆனாலும் இறுதி யாய் "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்" என பாடும் காதல் தோல்வி ஹிரோதான் நினவுக்கு வருவான்.காதலியர்கள் தங்கள் தங்கள் கண்வர்களுடன் ரிசப்ஷன் சோபாவில் மாலையும் கழுத்துமாய் நிற்க மைக்கை பிடித்துக் கொண்டு காதல் தோல்வி சினிமாடிக் சீனுடன் முடியும் போது, நான் கிளம்ப வேண்டிய,அல்லது இறங்கவேண்டிய தருணம் அல்லது இடம் வந்திருக்கும்.
                                     வேலைக்கு போகும் முன் அல்லது வேலை தேடும் சந்தர்பங்களில் பெண்கள் தான் போட்டியாய் வருவார்கள்.தோல்விகளை ஜிரணிக்க கஷ்டமாய் இருக்கும்.நல்ல சிகப்பாய் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் படவாக்களை ரெண்டுஅப்பு அப்புனும்ன்னு தோணும். கூட சின்ன பொண் இருந்திட்ட  அதுகள் பண்ற அளப்பரை யை பார்க்க பார்க்க இன்னும் எரியும்;
சின்ன வேலை கிடைத்து.ஒரு மத்திய வர்க பெண்ணை கைபிடித்து,நான் காதலித்தவளை விட என்னை காதலிப்பவள் தான் தேவை என சீ..சீ இந்த பழம் புளிக்கும் பாணியில் வசனம் பேசி தாம்பத்தியம், போன்ற பொருள் விளங்கா விஷயங்களை நாலு பேர் மத்தியில் அவர்கள் மெச்ச அசட்டு சிரிப்புடன் சொல்லி, இரண்டு மூன்று குட்டி போட்டு, ...பின்னர்
                         இழந்து போன ஆகாயங்கள் அல்லது ஸ்வர்கங்கள் என கவிதை எழுதி  தனக்குத் தானே ஆனந்த்க்கும் சந்தர்பத்தில் மகள் அல்லது மகன் சமுக அவலங்களை விமர்சிப்பது போல் பேசும் போது.
20 வயசிலே காதலிக்காதவனும்,கம்யூனிசம் பேசாதவனும்  காலங்காலமாய் இருக்கத் தான் செய்வாங்க என்று தெளிந்துணரும் சமயம் இது நினவுக்கு வ்ருவது தவிர்க்க முடியா ஒன்று.
என்ன செய்வது-
10-ல் பரபரப்பு,20-ல் இறுமாப்பு 30-ல் முனுமுனுப்பு 40-ல் நாய். குணம் 50-ல் ஏக்கம் 60-ல் தூக்கம்
என்ற இந்த உலக இயல்பு என்ற சிந்தனயை தூர எரிந்துவிட்டு ஒர் தொலை நோக்கில் பார்வையை செலுத்திய போது....
                                                                                                (தொடரும்)

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஏன் பிறந்தாய் மரமே...


இந்தப் படத்தைFace Book ல் பார்ததும் கவிதை புனைய ஆசை
கற்பனை குதிரைக்கு கால் முளைத்து,அது காற்றில் பறந்தது..
                       

                         பாலியல் பலாத் காரத்து பலியான தமிழ்
                         சினிமா பெண் மாதிரி
                         ஏன் ,நீ...
                         சிதைந்து கிடக்கிறாய்
                         என ஏளனித்த, எனை பார்த்து
                         மரம் சொல்லியது
                         "ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்ததை
                        குறியீடாய் சொல்லத்த்தான்
                        வீழ்ந்து கிட்க்கிறேன்
                        விழித்துக்கொள் என் மகனே..!"

