Follow by Email

வெள்ளி, 4 நவம்பர், 2011

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்


கற்பனை வளம் இல்லாத படைப்புகள்
 சமிபமாய் வரும் நாளய இயக்குனர்களில் ஒளிபரப்பாகும் குறும் படங்களின் ஆரம்பத்திலேயே கதை போக்கும் சொல்லப் போகும் இதோபதேசமும் தெளிவாய் தெரிந்துவிடுகிறது. சிலரின் படைப்புகள் குழப்பமாயும் தெளிவின்மயுமாய் இருக்கிறது.பொதுவில் தொழில் நுட்பம் மற்றும் காமிரா கையாள்கயில் மிகவும் முதிர்சியும் கலை ஞானமும் தெரிகிறது.நமது இன்றைய பெரிய திரை இயக்குனர்களின் வித்யாசமான பார்வைக்கு உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் சம கால நல் இலக்கிய கதைகள் பற்றிய ப்ரக்ஞையும் தான்.(சில இயக்குனர்கள் முழுக்க முழுக்க வேற்று மொழி படத்தின் ஜெராக்ஸ் களை மொழி மாற்றம் செய்து தருவது தான் சோகம்)

ஆண்டனி டிட்டோவின் God's Mistake என்ற குறும்படம் மிகவும் childish ஆக இருந்தது. தலைபாகை கட்டிக் கொண்டு அச்சிட்ட புத்தகத்தைப் பார்த்துப் படிக்கும் அச்சு பிச்சுதனமான  கடவுளும் அவரின் சிறுபிள்ளை தனமான பேச்சும் நகைப்பை தான் தருகிறது.த்ரேதாயுக கடவுள் வடிவவாய் இருக்குமோ? எதிரிடயாக நவின யுவன் கணிணி யுடன் கேள்விக்கனைகள் தொடுப்பது  மாதிரியாக காட்சி அமைத்திருப்பதன் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை.கடவுள் பழைய தலை முறை கைகாட்டுகாரர்களின் கற்பனை என சொல்ல வந்தாலும், MESSAGE சொல்லீயாக வேறு காட்டப்பட்டுள்ளார்.நாடக பாணியில் உள்ள சொல்லாடல்.கடவுள் எல்லோரயும் தீர்காயுசுடன் படைக்கிறார். மனிதன் தான் தன் தவறால் இறந்து விடுகிறான்.
இதை இப்படி சொல்லி இருந்தால்--
கடவுள் எழுதும் கதைக்கு மனிதன் தான்  முடிவு எடுத்து Climax- அய் எழுதுகிறான்.தலைபா கட்டுக்குப் பதிலாக அகோரி மாதிரியான சாமியாட்டம் வைத்திருக்கலாம்.

இளங்கோவனின் பேயவது பிசாசாவது, neither a thriller nor a comedy.பேய்க்கு கற்பனை வளம் இல்லை ஒரே மாதிரித்தான் சிந்திக்கும் என்பதை விளக்கியே தீருனேன் என்று இயக்குனர் கங்கணம் கட்டி கொண்ட மாதிரி பேய்களை சித்தரித்து இருப்பது ,புரிதல் காரணத்தாலா இல்லை பயங்காட்டும்  நோக்கிலா என்று விளங்கவில்லை.இறுதியில் இரண்டு பேய்களும் சிக்கனத்தை கருத்தில் கொண்டு old costume ல் வந்து இது காமெடிகதை horror movie இல்லை என்று சொல்வது மிகவும் ரசிக்கும்படி இருந்தது..போட்டோகிராபி யால் பார்வையாளன் அலுப்பில் இருந்து காக்க படுகிறான்.
இடைவெளி என்ற முருக ப்ரகாஷின் குறும்படம் நடுவர்களின் பாஷ்யத்தால் அதாவது விரிவுரையால் விளங்கியது.அதாவது முதல் காட்சியில் வரும் ஆண் பாத்திரமும் பின்னர் காரோட்டி வந்து, கதை சொல்லும் நீதி இதுதான் என்று நீள வசனம் பேசுவதும் ஒருவர் தான் என்பது. முதல் காட்சியில் வரும் ஆண் பாத்திரம் கலங்காலாகி காரோட்டியாவது கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடை இயக்குனரால் போடப்பட்ட பாலம்.இந்த இடை வெளியைத்தான் கதை title ஆக்கி இருப்பாரோ.
படித்தவன் எல்லாம் ஜெயிப்பதில்லை.out standing knowledge உள்ளவனுக்குத் தான் இன்றைக்கு market.இது கதையின் செய்தியாய் இருந்திருக்கலாம். கிழ் தட்டு கதாநாயகர்களின் பரிதபா நிலை கண்டு இரங்கும் கதாநாயகிகள் வியாபார நோக்கில் எடுக்கப்படும் திரைபடங்களின் அஸ்திவாரங்கள்.
அப்பா படம் சரவணாவின் படைப்பு. இது போன்ற தீம் நிறைய பேர் நிறைய ஃப்பார்முலாக்கள் வழியாக தங்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.
மாடு கத்துகிறது-கார் நுழைகிறது-குறுந்தாடி இளை ஞன் காரில்- பிரமாதமாய் ஆரம்பித்து புஸ்வானமாகிவிடுகிறது.இது அப்பா point of view விலும் இல்லை அம்மா,point of view
விலும் இல்லை; மகன் point of view  விலும் இல்லை.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இதன் பதில் குடும்பத்தோடு குடும்பமாய் இரு.இது மாதிரியான நிலை 15,20 வருடங்களுக்கு முன் தூபாய் போன்வர்களுக்கு பொறுந்தும்.இன்றைக்கு குடும்பத்தில் உள்ள  அனைவரையும் மகன்கள் அழைத்துக் கொள்கிறார்கள் குறிப்பாய் பேறு காலங்களில்
 ஆனலும் இந்த இளம் இயக்குனர்களின் திறன் கண்டிப்பாய் எதிர் காலங்களில் மிளிறும்.

புதன், 5 அக்டோபர், 2011

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை முரண் இதில் மட்டுமல்ல இன்னும் நிறையவே உண்டு. இரண்டு மாறுபட்ட முகங்களின், எதிர்பாராத சந்திப்பு; எதேச்சயாய் நிகழ்ந்த அது அந்த இருவரின் வாழ்கையிலும் அவர்கள் விரும்பாத பெரும் மாற்றத்தை குருரமாய் ஏற்படுத்திவிடுவதுடன், சீர் செய்ய இயலா இழப்பில் அவர்களை ஆழ்த்தி விட்டு நகர்ந்துவிடுகிறது. இது முரண் படத்தின் மைய புள்ளியாய் சொல்லலாம். இந்த கிருஷ்ணனுக்கு (நந்தா-கிருஷ்ணனின் வேறு நாமம்) (தே)காரோட்டியபடி அர்ஜுன் செய்யும் உபதேசமும் அதன் பின் விளைவும் முரண் கதையாய் விரிந்திருக்கிறது. contradiction களின்Conflict . ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் strangers on the train படத்தை நினவுருத்துகிறது கதையும், plot ம். ராஜன் மாதவ் இயக்கத்தில் சுமா பட்டாச்சாரியா,ஹரி பிரியா.நிக்கிதா,மெட்டி ஒலி நிலிமா, இவர்களுடன் சேரன், ப்ரசன்னா,ஜெய பிரகாஷ், போத்தன் நடித்த இந்த படத்தில் ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ளது.. இரண்டு முரண் பட்ட பாத்திரங்கள் ஒரு விபத்தின் காரணத்தால்ஒரே ஊர்தியில் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.இந்த எதிர்பாரா விபத்தால் நிறைய விபத்துக்கள் எதிர் பார்த்து நிகழ்த்தப் படுகிறது.பலி மூன்று உயிர்கள் முதலில் விளையாட்டுப் பிள்ளையாய் அர்ஜுன் அறிமுகமாகிறார்.மாடியிலிருந்து நீச்சல் குளத்தில் குதிக்கும்,நடு ரோட்டில் எதிர் திசைகளில் விரையும் இரண்டு பஸ்கள் மத்தியில் புத்திசாலிதனத்தை அதிஷ்டத்தில் இருந்து வேறு படுத்திப் பார்க்கும் ஒரு சைக்கோ பாத்திரமாய் தோன்றி பின் மாங்காய் திருடும் சின்ன சின்ன தப்புகள் செய்யும் Adventerous Hero மாதிரி மாறி பின், நட்புக்காக அடிதடியில் இறங்கும் முரட்டு நண்பனாய் Image Building செய்து கொண்டு,பின்னர் அவர் சிலந்தியாய் வலையை பிண்ணுவதை பார்க்கையில் அச்சமாய் இருக்கிகிறது.அர்ஜுன் கோர முகம் மெல்ல மெல்ல வெளிப்படும் போது தான் அவன் ஒரு perverted Pshyco என்பது நமக்கு நிதர்சனமாகிறது.wild Cat in Tracksuit.அனாலும் இறுதியில் தான் தெரிகிறது அது Cat அல்ல ரத்த வெறி கொண்டTiger என்று.கருணை வடிவான தன் தந்தையை காமுகனாய் Paint செய்ய வல்லவர். .ப்ரசன்னா ரொம்பவும் கஷுவலாய் வந்து.பாத்திரப்படைப்புக்கு புது மெருகேற்றி உள்ளார்.கதையை அடுத்த கட்டத்துக்கு தன் இஷ்ட்டப்படி நகர்த்த இவர் விரும்பிகிறார். விரும்பியது அல்லாமல் செய்யவும் செய்து காட்டுகிறார்.மூர்க்கமாய் இல்லாமல்,.mental and physical exerssion இல்லாமல் முக்கனாங்க் கயிற்றை பற்றி செல்வது மாதிரி அசால்டாய் காய்களை நகர்த்தி தான் விரும்பியதை செய்து முடிக்கிறார்.அல்லது செய்விக்கிறார்.இந்த சீனில் சண்டை வரும் சார் என்பதும், இதை எப்படி முடிக்க வேண்டும் என்பதும் தனக்குத் தெரியும் என்று அர்ஜுன் சொல்வதன் மூலம், தன் வாழ்க்கை கதையை தீர்மானிப்பது அல்லது எழுதுவது தான் தானென்று உறுதியாய் இருப்பதுதெரிகிறது; அது தான் இந்த பாத்திர படைப்பின் தனித்துவம்.ப்ரசன்னா நடிப்பு வார்த்தைக்குள் சிக்கா சூப்பர் காவியம். Law abiding middle class பாத்திரம் சேரனுக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை அநீதிகளை கண்டிக்கும் ஜனநாயகவாதி.விளம்பரங்கள் தரும் Promise களை நம்பும் மத்திய வர்க்கம். sales girls மீது அணுதாபிக்கும் அப்பாவி.risk எடுத்து அதிஷ்டத்தை சோதிக்க விரும்பா அசடு அல்லது முட்டாள்..தன்னை அறியாமல் இவர் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்கிறார்.Lift கேட்ட கிருஷ்னனுக்கு காத்திருப்பது கீதை மட்டுமல்ல pistol with plan.இவருக்கு அனிச்சையாய் சம்பவித்த லாவண்யா காதலும் முதல் மனைவிக்கு நிகழ்ந்த மாதிரியான ஒரு விபத்தே.இவை முற்றிலும் நந்தா விரும்பி ஏற்படுத்தி கொண்டதல்ல.மத்திமர் வார்த்தையில் சொல்வதானால்- இது கடவுள் சித்தம்.நந்தா அவர் இச்சையை மிறி சிலந்தியால் இழுத்துச் செல்லப் படுகிறார்.கற்பனையில் கூட ஒரு உயிர்க்கும் சேதம் இழைக்க விரும்பாத மென்மையான இவரை ஒரு கொலை செய்ய mentaly prepare ஆக்குகிறான் அர்ஜுன். சேரனின் அமைதியான நடிப்பு Excelent.His acting justified the climax.இறுதி கட்டத்தில் சினிமாக்கள் இப்படித்தான் முடியும் என்கிற எண்ணம் தோன்றாமைக்குக் காரணம் சேரனின் நடிப்புத்தான். இந்த முரண்பட்ட இருவர்களின் வாழ்க்கை போர்தான் படம். இயக்குனரின் கை வண்ணம் படம் முழுக்கத் தெரிகிறது. அனைத்து பாத்திரங்களின் inner persanality ஐ அழுத்தமாய் மட்டுமின்றி ஆழமாயும் காட்டி உள்ளார்.நந்தா-அர்ஜுன் மட்டுமல்லாமல்,ஏனைய Characters emotional journey and its susequential consequences கள் அற்புதமாய் காட்டப்பட்டுள்ளது. இந்து -தந்தையை பழி வாங்க கள்ளக் காதலை உருவாக்கிக் கொண்டவள் லிண்டா-தாயின் அழிந்து போன கனவை மெய்பிக்கும் வெறியில் வெந்து போனவள் லாவண்யா -self pittying, அண்ட நிழல் தேடும் ஆத்மா. தேவராஜன் -இவரின் உலகம் அன்பாலும் கருணையாலும் ஆனது. மகனுக்கு உதவா ஆலமரமாய் தான் இருப்பதை சட்டை செய்தவரில்லை. character அறிமுக காட்சிகள் -அவர்களின் உள் முகங்களை வலிமையாய் Potrait செய்யும் விதத்தில் உள்ளது. இயக்குனர் Note this point என எதையும் அடிக் கோடிட்டுக் காட்டாமல் கதை சொல்லிக் கொண்டு போவது பார்வையாளனுக்கு புது அணுபவம். அவசியம் இல்லாத காட்சிகள் இந்த படத்தில் எதுவும் இல்லை.எல்லாம் Co-related. மிக வலிமையான திரை கதை.Example for Script Writing. சாமர்த்தியமான Editing படத்துக்கு சுவாசமாய் உள்ளது. ரசிக்கும் விதத்தில் சாஜன் மாதவ்-ன் இசை.அழகியலை படம் பிடித்த மாதிரி காமிரா வண்னத்துப் பூச்சியாய் துள்ளுகிறது.பத்மேஷ் சினிமோட்டோகிராப். கொலை செய்யும்துணிச்சல் இல்லாத நந்தா. துப்பாக்கியை தூக்கி எறிய கடற்கரைக்கு போகிறான்.அங்கே இரண்டு மன நிலை."என்னால் கொலை செய்ய முடியாது " என்று சொல்ல,நந்தா போனில் அர்ஜுனை அழைக்கிறார்.விஷயத்தை கேட்ட அர்ஜுன் நந்தாவிடம் "நீங்கள் எங்கே இருக்கிரிர்கள்" என் கேட்கிறான். நந்தா பதிலுக்கு,"நீங்கள் எங்கே இருக்கிரிர்கள்" என் கேட்கிறான். அடுத்த காட்சியில் நந்தா ஒரு மாலுக்குள் நுழைவதை முதல் தளத்தில் இருந்தபடி, அர்ஜுன் பார்க்கிறான்.அடுத்த காட்சி. எஸ்கலேட்டரில் நந்தா Frame-க்கு அடியில் இருந்து மேல் வருகிறான். இப்படி பல காட்சிகள். இயக்குநர் யார் சொல் பேச்சும் கேட்காதவர் மாதிரி தெரிகிறது. சேரன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.குடைக்குள் மழை மாதிரி ஒரு நல்ல படம் தயாரித்ததற்கு மட்டுமின்றி, இயக்குநருக்கு இவ்வளவு சுதந்திரம் தந்ததற்க்கும் தான்..! படத்தின் message என்ன என்றால்-- விபத்துக்கள் இயற்கை சம்பவம் என்று நம்புகிறவன் முட்டாள் அதை சம்பவித்து ஆதாயம் பெருபவன் அறிவாளி - இது அர்ஜுன் சொல்லும் சித்தாந்தம்.அனால் இதன் முலம் நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை அந்நியனிடம் அகத்தை திறக்காதே-ஏனென்றால் .பாம்புகள் புற்றில் மட்டுமல்ல காரிலும் வாழும்..!

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,

கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,சுந்தர்.சியின் ஆக்கப் பூர்வ கமெண்ட், வித்யாசமான படைப்புக்கள் என்று 18-9-11 ல் ஒளிபரப்பான நாளைய இயக்குனரின் இந்த இரண்டாவது நிகழ்வு ஜனரஞ்சகமாயும், சுவாரஸ்யமாயும் இருந்தது ஸ்டீபனின் 1,4,3- ஒரு நிறைவுறா காதல் கதை..படத்தின் சிறப்பு சுருக்கமான script-ம்,அளவான வசனமும்தான்.டீச்சர்,வாத்தியாரின் நடிப்பு இயற்கையாய் சன்னமான தாளலயத்தில் சொல்லப்பட்டிருந்ததை நையாண்டி செய்வது மாதிரி இரைச்சலான பிண்னணி இசை.வாத்தியார் பேசியதே நாலு dialogue.அதில் இரண்டு முக்கியம் வாய்ந்தது,ஒன்று " நான் வேணும்னா parents ஐ அணுப்பி வைகட்டுமா," மற்றது டோக்கன் நம்பர்:1,4,3 என்றதும், "அது என்னைத்தான்".என்பதும். இவை இரண்டும் பிண்னணி இசை சத்தத்தில் காதில் விழாமல் படத்தை ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. தன் குறும்படத்தின் பெயரை பாரதி பாலா ஆரம்பத்தில் சொல்லவில்லை. படம் ஆரம்பித்ததும் புரிந்துவிடுகிறது.அவள் அழகி என்று.அது தான் அவள் பெயரும் என்று உணரும் போது நெஞ்சு கனக்கிறது.படத்தின் தலைப்பும் அதுதான் என முடிவில் தெரியும் போது நெருடல். பெண் கள் ஏமாற்றப்பட்டு இப்படி வஞ்சிக்க படுதல் தினமும் இந்த நாட்டின் ஏதாவது ஒருபகுதியில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளதுகாதல் பெயரால் பாலியல் வ ஞ் சிப்புகள் இங்கு நிறையவே.கதை சொல்லிய விதம் வழக்கமான ஒன்று என்றாலும், இயக்குனர் கூத்துப் பட்டறையில் பாடம் பயின்ற touch கள் தெரிகிறது. சஞ்சயின் சத்தியம் வார இதழ்களில் வரும் ஒரு பக்க கதை மாதிரி 'நினைதது ஒன்னு நடந்தது ஒன்னு' வகையை சார்ந்தது எனினும் ரசிக்கலாம்.ஆரம்ப build up களில் கதை எப்படி நகரும் என்பது மட்டுமல்லாமல் எப்படி முடியும் என்பது ,கைதிகளை கை விலங்குடன் மறைவான ஒதுக்கு புறத்தில் காவல் துறை நுழையும் போதேதெரிந்து விடுகிறது. வசனத்தில் வேறு மாநில தமிழ் மாதிரியான மண் வாசனை இல்லை.சிக்கனம் மற்றும் artist கள் இன்மை காரணமாய் நடந்த ஒன்று judge களின் இசைவால் வட்டார வழக்காய் ஏற்கப் பட்டது தான் சோகம்.(ஹைதிராபாத் வ.வழக்கு கதை post script-ல் பார்க்க) ராமானுஜத்தின் "மீண்டும் ஒரு குழந்தை" வித்யாசமான களம்.மூப்பு ,வயோதிகம் இந்திய மண்ணில் சாபம்.கூட்டுக் குடும்ப நசிவுகளின் பின் விளைவும்,.பொருளாதார சமத்துவம் கிடைக்காத பழைய பெண் தலைமுறைகளின் அவலமும் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.நடை முறைக்கு ஒவ்வா dramatic முடிவால் முதலிடம் மறுக்கப்பட்டிருக்குமோ..?
p- script: " Sabko maloom hai main sharabi nahin" அன்று யாதகிரி மிகவும் பரிஷான்லே இருந்தான்.ஹாமால் பஸ்தியில் தான் அவனுக்கு வீடு.அவன் அய்யா முன் காலத்லே குட்ஷெட்டில் மால் காடி வந்து நின்னா வரும் மூட்டை களை இறக்கிப் போடற வேலை.அதானலே ஹமால் பஸ்திலே ஜாகை பார்த்து குடி இருந்தார்.காலையில் பால் வாங்க போன யாதகிரியை வழியிலே பார்த்து ரெஹமான் பாய் அவனை மாலை நடக்க விருக்கும் தாவத்க்கு கூப்பிட்டிருந்தான்;அப்ப இருந்து யாதகிரிக்கு பரிஷான் தான் டுபாய் போக இன்னும் ஒரு வாரத்திலே விசா வந்திடும்மாம்.10,000 திரஹாம் வரை சம்பளம் வருமாம்.அதான் தாவத்.சாயங்கால பார்ட்டீன்னா எப்படியும் தண்ணியோட 'கீன்ஞ் காட்' தான்.வேனாம்ன்னு சொல்லமுடியாது.பக்கத்து கல்லியில் தான் ரெஹமான் வீடு.குடித்து விட்டு வீட்டுக்குப் போனால் மனைவி மல்லம்மா அவனை துக்குடா துக்குடா பண்ணிடுவாள். தாரமா, தண்ணியா இது தான் யாதகிரியின் பரிஷானுக்கு காரணம். மாலை அரை மனத்துடன் முதல் நாள் ஸ்கூல் போகும் குழந்தை மாதிரி தயங்கி,தயங்கி யாதகிரி ரெஹமான் வீட்டிற்குள் நுழைந்தான்.உள்ளே சாய், சசி,காஜா, ஜேம்ஸ், பட்னாகர் என்று எல்லோரும்நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள்.அவர்கள் முன் நின்று கொண்டிருந்த ரெஹமான்," இன்று சனிகிழமை நீங்கள் மட்டன் தின்ன மாட்டீங்கன்னு இன்னைக்கு வெறும் veg party witrh cool drinks என்றதும் யாதகிரி நிம்மதி பெருமுச்சு விட்டான். பார்ட்டீ ஆரம்பத்து விட்டது பங்கஜு தாஸ் பாடலுடன். " Sabko maloom hai main sharabi nahin "

வியாழன், 15 செப்டம்பர், 2011

மங்காத்தா என்ற ஆட்டம்..


திரிஷா,ஆண்ட்ரியா,அஞ்சலி.லட்சுமி ராய் மற்றும் மங்காத்தா
                                                               
                                           
                               இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாகமாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக தயரிக்கப்பட்டுள்ளது இது மாறி வரும் மக்கள் மன நிலையை காட்டுகிறது.
                              மதராச பட்டிணம், வம்சம், மைனா,தெய்வத் திருமகள், அங்காடித் தெரு,அழகர் சாமியின் குதிரை,தென் மேற்கு பருவ காற்று, போன்ற படங்கள் தமிழனின் ரசனை வளர்ச்சிக்கான அறிவிப்பு.சினிமாவிற்க்கு இந்த கதை, இந்த களன் உரியதா ரசிக்கப்படுமா? என்ற தயக்கங்கள் இன்று இல்லை.   எளிய சிறுகதை வடிவத்தில்,   மனித எண்ணங்களின் பதிவாய் சில படங்கள் வந்துள்ளது..தினமும் சந்திக்கும் அல்லது பார்த்த மனிதர்களின் பார்த்தறியா உலகம்.புதிரான தனி மனித அவலங்களும்ஆசைகளும், கனவுகளும்,கற்பனை செய்திராத வேறு உலகங்களும் செல்லுலாய்டில் சித்திரமாகின்றன..புதிய படைபாளிகளின் வித்யாசமான சிந்தனைகள்.தொழில் நுட்பம்,காமிரா கையாள்கையில்,நெறியாள்கையில் வித்யாசம்.கதை சொல்லும் முறையில் புதுமை, என்று பல துறைகளில் நூதன சிந்தனையாளர்கள் தடம் பதித்துக் கொண்டுள்ளனர்.
                                     Script writing  ,பாத்திர படைப்புகள்,மற்றும் திரைப் பட உள்ளடக்கங்களில் மாற்றம் நிகழ்ந்து உள்ளதா? பொதுவாக தமிழ் திரை உலக திரை கதைகள் செண்டிமென்டுகளால் பின்னாப் பட்டு இருக்கும்.அதில் நல்லவன், கெட்டவன் என இரண்டு பாத்திரங்களே வலம் வருவார்கள்.பின்னர் அதே செண்டிமென்டுகள் வித்யாசமான பாத்திரங்களுடன்-
 அதாவது, பண்ணயார் செல்வரங்கம் பிள்ளை மில் முதலாளி மோகன ரங்கமாக மாறி இருப்பார். நியாயம் கேட்கும் விவசாயி, போனஸ் கேட்க்கும் யூனியன் லீடராய் மறு அவதாரம் எடுத்து இருப்பான்.அவனின் நற்சிந்தனை நற் செயல்களால் பண்ணயார்/மில் முதலாளி மகள் ஈர்க்கப்பட்டு, அவனை விரட்டி விரட்டிகாதலித்து , பின் கண்ணீர் விட்டு ஏற்றுக் கொள்ளும் படி மன்றாடுவாள்.அப்பவை போலீஸ் பிடித்து சென்றதும் ஏற்கனவே அவள் ஃபாரின் லெக்கேஷனில் நாயகனுடன் கனவில் பாடிய டூயட் பாடலின்முதல் இரண்டடியை பாடி அவனை மண முடிப்பாள்.அம்மா ,தங்கை பாச ஸ்டாக் தீர்ந்ததும்,  நம்மவர்கள்பார்வை,மாமியார்,மருமகள்கள் மீது பட்டது. அது இன்றும் சீரியலாய் டீவீ வரை தொடர்கிறது.
                 ஜனங்கள் வித்யாசத்தை கேட்கிறார்கள் என, ஆர்.டி.ஒ. அழகப்பன், கண்டக்டர் கந்தசாமி, ஸ்டேஷன் மாஸ்டர் சாமினாதன்,வேன் டிரைவர் வேலாயுதம் என மாறு பட்ட character கள் இவர்கள் என்று தமிழ் திரை உலகத்தினர், இட்லி மாவை தோசை ஆக்கித் தந்தார்கள்.  எல்லா பாத்திரங்களும் ஒன்று நல்லவன் அல்லது தீமைகள் செய்கிற கெட்டவன்.கெட்டவனுக்கு துணையாக அடியாள் கூட்டம். நல்லவனும் வல்லவனுமாய் நாயகன்" maa meri pas hai.." என தனியாளாய் நிற்ப்பான்.
                           இந்த வில்லன்மார்களை ,வித்தியாசமாய் படைப்பதாய் சொல்லி கத்தி குத்து கார்மேகம் முதல் கார்கோடன் வரை காதளவோடிய கன்ன கிருதா,மல் ஜிப்பா,இடுப்பில் லுங்கி, பட்டை பெல்ட்,கத்தி சகிதம்,இவைதான் வில்லனுக்கு உரிய அடையாள இலக்கணங்கள் என காட்டினார்கள். இன்றும் காட்டிக் கொண்டுள்ளார்கள்.
                                      பெண் பாத்திரங்களும் இதை போலத்தான். அவளுகென்று மனம்,உணர்வு என்று எதுவும் கிடையாது.ஆண் நிழலை தேடி அண்டும் பேதைகளாய் இருப்பார்கள் அவள் கதாநாயகி என்றால் .உத்தமி. இழுத்து போர்த்திக் கொண்டு தாலியை கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஜாதி. வில்லி(vamp)என்றால்,  அரை குரை ஆடைகளுடன் மது வார்க்கும் காபிரே டான்ஸர்
                மொத்தத்தில் கதை மாந்தர்கள் சொல்லும் மெஸெஜ்- நல்லவன் வாழ்வான், அரக்கன் அழிவான்.தாய் பாசம் ஜெயிக்கும். etc, etc.
                                                           
