Follow by Email

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
பரத நாட்டியத்திற்கு தன் வாழ்கையை அர்பணித்து கொண்டவர்கள் என்றால் அதில் முதல் இடத்தில் வருபவர்கள்-
பாலசரஸ்வதி சமிபத்தில் மறைந்த சாந்தா ராவ், ருக்மிணி தேவி, மிருணாளினி சாராபாய், சந்திரலேகா, போன்றவர்களுடன் இன்றைய தலைமுறையை சார்ந்த பத்மாசுப்ரமனியம் அவர்களும் ஆவார்கள்
தஞ்சையை ஆண்ட மகாராஜா துலாஜாவின் (1763-1783)அவை குறிப்புகளில்.பாலசரஸ்வதி அவர்களின் முன்னோற்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன இவர் காலத்தில்தான் மகாதேவ அன்னாவி என்ற நட்டுவநார் மகாராஜாவின் சொந்த ஊரில் இருந்து தருவிக்கப்படுகிறார்.அன்னாவியின்பங்களிப்பு பற்றி சிறப்பாக எத்வும் சொல்லப்படவில்லை. ஆனால் இவரின் சகோதரரின் பேரர்கள்தான் பின்நாட்களில் த ஞ்சை நால்வர்கள் என் அழைக்கப்பட்ட, சின்னையா, பொன்னையா,சிவனந்தம் மற்றும் வடிவேலு என்பவர்கள்.
இளவயதில் இருந்தே இவ்ருக்கு நாட்டியத்தின் மீதும் கடவுளின் மீதும் மிகவும் பற்று இருந்தது.ஆரம்ப நாட்களில் இவர் தாயார் ஜெயம்மளூடனும் சகோதரன் சீனிவாசனுடனும் சென்னை ஜார்ஜ்டவுன் யானை கவுனியில் ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்தார். கீழ் பகுதியில் வீட்டின் உரிமையாளர் இருந்தார்.அவரது போர்ஷனில் ஒரு கிருஷ்னர் ஓவியம் இருந்தது.(tanjore painting) தன்னை ந ன்கு   அலங்கரித்துக் கொண்டு பாலசரஸ்வதி அவர்கள் பாடி ஆடுவார்களாம். பின் நாட்களில் இதை பற்றி நினைவு கூறும்   சமயம்
சித்திரமாய் சலனமின்றி இருக்கும் கிருஷ்ணரை தான் விழிக்க செய்யவே ஆடியதாய் சொல்லி உள்ளார்.
மயிலை கௌரியம்மளும்,கண்டப்ப பிள்ளையும் இவருக்கு நாட்டியம் கற்று தந்தவர்கள்.இவரின் வளர்ச்சிக்கு வீணைதனம் அம்மாளின் பங்கும் குறிப்பிடதக்கது.பால சரஸ்வதி அவர்கள் நடனமாடத்துவ்ங்கிய நாட்களீல் வீணைதனம் அம்மாளின் பார்வை குறைவு அதிகமாகி விட்டது.வீணைதனம் அம்மாள் அவ்ரின் நடனத்தை பார்க்க முடியாதது தான் சோகத்தின் உச்சம்.
பரதத்தை ஒரு யோக பயிற்சியாய் பார்த்தவர் இவர்.பாட்டையும் பரதத்தையும் பரம் பொருளுடன் தன்னை இணக்கும் பாலமாய் பார்த்தவ்ர். அதில் தான் பயனிப்பதை நன்கு அறிந்துணர்ந்தவர்.
சத்ய ஜித் ராய்  எடுத்த இவரை பற்றிய ஆவண படம் உலகின் அனைத்து அறிவு ஜிவிகளாலும் போற்றப்பட்டது.
இந்தியா தவிர மேல் நாட்டிலும் இவர் நடன வகுப்புக்கள் எடுத்துள்ளார்.ஏறத்தாழ 50 வருடங்கள் கலைக்கு சேவை செய்துள்ளார்


மறைந்த சாந்தா ராவை பற்றி நாடக வெளி ரெங்கராஜன் அவர்கள் எழுதியதில்
 சில பகுதி-- .
மங்களூரில் பிறந்து மகராஷ்டிரத்தில் வளர்ந்து தென் இந்திய நடனத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இளம் வயதிலேயே கேரளத்துக்கு வந்து  அங்கு மோகினியாட்டத்தையும், கதகளியையும் கற்று பிறகு தமிழ்நாட்டில் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியம் பயின்றவர் தன் இறுதி நாள் வரை நடனத்துக்காக வாழ்ந்து, வாழ்வீன் பெரும் பகுதியை கலை தேடலில் செலவிட்டார்.
உலகம் முழுவதும் சாந்தா ராவின் புகழ் பரவி அவருக்கு சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவை கிடைத்தன. இரும்பு மற்றும் பட்டின் கலவை, குமிழியிடும் நீர் மற்றும் சம்மட்டியின் ஓசை, கணிதத்தின் கச்சிதம் மற்றும் நாடகத்தின் ஆச்சரியம், உணர்ச்சியின் தீவிரம் மற்றும் அரூபத்தன்மை ஆகிய குணங்களை அவருடைய கலை கொண்டிருப்பதாக விமர்சகர்கள் கருதினர். குறிப்பாக, அவருடைய மோகினியாட்டம் மிகவும் தனித்துவத்துவம் வாய்ந்தது.. அவர் தன்னுடைய வீட்டை ஒரு கலைக்கூடம் போலவே வைத்திருந்தார். ஓவியங்கள், எழுத்துப் பிரதிகள், நடனப்பயிற்சி அரங்கம், பார்வையாளர்களுக்கான ஆடிட்டோரியம் என்று தன்னுடைய வீட்டை கலை தேடலுக்கு ஏற்றது போல் வடிவமைத்து இருந்தார்.
அவருடைய முழுவாழ்க்கையும் தனிமையிலும் சிந்தனையிலும் கழிந்தது.
பெங்களூரில்  டிசம்பர் 2007இல்  நடனக் கலைஞர் சாந்தா ராவ் மறைந்தார்.

 நன்றி:-நெட்டில் சுட்ட இந்த படங்களை எடுத்தவருக்கும்,வெளி ரெங்க ராஜனுக்கும்..

கருத்துகள் இல்லை: