Follow by Email

வியாழன், 15 செப்டம்பர், 2011

மங்காத்தா என்ற ஆட்டம்..


திரிஷா,ஆண்ட்ரியா,அஞ்சலி.லட்சுமி ராய் மற்றும் மங்காத்தா
                                                               
                                           
                               இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாகமாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக தயரிக்கப்பட்டுள்ளது இது மாறி வரும் மக்கள் மன நிலையை காட்டுகிறது.
                              மதராச பட்டிணம், வம்சம், மைனா,தெய்வத் திருமகள், அங்காடித் தெரு,அழகர் சாமியின் குதிரை,தென் மேற்கு பருவ காற்று, போன்ற படங்கள் தமிழனின் ரசனை வளர்ச்சிக்கான அறிவிப்பு.சினிமாவிற்க்கு இந்த கதை, இந்த களன் உரியதா ரசிக்கப்படுமா? என்ற தயக்கங்கள் இன்று இல்லை.   எளிய சிறுகதை வடிவத்தில்,   மனித எண்ணங்களின் பதிவாய் சில படங்கள் வந்துள்ளது..தினமும் சந்திக்கும் அல்லது பார்த்த மனிதர்களின் பார்த்தறியா உலகம்.புதிரான தனி மனித அவலங்களும்ஆசைகளும், கனவுகளும்,கற்பனை செய்திராத வேறு உலகங்களும் செல்லுலாய்டில் சித்திரமாகின்றன..புதிய படைபாளிகளின் வித்யாசமான சிந்தனைகள்.தொழில் நுட்பம்,காமிரா கையாள்கையில்,நெறியாள்கையில் வித்யாசம்.கதை சொல்லும் முறையில் புதுமை, என்று பல துறைகளில் நூதன சிந்தனையாளர்கள் தடம் பதித்துக் கொண்டுள்ளனர்.
                                     Script writing  ,பாத்திர படைப்புகள்,மற்றும் திரைப் பட உள்ளடக்கங்களில் மாற்றம் நிகழ்ந்து உள்ளதா? பொதுவாக தமிழ் திரை உலக திரை கதைகள் செண்டிமென்டுகளால் பின்னாப் பட்டு இருக்கும்.அதில் நல்லவன், கெட்டவன் என இரண்டு பாத்திரங்களே வலம் வருவார்கள்.பின்னர் அதே செண்டிமென்டுகள் வித்யாசமான பாத்திரங்களுடன்-
 அதாவது, பண்ணயார் செல்வரங்கம் பிள்ளை மில் முதலாளி மோகன ரங்கமாக மாறி இருப்பார். நியாயம் கேட்கும் விவசாயி, போனஸ் கேட்க்கும் யூனியன் லீடராய் மறு அவதாரம் எடுத்து இருப்பான்.அவனின் நற்சிந்தனை நற் செயல்களால் பண்ணயார்/மில் முதலாளி மகள் ஈர்க்கப்பட்டு, அவனை விரட்டி விரட்டிகாதலித்து , பின் கண்ணீர் விட்டு ஏற்றுக் கொள்ளும் படி மன்றாடுவாள்.அப்பவை போலீஸ் பிடித்து சென்றதும் ஏற்கனவே அவள் ஃபாரின் லெக்கேஷனில் நாயகனுடன் கனவில் பாடிய டூயட் பாடலின்முதல் இரண்டடியை பாடி அவனை மண முடிப்பாள்.அம்மா ,தங்கை பாச ஸ்டாக் தீர்ந்ததும்,  நம்மவர்கள்பார்வை,மாமியார்,மருமகள்கள் மீது பட்டது. அது இன்றும் சீரியலாய் டீவீ வரை தொடர்கிறது.
                 ஜனங்கள் வித்யாசத்தை கேட்கிறார்கள் என, ஆர்.டி.ஒ. அழகப்பன், கண்டக்டர் கந்தசாமி, ஸ்டேஷன் மாஸ்டர் சாமினாதன்,வேன் டிரைவர் வேலாயுதம் என மாறு பட்ட character கள் இவர்கள் என்று தமிழ் திரை உலகத்தினர், இட்லி மாவை தோசை ஆக்கித் தந்தார்கள்.  எல்லா பாத்திரங்களும் ஒன்று நல்லவன் அல்லது தீமைகள் செய்கிற கெட்டவன்.கெட்டவனுக்கு துணையாக அடியாள் கூட்டம். நல்லவனும் வல்லவனுமாய் நாயகன்" maa meri pas hai.." என தனியாளாய் நிற்ப்பான்.
                           இந்த வில்லன்மார்களை ,வித்தியாசமாய் படைப்பதாய் சொல்லி கத்தி குத்து கார்மேகம் முதல் கார்கோடன் வரை காதளவோடிய கன்ன கிருதா,மல் ஜிப்பா,இடுப்பில் லுங்கி, பட்டை பெல்ட்,கத்தி சகிதம்,இவைதான் வில்லனுக்கு உரிய அடையாள இலக்கணங்கள் என காட்டினார்கள். இன்றும் காட்டிக் கொண்டுள்ளார்கள்.
                                      பெண் பாத்திரங்களும் இதை போலத்தான். அவளுகென்று மனம்,உணர்வு என்று எதுவும் கிடையாது.ஆண் நிழலை தேடி அண்டும் பேதைகளாய் இருப்பார்கள் அவள் கதாநாயகி என்றால் .உத்தமி. இழுத்து போர்த்திக் கொண்டு தாலியை கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஜாதி. வில்லி(vamp)என்றால்,  அரை குரை ஆடைகளுடன் மது வார்க்கும் காபிரே டான்ஸர்
                மொத்தத்தில் கதை மாந்தர்கள் சொல்லும் மெஸெஜ்- நல்லவன் வாழ்வான், அரக்கன் அழிவான்.தாய் பாசம் ஜெயிக்கும். etc, etc.
                                                           