இந்த மேல் சொன்ன விஷயங்களில் இருந்து மாங்காத்தா எந்த அளவு மாறி இருக்கிறது..?
(அப்பாடி தரை வந்திடுச்சு)
                                                     மாங்காத்தாவை ஏன் அளவுகோலாய் எடுத்து ஆராய வேண்டும் என்றால் இது வெகு சமிபமாக வந்த படம்;அப்புறம் இதன் வெற்றிக்கு பாடுபட்டவர்கள்- அஜித்,அர்ஜுன்,ஜெயபிரகாஷ்,திரிஷா தவிர மற்ற கலைஞர்கள் அனைவரும் இருபத்தியைந்து வயதை சுற்றி உள்ளவர்கள்.
                      இதன் கதை முற்றிலும் மாறுபட்டது.சூதாட்டம் நமக்கு மகாபாரத கால பழசு. கிரிக்கெட் சூதாட்டம் -match fixing புதுசு.(C&D centre ல் ஓட,கதைக்கு ஒரு முன் குறிப்பு தேவை.).அதன் பிண்ணனியில் இயங்க்கும் அண்டர் வோர்ல்ட் தாதாக்கள்-சாதாரண மிடில் கிளாஸ் தோற்றத்தில், சட்டை பையில் பேனா வைத்திராத கவர்மென்ட் கிளார்க் மாதிரியான தோற்றத்தில் இருக்கும்  இவர்கள் கோடிகளில் வர்த்தக பரிவர்த்தனை செய்பவர்கள்.அரசு இயந்திரங்களை ஆட்டுவிப்பவர்கள்.' காட்சிக்கு எளியன் கடும் சொல் இலன்' என்றால் அது இவர்கள்தான்.இந்த வில்லன்கள் தமிழுக்கு மிக புதுசு.
இந்த தாதாக்களை சுத்தலில் விடும், நம் சட்ட காவலர்கள் நாம் சந்திக்கும் புதிய பாத்திரங்கள்.காவல் துறையை சார்ந்த இந்த அதிகாரிகள்,cyber crime செய்யும் hi-tech கொள்ளையர்கள்.மிகவும் சாமர்த்தியமாய்அண்டர் வோர்ல்ட் தாதாக்களையும் மக்களையும் ஏமாற்றும் இவர்கள் புத்திசாலிகள். இவர்களுக்கு இணையாக fast perks தேடும் நான்கு இளைஞர்கள். இந்த கூட்டணியின் core பிரேம்ஜீ.இவர்.தீட்டிய மரத்தில் கூர் பார்த்தால் பரவயில்லை;அதை கூறு போட்டு குளிர் காய நினைக்கும் hi -fi Soft wear Engineer& efficient hacker .கனவுகளை சுமந்துகொண்டு , கை நிறைய இல்லை இல்லை கோணிப் பை நிறைய பணம் ஈட்ட விரும்பும் கம்ப்யுட்டர்savy. ப்ரேம்ஜீ வித்யாசமாய் தான் இளிக்கிரார்.இல்லை இருக்கிரார்.எத்தனை நாள் தான் பல்லாக்கு தூக்குவது என்று நாட்களை எண்ணும் வைபவ்க்கும் நல்ல பாத்திரம் தரப்பட்டுள்ளது இவர்களின் இந்த கூட்டணி கூடி திட்டமிடுவது, மஹத்தின் பாரில்.
                                கதை மாந்தர்கள் அனைவரும் பணத்தாசை பிடித்த பேராசை காரர்கள்.குறுக்கு வழியில் பணம் பண்ண விழைபவர்கள்.இதில் ஒரு போலிஸ் கூட நாணயஸ்தாராய் இல்லாதது சோகம்.( சுப்பு இரண்டு முறையும் இறந்தவர்)
                         அப்பாவி திரிஷாவும் போலீஸ் அதிகாரி சுப்புவும் தான் நல்லவர்கள்.
                                       இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட மிக கொடுரமான வில்லன் அஜித்.பணவாசனையை அணுபவிக்கும் ,  அளவில்லாமல் மதுவை சுவைக்கும்,பெண்களை தேடும், குடிகார மனிதாபிமானம் இல்லாமல் காசுக்காக காதலிக்கும், பஞ்சமா பாதகங்கள் செய்யத்துணிந்த, அரக்கன் இந்த விநாயக மகாதேவன். மணக்க போகும் காதலியின் தந்தையை நன்கு அறிந்தவனை , ஓடும் காரில் இருந்து ஆக்ரோஷமாய் தள்ளி விடும்  இவனுக்கு தாரக மந்திரம் டப்பு..salt &pepper style-ல் அஜித் ந்டிப்பு கொஞ்சம் ஓவர் என்றாலும் நன்றாக உள்ளது.இது பிரபல ஹிரோக்கள் செய்ய யோசிக்கும் பாத்திரம்( சத்ய ராஜ் செய்யக் கூடியவர்.இமேஜ் பற்றி கவலைபடாதவர்)
கதையின் பின் பாதி ஒரே நாளில் நடந்த சம்பவம் போன்ற தோற்றத்தை தருகிறது.
                         ஓரே ஃப்ரேமில் அஜீத் படிப்பது கம்ப்யூட்டர் பார்ப்பது,திட்டமிடுவது புகைப்பது -technical excellence and director longing towards brevity. காமிரா சக்தி சரவணன்
கார் ரேஸிங்க் சில சமயங்களில் அச்சத்தை தருகிறது.பைக் சேஸ்ங்க் அஜீத் அவர்கள் டூப் இல்லாது செய்ததாய் சொல்கிறாய்கள்.காரை மிகமிக வேகமாய் ரிவர்ஸ் கியரில் எடுப்பதுவும் அஜீத் என்று சொல்கிறார்கள். பரவசம் தரும் இந்த காட்சிகள் பயத்தயும் தருகிறது.
                      திரிஷா, ஆண்டிரியா,அஞ்சலி சாதரமாண பெண் முகங்கள்.லட்சுமி ராய் வித்யாசப்படவில்லை. 'மானோகரா காலத்து' பழைய வில்லி. கத்தி போய் கை துப்பக்கி வந்துள்ளது
            இசை பூம் பொழில் ஒன்றில் பனி விழும் பௌர்னமி இரவில் ஏகாந்தமாய் மிலிட்டிரி ரம்முடன் நடப்பது போல் உள்ளது.
                                    screen play-ல் இன்னும் நகாசு வேலை செய்திருக்கலாம்
 நல்லவன் வாழ்வான் என்பது பொய் வல்லவன் வாழ்வான் என்பது நிஜம் என்று கதை சுவாரஸ்யமாய் விரிகிறது
வெங்கட் பிரபு நன்றாக தெரிகிறார்.
Angry young man-கள் போய் Avarice new men வந்து கொண்டிருக்கிறார்கள்..!valaicharam.com