திங்கள், 6 பிப்ரவரி, 2012

ராஜாவின் நகர் வலம்


LUNATIC
               ஒரு முறை ராஜா நகர் சோதனைக்கு மாறு வேடத்தில் பரிவாரங்கள் இல்லாமல் தனியாளாய் பொடி நடையாய் போயிருந்தாராம்.அன்று அமாவாசை.கும்மிருட்டு. எதிரில் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம்.மோதியது சரியான முரட்டு பாடி என்பதால், ராஜா உடம்பெல்லாம் வலி கண்டு விட்டதாம். நகர் சோதனை முடித்து அரண்மனைக்கு கடுப்புடன் வந்த ராஜா ஒரு அவசர சட்டம் போட்டாராம். அதன் படி ராத்திரியில் வெளியே யார் நடமாடினாலும் ஒரு விளக்குடன் நடமாடுதல் வேண்டும்.
                      போட்ட சட்டம் எந்த மட்டில் அமல் ஆகிறது,என்பதை தெரிந்து கொள்ள ராஜா மீண்டும் மறு நாள் நகர் வலம் வந்தாராம் அமாவசைக்கு மறுநாள்.ராஜா  மீண்டும் எதிர் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம். உடனே  ராஜா "மூடனே இரவில் வெளிவரும் போது பின்பற்ற  ராஜா போட்ட உத்தரவு என்ன தெரியுமா..?"என்றார்.அதற்கு அவன்," தெரியும். இரவில் வெளியே வருபவர்கள் விளக்கு ஒன்றை கொண்டு வர வேண்டும்"எனறான்.
                  பின் எங்கே விளக்கு-என்றார் ராஜா.பையில் இருக்கு என்றான் அவன்.
என்ன பையிலா என்ற ராஜாவின் அதிர்ச்சி வினவலுக்கு அவன் பதிலாக,"கையில் கொண்டு வா என உத்தரவு சொல்லவில்லையே" என்றான்.
                  மறு நாள் காலை மீண்டும் திருத்தப்பட்ட புது உத்தரவு.அதன் படி அனைவரும் இரவு நேரங்களில்.கையில் விளக்குடன் தான்  வெளியே வரவேண்டும்.
 இரவு மீண்டும் நகர் வலம்
                   ராஜா மீண்டும் எதிவந்தன் மேல் மோதிக் கொண்டாராம். உடனே ராஜா "மூடனே இரவில் வெளிவரும் போது பின்பற்ற  ராஜா போட்ட புது உத்தரவு என்ன தெரியுமா..?"என்றார்.அதற்கு அவன்," தெரியும். இரவில் வெளியே வருபவர்கள் விளக்கு ஒன்றை கையுடன் கொண்டு வர வேண்டும்".பின் எங்கே விளக்கு"-என்றார் ராஜா.
கையில் இருக்கும் விளக்கை அவன் காட்டினான்.
அதற்கு ராஜா-
            "விளக்கை ஏற்றினால் தானே வெளிச்சம் வரும். முட்டாளே நீ ஏன் விளக்கை ஏற்றிக் கொண்டு வரவில்லை" என்றார்.
           "அப்படி உத்தரவில் சொல்லவில்லை. கையில் விளக்குடன் வரச் சொல்லி தான் அரசு ஆணை சொல்கிறது" என்றான் அவன்.தொடர்ந்த்து,"என் விளக்கை கேட்ட நிர்முடா  விளக்கு இல்லாது வரும் உன் விளக்கம் என்ன?" என்றான். அதை கேட்க ராஜா அங்கு இல்லை. மறு நாள் திருத்தப்பட்ட உத்தரவு புதிதாய் அறிவிக்கப்பட்டது.அதன் படி அனைவரும் இரவு நேரங்களில்கையில் ஏற்றிய விளக்குடன் தான்  வெளியே வரவேண்டும்.
               இரண்டு நாடகளுக்குப் பின் இரவு வேளை.மீண்டும் ராஜாவின் நகர் வலம்.இந்த முறை ராஜா யார் மீதும் முட்டிக் கொள்ளவில்லை.ராஜாவுக்கு எக மகிழ்ச்சி.பிரஜைகள் எல்லோரும் கையில் ஏற்றிய விளக்குடன்.
                 எதிர் பட்டவனிடம் ராஜா கேட்டார்" இந்த நள்ளிரவில் எதனால் இத்தனை நல் வெளிச்சம் தெரியுமா " என்றார்.அதற்கு அவன் 'தெரியும்" எனறான்.ராஜா," எதனால் இப்படி வெளிச்சம் என்ற காரணத்தை சொல்" என்றார் மிகவும் கம்பிரமாக பாராட்டு மழையை எதிர் பார்த்தபடி
அதற்கு அவன், " இன்று பௌர்னமி" என்றான் அமைதியாக.

வெள்ளி, 4 நவம்பர், 2011

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்


கற்பனை வளம் இல்லாத படைப்புகள்
 சமிபமாய் வரும் நாளய இயக்குனர்களில் ஒளிபரப்பாகும் குறும் படங்களின் ஆரம்பத்திலேயே கதை போக்கும் சொல்லப் போகும் இதோபதேசமும் தெளிவாய் தெரிந்துவிடுகிறது. சிலரின் படைப்புகள் குழப்பமாயும் தெளிவின்மயுமாய் இருக்கிறது.பொதுவில் தொழில் நுட்பம் மற்றும் காமிரா கையாள்கயில் மிகவும் முதிர்சியும் கலை ஞானமும் தெரிகிறது.நமது இன்றைய பெரிய திரை இயக்குனர்களின் வித்யாசமான பார்வைக்கு உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் சம கால நல் இலக்கிய கதைகள் பற்றிய ப்ரக்ஞையும் தான்.(சில இயக்குனர்கள் முழுக்க முழுக்க வேற்று மொழி படத்தின் ஜெராக்ஸ் களை மொழி மாற்றம் செய்து தருவது தான் சோகம்)

ஆண்டனி டிட்டோவின் God's Mistake என்ற குறும்படம் மிகவும் childish ஆக இருந்தது. தலைபாகை கட்டிக் கொண்டு அச்சிட்ட புத்தகத்தைப் பார்த்துப் படிக்கும் அச்சு பிச்சுதனமான  கடவுளும் அவரின் சிறுபிள்ளை தனமான பேச்சும் நகைப்பை தான் தருகிறது.த்ரேதாயுக கடவுள் வடிவவாய் இருக்குமோ? எதிரிடயாக நவின யுவன் கணிணி யுடன் கேள்விக்கனைகள் தொடுப்பது  மாதிரியாக காட்சி அமைத்திருப்பதன் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை.கடவுள் பழைய தலை முறை கைகாட்டுகாரர்களின் கற்பனை என சொல்ல வந்தாலும், MESSAGE சொல்லீயாக வேறு காட்டப்பட்டுள்ளார்.நாடக பாணியில் உள்ள சொல்லாடல்.கடவுள் எல்லோரயும் தீர்காயுசுடன் படைக்கிறார். மனிதன் தான் தன் தவறால் இறந்து விடுகிறான்.
இதை இப்படி சொல்லி இருந்தால்--
கடவுள் எழுதும் கதைக்கு மனிதன் தான்  முடிவு எடுத்து Climax- அய் எழுதுகிறான்.தலைபா கட்டுக்குப் பதிலாக அகோரி மாதிரியான சாமியாட்டம் வைத்திருக்கலாம்.