இந்த மேல் சொன்ன விஷயங்களில் இருந்து மாங்காத்தா எந்த அளவு மாறி இருக்கிறது..?
(அப்பாடி தரை வந்திடுச்சு)
                                                     மாங்காத்தாவை ஏன் அளவுகோலாய் எடுத்து ஆராய வேண்டும் என்றால் இது வெகு சமிபமாக வந்த படம்;அப்புறம் இதன் வெற்றிக்கு பாடுபட்டவர்கள்- அஜித்,அர்ஜுன்,ஜெயபிரகாஷ்,திரிஷா தவிர மற்ற கலைஞர்கள் அனைவரும் இருபத்தியைந்து வயதை சுற்றி உள்ளவர்கள்.
                      இதன் கதை முற்றிலும் மாறுபட்டது.சூதாட்டம் நமக்கு மகாபாரத கால பழசு. கிரிக்கெட் சூதாட்டம் -match fixing புதுசு.(C&D centre ல் ஓட,கதைக்கு ஒரு முன் குறிப்பு தேவை.).அதன் பிண்ணனியில் இயங்க்கும் அண்டர் வோர்ல்ட் தாதாக்கள்-சாதாரண மிடில் கிளாஸ் தோற்றத்தில், சட்டை பையில் பேனா வைத்திராத கவர்மென்ட் கிளார்க் மாதிரியான தோற்றத்தில் இருக்கும்  இவர்கள் கோடிகளில் வர்த்தக பரிவர்த்தனை செய்பவர்கள்.அரசு இயந்திரங்களை ஆட்டுவிப்பவர்கள்.' காட்சிக்கு எளியன் கடும் சொல் இலன்' என்றால் அது இவர்கள்தான்.இந்த வில்லன்கள் தமிழுக்கு மிக புதுசு.
இந்த தாதாக்களை சுத்தலில் விடும், நம் சட்ட காவலர்கள் நாம் சந்திக்கும் புதிய பாத்திரங்கள்.காவல் துறையை சார்ந்த இந்த அதிகாரிகள்,cyber crime செய்யும் hi-tech கொள்ளையர்கள்.மிகவும் சாமர்த்தியமாய்அண்டர் வோர்ல்ட் தாதாக்களையும் மக்களையும் ஏமாற்றும் இவர்கள் புத்திசாலிகள். இவர்களுக்கு இணையாக fast perks தேடும் நான்கு இளைஞர்கள். இந்த கூட்டணியின் core பிரேம்ஜீ.இவர்.தீட்டிய மரத்தில் கூர் பார்த்தால் பரவயில்லை;அதை கூறு போட்டு குளிர் காய நினைக்கும் hi -fi Soft wear Engineer& efficient hacker .கனவுகளை சுமந்துகொண்டு , கை நிறைய இல்லை இல்லை கோணிப் பை நிறைய பணம் ஈட்ட விரும்பும் கம்ப்யுட்டர்savy. ப்ரேம்ஜீ வித்யாசமாய் தான் இளிக்கிரார்.இல்லை இருக்கிரார்.எத்தனை நாள் தான் பல்லாக்கு தூக்குவது என்று நாட்களை எண்ணும் வைபவ்க்கும் நல்ல பாத்திரம் தரப்பட்டுள்ளது இவர்களின் இந்த கூட்டணி கூடி திட்டமிடுவது, மஹத்தின் பாரில்.
                                கதை மாந்தர்கள் அனைவரும் பணத்தாசை பிடித்த பேராசை காரர்கள்.குறுக்கு வழியில் பணம் பண்ண விழைபவர்கள்.இதில் ஒரு போலிஸ் கூட நாணயஸ்தாராய் இல்லாதது சோகம்.( சுப்பு இரண்டு முறையும் இறந்தவர்)