திங்கள், 12 செப்டம்பர், 2011

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....


                                    மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர்-சீசன்-3 ,  புதிய விமர்சக தேர்வுக் குழுவுடன் 11-9-2011 அன்று ஒளிபரப்பாகியது.
சமிப காலமாக குறும்படங்கள் வெகு ஜன வரவேற்பை பெற்றதோடல்லாமல், ஜன ரஞ்சக பிரபல வார மாதா இதழ்கள் மட்டுமின்றி பிரபல தொலைகட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது.இது ஒரு நல்ல முன்னேற்றம்.குறும்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் புதுமையாய் பரிட்ஷார்த்தமாய் தனி மனித எண்ணங்க்களை விஷுவலாய் பதிவு செய்யும் ஒரு களமாய் உள்ளது.

        .இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாக மாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக படமக்கப்பட்டுள்ளது இது ஒரு ஆரோக்கிய சுழல் உருவாகி வருதலை காட்டுகிறது.
 குறிப்பாக-மதராச பட்டிணம், வம்சம், மைனா போன்ற படங்கள் தமிழில் வருமா என ஏங்கிய நாட்கள் போய்விட்டது.
                    இந்த அசுர வேகத்தின் வெளிப்பாடே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குறும்படங்கள்.குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகிய நாளைய இயக்குநர் இரண்டு சிசன்களூம், பாராட்டுதலுக்கு உரியது மதன் அவர்களுடன் பிரதாப் போத்தன் அவர்களும்வித,விதமான புதுமை சுற்றுகளூடன் துல்லிய விமர்சன கணிப்புகளுடன், இளம் இயக்குனர்களை கை பிடித்து புதிய உயரங்களுக்கு அழைத்து சென்றார்கள் மதன் அவர்களின் பன் முகம் உலகறிந்தது.அவரின் சினிமா ஞானம் விரிந்து பரந்தது.
                                          இவர்களை போலவே தான் புதிய ஜட்ஜஸ்-பாக்கிய ராஜ் அவர்களும் சுந்தர்-C அவர்களும்; இவர்கள் குறும்படங்களுக்கு அணி சேர்க்கும் கூட்டணிதான்.இது முதல் நாளில் இவர்கள் செய்த விமரிசனத்தில்யே தெரிகிறது.
11-9-11 அன்று ஒளிபரப்பகிய நான்கு குறும்படங்களும் பாரட்டுதலுக்கு உரியவை.
                         பிரசாந்த் இயக்கிய "நைஜிரியன் காதல்" படத்தின் அடித் தாளம் சாரி அடித்தளம் -- லோக்கல் பார்ட்டீயை நைஜிரியன் என்று எண்ணி ஏமாந்த ஜொள்ளுப் பாட்டி, சாரி பார்ட்டிதான்
                    எளிய கதை, சிரமம் இல்லாத தயாரிப்பு.கம்மி வசனம் தான் இதன் ஹை லைட்.
                             அடுத்தது நந்தாவின் படைப்பான உயிர்.இதன் நாயகன் "பைக்". அதீத கற்பனை.நடிகர் களின் அசால்டான நடிப்பு பிரமாதம்.உச்ச கட்டம் கதையின் மெஸ்ஸேஜ் கம் கருவை சொல்லப் போகிறோம் என்கிற பில்டப் கொ ஞ்சமும் இல்லாது இயல்பாய் நடித்த மெகானிக் அவர்கள்.
அடுத்தது--
     முதல் பரிசு பெற்ற நிகிலனின் 'புதிர்" நிஜத்தில் இது பஸில் டைப் தான்.
ஆரம்பித்த இடதிலேயே முடியும் இந்த படம் சுஜாதா அவர்கள் குமுதம் வார இதழில் முதன் முதலாய் எழுதிய "இது கதையின் ஆரம்பம் அல்ல.." என்ற சிறுகதையை நினைவு படுத்தும் விதத்தில் புதிய முயற்சியாய் இருந்தது. கதை சொன்னதில் கிளாரிட்டி கொஞ்சம் குறைவு.விஷ்வல் அம்சம் இல்லை. இது ஒரு நல்ல ரேடியோ நாடகம். அதாவது, கேட்டாலே கதை புரிந்துவிடும். கதைக்கு அடி நாதமே செல் ஃபோன் உரையாடல் தான்.பாரட்டத்தக்க புதிய முயற்சி.
அடுத்தது சீனிவாசன் இயக்கிய "செல்வி".குழப்பம் இல்லாது கதையை நேரிடையாய் சொன்ன படம்.நடிக நடிகையரின் இயல்பான நடிப்பு அளவான வசனம் படத்தில் + பாயிண்ட். இயக்குனரை நிறைய இடத்தில் பாராட்டலாம்.நாயகன், செல்வி சந்திப்பு முதன் முதலாய் நிகழும் சமயம் காட்சி சிகப்பு கலரில் உள்ளது.ரெய்டு நடக்க போவதை படிப்படியாய் உணரசெய்வது.பரிசளித்த திருக்குறள் ஜீப்பில் இருந்து விழுவது.இந்த குறுபடத்தை பார்க்கும் போது,கமலின் நாயகன் பட நினைவு ஏனோ வருகிறது.உயர் தேர்வுக்கு தயாராகும் நாயகனுக்கு பழைய சிக் மெண்ட் ஃப்ராய்ட் மற்றும் ÍQ பற்றி பாடம் எடுப்பது லாஜிக்கான விஷயம் இல்லை.

