கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,

கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,சுந்தர்.சியின் ஆக்கப் பூர்வ கமெண்ட், வித்யாசமான படைப்புக்கள் என்று 18-9-11 ல் ஒளிபரப்பான நாளைய இயக்குனரின் இந்த இரண்டாவது நிகழ்வு ஜனரஞ்சகமாயும், சுவாரஸ்யமாயும் இருந்தது ஸ்டீபனின் 1,4,3- ஒரு நிறைவுறா காதல் கதை..படத்தின் சிறப்பு சுருக்கமான script-ம்,அளவான வசனமும்தான்.டீச்சர்,வாத்தியாரின் நடிப்பு இயற்கையாய் சன்னமான தாளலயத்தில் சொல்லப்பட்டிருந்ததை நையாண்டி செய்வது மாதிரி இரைச்சலான பிண்னணி இசை.வாத்தியார் பேசியதே நாலு dialogue.அதில் இரண்டு முக்கியம் வாய்ந்தது,ஒன்று " நான் வேணும்னா parents ஐ அணுப்பி வைகட்டுமா," மற்றது டோக்கன் நம்பர்:1,4,3 என்றதும், "அது என்னைத்தான்".என்பதும். இவை இரண்டும் பிண்னணி இசை சத்தத்தில் காதில் விழாமல் படத்தை ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. தன் குறும்படத்தின் பெயரை பாரதி பாலா ஆரம்பத்தில் சொல்லவில்லை. படம் ஆரம்பித்ததும் புரிந்துவிடுகிறது.அவள் அழகி என்று.அது தான் அவள் பெயரும் என்று உணரும் போது நெஞ்சு கனக்கிறது.படத்தின் தலைப்பும் அதுதான் என முடிவில் தெரியும் போது நெருடல். பெண் கள் ஏமாற்றப்ப...