                         அப்பாவி திரிஷாவும் போலீஸ் அதிகாரி சுப்புவும் தான் நல்லவர்கள்.
                                       இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட மிக கொடுரமான வில்லன் அஜித்.பணவாசனையை அணுபவிக்கும் ,  அளவில்லாமல் மதுவை சுவைக்கும்,பெண்களை தேடும், குடிகார மனிதாபிமானம் இல்லாமல் காசுக்காக காதலிக்கும், பஞ்சமா பாதகங்கள் செய்யத்துணிந்த, அரக்கன் இந்த விநாயக மகாதேவன். மணக்க போகும் காதலியின் தந்தையை நன்கு அறிந்தவனை , ஓடும் காரில் இருந்து ஆக்ரோஷமாய் தள்ளி விடும்  இவனுக்கு தாரக மந்திரம் டப்பு..salt &pepper style-ல் அஜித் ந்டிப்பு கொஞ்சம் ஓவர் என்றாலும் நன்றாக உள்ளது.இது பிரபல ஹிரோக்கள் செய்ய யோசிக்கும் பாத்திரம்( சத்ய ராஜ் செய்யக் கூடியவர்.இமேஜ் பற்றி கவலைபடாதவர்)
கதையின் பின் பாதி ஒரே நாளில் நடந்த சம்பவம் போன்ற தோற்றத்தை தருகிறது.
                         ஓரே ஃப்ரேமில் அஜீத் படிப்பது கம்ப்யூட்டர் பார்ப்பது,திட்டமிடுவது புகைப்பது -technical excellence and director longing towards brevity. காமிரா சக்தி சரவணன்
கார் ரேஸிங்க் சில சமயங்களில் அச்சத்தை தருகிறது.பைக் சேஸ்ங்க் அஜீத் அவர்கள் டூப் இல்லாது செய்ததாய் சொல்கிறாய்கள்.காரை மிகமிக வேகமாய் ரிவர்ஸ் கியரில் எடுப்பதுவும் அஜீத் என்று சொல்கிறார்கள். பரவசம் தரும் இந்த காட்சிகள் பயத்தயும் தருகிறது.
                      திரிஷா, ஆண்டிரியா,அஞ்சலி சாதரமாண பெண் முகங்கள்.லட்சுமி ராய் வித்யாசப்படவில்லை. 'மானோகரா காலத்து' பழைய வில்லி. கத்தி போய் கை துப்பக்கி வந்துள்ளது
            இசை பூம் பொழில் ஒன்றில் பனி விழும் பௌர்னமி இரவில் ஏகாந்தமாய் மிலிட்டிரி ரம்முடன் நடப்பது போல் உள்ளது.
                                    screen play-ல் இன்னும் நகாசு வேலை செய்திருக்கலாம்
 நல்லவன் வாழ்வான் என்பது பொய் வல்லவன் வாழ்வான் என்பது நிஜம் என்று கதை சுவாரஸ்யமாய் விரிகிறது
வெங்கட் பிரபு நன்றாக தெரிகிறார்.
Angry young man-கள் போய் Avarice new men வந்து கொண்டிருக்கிறார்கள்..!valaicharam.com