இளங்கோவனின் பேயவது பிசாசாவது, neither a thriller nor a comedy.பேய்க்கு கற்பனை வளம் இல்லை ஒரே மாதிரித்தான் சிந்திக்கும் என்பதை விளக்கியே தீருனேன் என்று இயக்குனர் கங்கணம் கட்டி கொண்ட மாதிரி பேய்களை சித்தரித்து இருப்பது ,புரிதல் காரணத்தாலா இல்லை பயங்காட்டும்  நோக்கிலா என்று விளங்கவில்லை.இறுதியில் இரண்டு பேய்களும் சிக்கனத்தை கருத்தில் கொண்டு old costume ல் வந்து இது காமெடிகதை horror movie இல்லை என்று சொல்வது மிகவும் ரசிக்கும்படி இருந்தது..போட்டோகிராபி யால் பார்வையாளன் அலுப்பில் இருந்து காக்க படுகிறான்.
இடைவெளி என்ற முருக ப்ரகாஷின் குறும்படம் நடுவர்களின் பாஷ்யத்தால் அதாவது விரிவுரையால் விளங்கியது.அதாவது முதல் காட்சியில் வரும் ஆண் பாத்திரமும் பின்னர் காரோட்டி வந்து, கதை சொல்லும் நீதி இதுதான் என்று நீள வசனம் பேசுவதும் ஒருவர் தான் என்பது. முதல் காட்சியில் வரும் ஆண் பாத்திரம் கலங்காலாகி காரோட்டியாவது கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடை இயக்குனரால் போடப்பட்ட பாலம்.இந்த இடை வெளியைத்தான் கதை title ஆக்கி இருப்பாரோ.
படித்தவன் எல்லாம் ஜெயிப்பதில்லை.out standing knowledge உள்ளவனுக்குத் தான் இன்றைக்கு market.இது கதையின் செய்தியாய் இருந்திருக்கலாம். கிழ் தட்டு கதாநாயகர்களின் பரிதபா நிலை கண்டு இரங்கும் கதாநாயகிகள் வியாபார நோக்கில் எடுக்கப்படும் திரைபடங்களின் அஸ்திவாரங்கள்.
அப்பா படம் சரவணாவின் படைப்பு. இது போன்ற தீம் நிறைய பேர் நிறைய ஃப்பார்முலாக்கள் வழியாக தங்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.
மாடு கத்துகிறது-கார் நுழைகிறது-குறுந்தாடி இளை ஞன் காரில்- பிரமாதமாய் ஆரம்பித்து புஸ்வானமாகிவிடுகிறது.இது அப்பா point of view விலும் இல்லை அம்மா,point of view
விலும் இல்லை; மகன் point of view  விலும் இல்லை.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இதன் பதில் குடும்பத்தோடு குடும்பமாய் இரு.இது மாதிரியான நிலை 15,20 வருடங்களுக்கு முன் தூபாய் போன்வர்களுக்கு பொறுந்தும்.இன்றைக்கு குடும்பத்தில் உள்ள  அனைவரையும் மகன்கள் அழைத்துக் கொள்கிறார்கள் குறிப்பாய் பேறு காலங்களில்
 ஆனலும் இந்த இளம் இயக்குனர்களின் திறன் கண்டிப்பாய் எதிர் காலங்களில் மிளிறும்.

புதன், 5 அக்டோபர், 2011

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை முரண் இதில் மட்டுமல்ல இன்னும் நிறையவே உண்டு. இரண்டு மாறுபட்ட முகங்களின், எதிர்பாராத சந்திப்பு; எதேச்சயாய் நிகழ்ந்த அது அந்த இருவரின் வாழ்கையிலும் அவர்கள் விரும்பாத பெரும் மாற்றத்தை குருரமாய் ஏற்படுத்திவிடுவதுடன், சீர் செய்ய இயலா இழப்பில் அவர்களை ஆழ்த்தி விட்டு நகர்ந்துவிடுகிறது. இது முரண் படத்தின் மைய புள்ளியாய் சொல்லலாம். இந்த கிருஷ்ணனுக்கு (நந்தா-கிருஷ்ணனின் வேறு நாமம்) (தே)காரோட்டியபடி அர்ஜுன் செய்யும் உபதேசமும் அதன் பின் விளைவும் முரண் கதையாய் விரிந்திருக்கிறது. contradiction களின்Conflict . ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் strangers on the train படத்தை நினவுருத்துகிறது கதையும், plot ம். ராஜன் மாதவ் இயக்கத்தில் சுமா பட்டாச்சாரியா,ஹரி பிரியா.நிக்கிதா,மெட்டி ஒலி நிலிமா, இவர்களுடன் சேரன், ப்ரசன்னா,ஜெய பிரகாஷ், போத்தன் நடித்த இந்த படத்தில் ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ளது.. இரண்டு முரண் பட்ட பாத்திரங்கள் ஒரு விபத்தின் காரணத்தால்ஒரே ஊர்தியில் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.இந்த எதிர்பாரா விபத்தால் நிறைய விபத்துக்கள் எதிர் பார்த்து நிகழ்த்தப் படுகிறது.பலி மூன்று உயிர்கள் முதலில் விளையாட்டுப் பிள்ளையாய் அர்ஜுன் அறிமுகமாகிறார்.மாடியிலிருந்து நீச்சல் குளத்தில் குதிக்கும்,நடு ரோட்டில் எதிர் திசைகளில் விரையும் இரண்டு பஸ்கள் மத்தியில் புத்திசாலிதனத்தை அதிஷ்டத்தில் இருந்து வேறு படுத்திப் பார்க்கும் ஒரு சைக்கோ பாத்திரமாய் தோன்றி பின் மாங்காய் திருடும் சின்ன சின்ன தப்புகள் செய்யும் Adventerous Hero மாதிரி மாறி பின், நட்புக்காக அடிதடியில் இறங்கும் முரட்டு நண்பனாய் Image Building செய்து கொண்டு,பின்னர் அவர் சிலந்தியாய் வலையை பிண்ணுவதை பார்க்கையில் அச்சமாய் இருக்கிகிறது.அர்ஜுன் கோர முகம் மெல்ல மெல்ல வெளிப்படும் போது தான் அவன் ஒரு perverted Pshyco என்பது நமக்கு நிதர்சனமாகிறது.wild Cat in Tracksuit.அனாலும் இறுதியில் தான் தெரிகிறது அது Cat அல்ல ரத்த வெறி கொண்டTiger என்று.கருணை வடிவான தன் தந்தையை காமுகனாய் Paint செய்ய வல்லவர். .ப்ரசன்னா ரொம்பவும் கஷுவலாய் வந்து.பாத்திரப்படைப்புக்கு புது மெருகேற்றி உள்ளார்.கதையை அடுத்த கட்டத்துக்கு தன் இஷ்ட்டப்படி நகர்த்த இவர் விரும்பிகிறார். விரும்பியது அல்லாமல் செய்யவும் செய்து காட்டுகிறார்.மூர்க்கமாய் இல்லாமல்,.mental and physical exerssion இல்லாமல் முக்கனாங்க் கயிற்றை பற்றி செல்வது மாதிரி அசால்டாய் காய்களை நகர்த்தி தான் விரும்பியதை செய்து முடிக்கிறார்.அல்லது செய்விக்கிறார்.இந்த சீனில் சண்டை வரும் சார் என்பதும், இதை எப்படி முடிக்க வேண்டும் என்பதும் தனக்குத் தெரியும் என்று அர்ஜுன் சொல்வதன் மூலம், தன் வாழ்க்கை கதையை தீர்மானிப்பது அல்லது எழுதுவது தான் தானென்று உறுதியாய் இருப்பதுதெரிகிறது; அது தான் இந்த பாத்திர படைப்பின் தனித்துவம்.ப்ரசன்னா நடிப்பு வார்த்தைக்குள் சிக்கா சூப்பர் காவியம். Law abiding middle class பாத்திரம் சேரனுக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை அநீதிகளை கண்டிக்கும் ஜனநாயகவாதி.விளம்பரங்கள் தரும் Promise களை நம்பும் மத்திய வர்க்கம். sales girls மீது அணுதாபிக்கும் அப்பாவி.risk எடுத்து அதிஷ்டத்தை சோதிக்க விரும்பா அசடு அல்லது முட்டாள்..