இப்படி முடித்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது...??
படம் முழுவதும் செல்வியின் முகம் காட்டப்படவில்லை.குரல் தான்அடையாளம் .செல்வியின் நல்ல teaching- ஐ பாரட்டும் விததில் கதாநாயகன் அவளுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைபரிசளிக்கிறான்., செல்வியின் வற்புறுத்தல் காரணமாக அதன் முன் பக்கத்தில் எதோ எழுதி, பரிசளிக்கிறான்.ரெய்டு நடக்கிறது. மகளீர் போலிசார் வரிசையாய் பெண்களை போலிஸ் வானில் ஏற்றுகிறார்கள்.அதில் இறுதியாய் ஒருத்தி எறுகிறாள். அவள் கை நழுவி ஒரு புத்தகம் கீழ் விழுகிறது.
அந்த புத்தகம் க்ளோசப்பில் காட்டப்படுகிறது. அது திருக்குறள் அதன் அட்டை மீது- "உடுக்கை இழந்தவன் கை போல.." என்று எழுதப்பட்டது ஃபோகஸ் செய்யப்படுவதுடன் படம் முடிகிறது.
உடுக்கை என்றால் உடை பெண்ணின் மானம் காக்கும் உடை.அதை போல் உதவ முடியா நாயக நண்பன்.
இது எப்படி இருக்கு..?

புதன், 17 ஆகஸ்ட், 2011

AARAKSHAN


AARAKSHAN

            ஆரக்க்ஷன் என்றால் reservation  அல்லது இட ஒதுக்கீடு. அமிதாப் நடிப்பில்  பிரகாஷ் ஜா  (தாமுல்,கங்கா ஜல்,ராஜநிதீ போன்ற parell cinemaக்களை இயக்கியவர்) இயக்கதில் சமிபத்தில் வந்த படம்.இந்த இருவரின் இணைப்பில் அதுவும் இட ஒதுக்கீட்டை களமாய் கொண்ட படம் என்பதாலும் 15 ஆகஸ்ட்  ரீலீஸ் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தது
          .படம் ரீலீஸுக்கு முன்பே இரண்டு மாநிலத்தில்(UP and Panjab)  இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது.12-8-11 அன்று மும்பயில் பிரிமியர் ஷோ ரத்து செய்யப்பட்டது.சில மாநிலத்தில் அரசியல் கட்சிகள் படத்தை தடை செய்ய கோரி ஊர்வலம் நடத்தினர். மும்பயில் ஆர்பாட்டமும் நடந்தது.   
                     தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு 'ஜா' பட தடையை  நீக்க கோரி உச்சநீதி மன்றத்தை அணுகினார். அவர் மனுவில்  "ஒரே ஒரு கிராமத்திலே" தமிழ் படத்தை தடை செய்ய சில அமைப்புகள் உச்ச நீதி மன்றத்தை அணுகிய சமயத்தில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைத்தான் மேற்கோளாய் சுட்டி காட்டி இருந்தார்.அடிப்படை உரிமையான 'கருத்து சுதந்திரத்தின் முக்கியத்தை குறிப்பிட்டு  திரு'ஜா' அவர்கள் தடையை விலக்கும் படிUrgent hearing க்கு மனு செய்திருந்தார்.வழக்கு 16-8-11எடுத்துக் கொள்ளபடும் என்று சொல்லப்பட்டது
         13-8-11 அன்று இரவு படத்தின் மிது இருந்த தீயெட்டாரில் திரையிடக்கூடாது என்ற தடையை ஆந்திர அரசு விலக்கிகொண்டது.14-8-11 முதல் 10.00AM.,4.00PM, 7.00PM என மூன்று காட்சிகள் மட்டும் போலிஸ் பந்தோபஸ்துடன் நடந்தது.
      அமிதாப்புடன் ராணா புகழ்(!) தீபிகா படுகோன்,சாயிஃப் அலி கான் நடித்துள்ளனர்.

 Aarakshan

          படத்தின் ஆரம்பத்தில் பிற்படுத்தப்பட்ட இன மக்கள் நலன் கருதி அவர்களுக்காக கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. இந்த reservation காரணத்தால், quotta system காரணத்தினால் சந்தோஷமும் சிரிப்புமுமாய் இருந்த கல்லூரியில் அமைதி குலைகிறது.cut of mark ,Backlog என்று BC(Backward class)மாணவர்களுக்கு FC(forward class)மாணவர்களீன் இடங்கள் விடுத்தரும்படியாகிறது திறமையான FC மாணவனுக்கு மார்க் அதிகமாய் கிட்டி இருந்தாலும் reservation  காரணத்தால் கல்லூரியில் அட்மிஷன் மறுக்கப்படுகிறது .எதிர்காலம் பாதிக்கபடுவதால் நண்பர்கள் பகைவர்களாகிவிடுகிறார்கள்.மாணவர்கள் மத்தியில் பிணக்கு ஏற்படுகிறதுபகை உணர்ச்சி உருவாகிறது. 
                          மாணவர்கள்  இவ்வளவு நாட்களாய் தங்களின் திறமையை வெளி உலகுகுத் தெரிய விடாமல் உயர் ஜாதிகாரர்கள் ஒரு தடையாய் இருந்தது quotta system வருகையால் தொலைந்து விட்டது என்று ஆனந்திக்கிறார்கள்.இதுவரை ஒற்றுமையாய் இருந்த மாணவர்கள் சமுதாயம் ,quotta system காரணத்தால் பிளவு படுகிறது.போட்டி,பொறாமை,காழ்ப்பு உணர்ச்சி கோலோச்சுகிறது.
                     முதல் பாதியை மிகவும் யதார்தமாயும்,ஜாக்கிரதையாயும் எடுத்துள்ளார்கள்.
            இந்த மாணவ சமூகத்துக்கு மேற் படிப்பொன்று இருப்பதும், அதை அடைய தனித் திறமை வேண்டும் என்பதும் தெரியாமல் போய்விடுகிறது.
           இட ஒதுக்கீடு இருந்தாலும், மேற் படிப்பு நுழைவு தேர்வுக்கு தனி கோச்சிங்க் தேவை என்பதும் அதை பெற தனியார் coaching centreகள் இருப்பதும் ,அதில் பங்கு பெற 'டப்பு' என்ற நுழைவுச்சீட்டுத் தேவை என்பதையும் பின் பாதியில் மறைமுகமாய் சொல்லுகிறார்கள்.
  coaching centreகள் என்று தனி மனிதர்களும் அவர்களின் நிறுவனங்களும் சாமான்யர்கள் கொள்ளைஅடிக்கப்படுகிறார்காள்.கல்வி வர்த்தகமயமாகிவிட்டதால், reservation இருந்தும், ஏழை களால் வெற்றி பெற முடியாமல் போய்விடுகிறது என்பது தான் கதை.
அதாவது ஆரக்க்ஷன் அல்லது reservation  அல்லது இட ஒதுக்கீடு இருந்தாலும்,கல்வியில் ஜெயிப்பவர்கள் வசதி உள்ளவர்களே என்பதுதான் moral of the story.
வழக்கம் போல் ஹிரோஅமிதாப் தன் வழியில் இதற்க்கு ஒரு தீர்வை காண்கிறார்.
முடிவாக ஹேமா மாலினி Guest ஆக திரையில் தோன்றி நல்ல முறையில் படத்துக்கு மங்களம் பாடி முடிக்கிறார்.
இதற்க்கு இத்தினி build up தேவை இல்லை.   வெள்ளி, 1 ஜூலை, 2011