திங்கள், 12 செப்டம்பர், 2011

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....


                                    மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர்-சீசன்-3 ,  புதிய விமர்சக தேர்வுக் குழுவுடன் 11-9-2011 அன்று ஒளிபரப்பாகியது.
சமிப காலமாக குறும்படங்கள் வெகு ஜன வரவேற்பை பெற்றதோடல்லாமல், ஜன ரஞ்சக பிரபல வார மாதா இதழ்கள் மட்டுமின்றி பிரபல தொலைகட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது.இது ஒரு நல்ல முன்னேற்றம்.குறும்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் புதுமையாய் பரிட்ஷார்த்தமாய் தனி மனித எண்ணங்க்களை விஷுவலாய் பதிவு செய்யும் ஒரு களமாய் உள்ளது.

        .இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாக மாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக படமக்கப்பட்டுள்ளது இது ஒரு ஆரோக்கிய சுழல் உருவாகி வருதலை காட்டுகிறது.
 குறிப்பாக-மதராச பட்டிணம், வம்சம், மைனா போன்ற படங்கள் தமிழில் வருமா என ஏங்கிய நாட்கள் போய்விட்டது.
                    இந்த அசுர வேகத்தின் வெளிப்பாடே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குறும்படங்கள்.குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகிய நாளைய இயக்குநர் இரண்டு சிசன்களூம், பாராட்டுதலுக்கு உரியது மதன் அவர்களுடன் பிரதாப் போத்தன் அவர்களும்வித,விதமான புதுமை சுற்றுகளூடன் துல்லிய விமர்சன கணிப்புகளுடன், இளம் இயக்குனர்களை கை பிடித்து புதிய உயரங்களுக்கு அழைத்து சென்றார்கள் மதன் அவர்களின் பன் முகம் உலகறிந்தது.அவரின் சினிமா ஞானம் விரிந்து பரந்தது.
                                          இவர்களை போலவே தான் புதிய ஜட்ஜஸ்-பாக்கிய ராஜ் அவர்களும் சுந்தர்-C அவர்களும்; இவர்கள் குறும்படங்களுக்கு அணி சேர்க்கும் கூட்டணிதான்.இது முதல் நாளில் இவர்கள் செய்த விமரிசனத்தில்யே தெரிகிறது.
11-9-11 அன்று ஒளிபரப்பகிய நான்கு குறும்படங்களும் பாரட்டுதலுக்கு உரியவை.
                         பிரசாந்த் இயக்கிய "நைஜிரியன் காதல்" படத்தின் அடித் தாளம் சாரி அடித்தளம் -- லோக்கல் பார்ட்டீயை நைஜிரியன் என்று எண்ணி ஏமாந்த ஜொள்ளுப் பாட்டி, சாரி பார்ட்டிதான்
                    எளிய கதை, சிரமம் இல்லாத தயாரிப்பு.கம்மி வசனம் தான் இதன் ஹை லைட்.