தன்னை அறியாமல் இவர் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்கிறார்.Lift கேட்ட கிருஷ்னனுக்கு காத்திருப்பது கீதை மட்டுமல்ல pistol with plan.இவருக்கு அனிச்சையாய் சம்பவித்த லாவண்யா காதலும் முதல் மனைவிக்கு நிகழ்ந்த மாதிரியான ஒரு விபத்தே.இவை முற்றிலும் நந்தா விரும்பி ஏற்படுத்தி கொண்டதல்ல.மத்திமர் வார்த்தையில் சொல்வதானால்- இது கடவுள் சித்தம்.நந்தா அவர் இச்சையை மிறி சிலந்தியால் இழுத்துச் செல்லப் படுகிறார்.கற்பனையில் கூட ஒரு உயிர்க்கும் சேதம் இழைக்க விரும்பாத மென்மையான இவரை ஒரு கொலை செய்ய mentaly prepare ஆக்குகிறான் அர்ஜுன். சேரனின் அமைதியான நடிப்பு Excelent.His acting justified the climax.இறுதி கட்டத்தில் சினிமாக்கள் இப்படித்தான் முடியும் என்கிற எண்ணம் தோன்றாமைக்குக் காரணம் சேரனின் நடிப்புத்தான். இந்த முரண்பட்ட இருவர்களின் வாழ்க்கை போர்தான் படம். இயக்குனரின் கை வண்ணம் படம் முழுக்கத் தெரிகிறது. அனைத்து பாத்திரங்களின் inner persanality ஐ அழுத்தமாய் மட்டுமின்றி ஆழமாயும் காட்டி உள்ளார்.நந்தா-அர்ஜுன் மட்டுமல்லாமல்,ஏனைய Characters emotional journey and its susequential consequences கள் அற்புதமாய் காட்டப்பட்டுள்ளது. இந்து -தந்தையை பழி வாங்க கள்ளக் காதலை உருவாக்கிக் கொண்டவள் லிண்டா-தாயின் அழிந்து போன கனவை மெய்பிக்கும் வெறியில் வெந்து போனவள் லாவண்யா -self pittying, அண்ட நிழல் தேடும் ஆத்மா. தேவராஜன் -இவரின் உலகம் அன்பாலும் கருணையாலும் ஆனது. மகனுக்கு உதவா ஆலமரமாய் தான் இருப்பதை சட்டை செய்தவரில்லை. character அறிமுக காட்சிகள் -அவர்களின் உள் முகங்களை வலிமையாய் Potrait செய்யும் விதத்தில் உள்ளது. இயக்குனர் Note this point என எதையும் அடிக் கோடிட்டுக் காட்டாமல் கதை சொல்லிக் கொண்டு போவது பார்வையாளனுக்கு புது அணுபவம். அவசியம் இல்லாத காட்சிகள் இந்த படத்தில் எதுவும் இல்லை.எல்லாம் Co-related. மிக வலிமையான திரை கதை.Example for Script Writing. சாமர்த்தியமான Editing படத்துக்கு சுவாசமாய் உள்ளது. ரசிக்கும் விதத்தில் சாஜன் மாதவ்-ன் இசை.அழகியலை படம் பிடித்த மாதிரி காமிரா வண்னத்துப் பூச்சியாய் துள்ளுகிறது.பத்மேஷ் சினிமோட்டோகிராப். கொலை செய்யும்துணிச்சல் இல்லாத நந்தா. துப்பாக்கியை தூக்கி எறிய கடற்கரைக்கு போகிறான்.அங்கே இரண்டு மன நிலை."என்னால் கொலை செய்ய முடியாது " என்று சொல்ல,நந்தா போனில் அர்ஜுனை அழைக்கிறார்.விஷயத்தை கேட்ட அர்ஜுன் நந்தாவிடம் "நீங்கள் எங்கே இருக்கிரிர்கள்" என் கேட்கிறான். நந்தா பதிலுக்கு,"நீங்கள் எங்கே இருக்கிரிர்கள்" என் கேட்கிறான். அடுத்த காட்சியில் நந்தா ஒரு மாலுக்குள் நுழைவதை முதல் தளத்தில் இருந்தபடி, அர்ஜுன் பார்க்கிறான்.அடுத்த காட்சி. எஸ்கலேட்டரில் நந்தா Frame-க்கு அடியில் இருந்து மேல் வருகிறான். இப்படி பல காட்சிகள். இயக்குநர் யார் சொல் பேச்சும் கேட்காதவர் மாதிரி தெரிகிறது. சேரன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.குடைக்குள் மழை மாதிரி ஒரு நல்ல படம் தயாரித்ததற்கு மட்டுமின்றி, இயக்குநருக்கு இவ்வளவு சுதந்திரம் தந்ததற்க்கும் தான்..! படத்தின் message என்ன என்றால்-- விபத்துக்கள் இயற்கை சம்பவம் என்று நம்புகிறவன் முட்டாள் அதை சம்பவித்து ஆதாயம் பெருபவன் அறிவாளி - இது அர்ஜுன் சொல்லும் சித்தாந்தம்.அனால் இதன் முலம் நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை அந்நியனிடம் அகத்தை திறக்காதே-ஏனென்றால் .பாம்புகள் புற்றில் மட்டுமல்ல காரிலும் வாழும்..!