                                                நடந்து வந்த பாதை   

 திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து 
 கையை அகல விரித்து வானத்திடம்
 யாசகம் கேட்டபடி மரம் இருந்தது பகலில்
  இருளில் கொட்டிக்கிடந்த, நட்சத்திர பொக்கிஷத்தை
 கள்வர் கண்ணிலிருந்துகாத்து மறைக்க
 உயர் அடர் பசுமை கிளைப் போர்வையை வான்
 வேண்டாமலே மரமளித்து மகிழ்ந்தது.
                              திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து                                                                                                                                       
 இந்த இருண்டகானகத்திநூடே
பயணித்தபழையநாட்கள் விழுதென பற்றி உயர ஏறிய பின் தெரிந்ததது நாகமென 
பாம்பு என்று எண்ணி விலகி நகர்ந்தால்
 அது வயோதிக மரத்தின் ஊன்று கோல் வேர்
 இடர்கள் ஆயிரமா யினும் கால தேவன்  
 ஞான போதனையால் அது இனிய பயனமானது                      
                        திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து
 .பகலும் இரவும் மாறி வராததால்,தெரியவில்லை
 கடந்து போனது விலங்கா மனிதானா என்று.
மனிதன்எனின்,மறந்திருப்பான் 
விலங்காயிருந்தால் இருந்தால் விழுங்கியிருக்கும்  
                                       திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து
 நீண்ட நடை சந்தித்த, ஏற்ற இறக்கங்கள்
 சறுக்கல்,வழுக்கல்கள்,  தந்த வலி யை விட 
 அதிக வேதனை வலி பற்றி  நினைவு .                                                         
 ஆறுதலாய் நிழல் துணை இல்லை,
போகும் தூரமும், தெரியவில்லை கால நேரமும் கருத்தாகவி ல்லை
 ஆனாலும் தூரத்து வெளிச்சம் காட்டிய நன் நம்பிக்கை 
 போ முன்னே என்றது.                                                                                          
                                    திருப்பிப் பர்த்தால் மலைப்பாய் இருக்கிற்து

வெள்ளி, 24 ஜூன், 2011

அன்பே சிவம்


 அன்பே சிவம்


                                                             
                       புகை கக்கும் டீ பாய்லர்க்கு கீழே
                       வெறும் தரையில் குப்பை பொறுக்கும்
                        கிழிசல் டவுசர் வேலு
                        அருகே அவன் ஆத்தா காமு
                        இருவர் கையிலும் வாய் சுட, கை சுட
                         மதிய உணவாய் கிளாசில் டீ

                         சாதா ஸ்பெஷலென்ற வித்தியாசம்
                         துணியாய் புரொட்டாவை சுழற்றும் சின்னையன்
                        கடை டீயில் மட்டுமல்ல என்பது சாய்மான பெஞ்சில்
                         டவரா செட்டில் டீ குடிக்கும்
                          பூசாரி ராம துரையை அம்மன் சன்னிதியில்
                          பார்த்தால் தெரியும்

              பெரிய குங்கும பொட்டும்,தோள்,மாரென.சந்தனம்
              மணக்க   அரை கண் மூடி தட்டில் விழும் தட்சணையை
             கிழ் பார்வையால் கணக்கிடும் பூசாரிக்கு தெரியும்
             பொங்கல் பிரசாதம் தரனும் யாருக்கென்ற
            சாமி ஒப்புக்கொண்டலும் ஏழைக்கு வரம் தர
            யோசிப்பான் பூசாரி என்பது தெரியும் சின்னையனுக்கு.
                                                                                         
                                  அதனால்தான் அவன்
                                  ஐந்து காசு கடன் என்ற காமுவிடம்,
                                  கடன் அன்பை முறிக்கும் என்றான்,
                                  மாமுலாய் இரண்டு முறை தினமும்
                                  இலவச டீ பருகும் பூசாரியை
                                  அன்பே சிவம் என்று இளித்து வணங்குவான்.

செவ்வாய், 21 ஜூன், 2011

பயணம்

 பயணம்                                                       வணக்கம்
                   
                    கண் நிறைய கனவுகளும் பை நிறைய
                    கருத்துக்களுடன்   வண்டி ஏறினேன்
                    மை இல்லா Pen-னுடன்   
                      பாதை சரியகத்தான் வரையப்பட்டிருந்தது
                    வந்தது நல்ல   வாகனம் தான் 
                     வண்டியோட்டி எனக்குத்தான்
                      சேருமிடம் பற்றிய குழப்பம்.
                   மழையும் ,மலையும் வானமும் ,வனமும்
                  தடங்களை தப்ப விட்டன
                     தெளிவான வழியும்.சுலபமான  கணக்கும்
                      என் தேர்வில் வரவில்லை,
                       
                                                            
                            இருந்தாலும்,சேருமிடம் பற்றிய
                            குழப்பத்தில்  இப்போது  இல்லை நான்
                             வண்டி, மாடு இல்லை யென்றலும்
                             வழிப் பயனம் தொடரும் 
                             தொடரும் ...தொடரும் 
                             முடிவில்லா முடிவை நோக்கி,
                              தொடரும் ....தொடரும்...