                             அடுத்தது நந்தாவின் படைப்பான உயிர்.இதன் நாயகன் "பைக்". அதீத கற்பனை.நடிகர் களின் அசால்டான நடிப்பு பிரமாதம்.உச்ச கட்டம் கதையின் மெஸ்ஸேஜ் கம் கருவை சொல்லப் போகிறோம் என்கிற பில்டப் கொ ஞ்சமும் இல்லாது இயல்பாய் நடித்த மெகானிக் அவர்கள்.
அடுத்தது--
     முதல் பரிசு பெற்ற நிகிலனின் 'புதிர்" நிஜத்தில் இது பஸில் டைப் தான்.
ஆரம்பித்த இடதிலேயே முடியும் இந்த படம் சுஜாதா அவர்கள் குமுதம் வார இதழில் முதன் முதலாய் எழுதிய "இது கதையின் ஆரம்பம் அல்ல.." என்ற சிறுகதையை நினைவு படுத்தும் விதத்தில் புதிய முயற்சியாய் இருந்தது. கதை சொன்னதில் கிளாரிட்டி கொஞ்சம் குறைவு.விஷ்வல் அம்சம் இல்லை. இது ஒரு நல்ல ரேடியோ நாடகம். அதாவது, கேட்டாலே கதை புரிந்துவிடும். கதைக்கு அடி நாதமே செல் ஃபோன் உரையாடல் தான்.பாரட்டத்தக்க புதிய முயற்சி.
அடுத்தது சீனிவாசன் இயக்கிய "செல்வி".குழப்பம் இல்லாது கதையை நேரிடையாய் சொன்ன படம்.நடிக நடிகையரின் இயல்பான நடிப்பு அளவான வசனம் படத்தில் + பாயிண்ட். இயக்குனரை நிறைய இடத்தில் பாராட்டலாம்.நாயகன், செல்வி சந்திப்பு முதன் முதலாய் நிகழும் சமயம் காட்சி சிகப்பு கலரில் உள்ளது.ரெய்டு நடக்க போவதை படிப்படியாய் உணரசெய்வது.பரிசளித்த திருக்குறள் ஜீப்பில் இருந்து விழுவது.இந்த குறுபடத்தை பார்க்கும் போது,கமலின் நாயகன் பட நினைவு ஏனோ வருகிறது.உயர் தேர்வுக்கு தயாராகும் நாயகனுக்கு பழைய சிக் மெண்ட் ஃப்ராய்ட் மற்றும் ÍQ பற்றி பாடம் எடுப்பது லாஜிக்கான விஷயம் இல்லை.

இப்படி முடித்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது...??
படம் முழுவதும் செல்வியின் முகம் காட்டப்படவில்லை.குரல் தான்அடையாளம் .செல்வியின் நல்ல teaching- ஐ பாரட்டும் விததில் கதாநாயகன் அவளுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைபரிசளிக்கிறான்., செல்வியின் வற்புறுத்தல் காரணமாக அதன் முன் பக்கத்தில் எதோ எழுதி, பரிசளிக்கிறான்.ரெய்டு நடக்கிறது. மகளீர் போலிசார் வரிசையாய் பெண்களை போலிஸ் வானில் ஏற்றுகிறார்கள்.அதில் இறுதியாய் ஒருத்தி எறுகிறாள். அவள் கை நழுவி ஒரு புத்தகம் கீழ் விழுகிறது.
அந்த புத்தகம் க்ளோசப்பில் காட்டப்படுகிறது. அது திருக்குறள் அதன் அட்டை மீது- "உடுக்கை இழந்தவன் கை போல.." என்று எழுதப்பட்டது ஃபோகஸ் செய்யப்படுவதுடன் படம் முடிகிறது.
உடுக்கை என்றால் உடை பெண்ணின் மானம் காக்கும் உடை.அதை போல் உதவ முடியா நாயக நண்பன்.
இது எப்படி இருக்கு..?