இடுகைகள்

அக்டோபர் 30, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்  சமிபமாய் வரும் நாளய இயக்குனர்களில் ஒளிபரப்பாகும் குறும் படங்களின் ஆரம்பத்திலேயே கதை போக்கும் சொல்லப் போகும் இதோபதேசமும் தெளிவாய் தெரிந்துவிடுகிறது. சிலரின் படைப்புகள் குழப்பமாயும் தெளிவின்மயுமாய் இருக்கிறது.பொதுவில் தொழில் நுட்பம் மற்றும் காமிரா கையாள்கயில் மிகவும் முதிர்சியும் கலை ஞானமும் தெரிகிறது.நமது இன்றைய பெரிய திரை இயக்குனர்களின் வித்யாசமான பார்வைக்கு உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் சம கால நல் இலக்கிய கதைகள் பற்றிய ப்ரக்ஞையும் தான்.(சில இயக்குனர்கள் முழுக்க முழுக்க வேற்று மொழி படத்தின் ஜெராக்ஸ் களை மொழி மாற்றம் செய்து தருவது தான் சோகம்) ஆண்டனி டிட்டோவின் God's Mistake என்ற குறும்படம் மிகவும் childish ஆக இருந்தது. தலைபாகை கட்டிக் கொண்டு அச்சிட்ட புத்தகத்தைப் பார்த்துப் படிக்கும் அச்சு பிச்சுதனமான  கடவுளும் அவரின் சிறுபிள்ளை தனமான பேச்சும் நகைப்பை தான் தருகிறது.த்ரேதாயுக கடவுள் வடிவவாய் இருக்குமோ? எதிரிடயாக நவின யுவன் கணிணி யுடன் கேள்விக்கனைகள் தொடுப்பது  மாதிரியாக காட்சி அமைத்திருப்பதன் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை.கடவுள் பழைய தலை முறை