AARAKSHAN
AARAKSHAN
ஆரக்க்ஷன் என்றால் reservation அல்லது இட
ஒதுக்கீடு. அமிதாப் நடிப்பில் பிரகாஷ் ஜா (தாமுல்,கங்கா ஜல்,ராஜநிதீ போன்ற parell cinemaக்களை இயக்கியவர்) இயக்கதில் சமிபத்தில்
வந்த படம்.இந்த இருவரின் இணைப்பில் அதுவும் இட ஒதுக்கீட்டை
களமாய் கொண்ட படம் என்பதாலும் 15 ஆகஸ்ட் ரீலீஸ் என்பதாலும் எதிர்பார்ப்பு
அதிகமாய் இருந்தது
.படம் ரீலீஸுக்கு முன்பே இரண்டு மாநிலத்தில்(UP and
Panjab) இந்த படத்துக்கு
தடை விதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் திரையிட அனுமதி
மறுக்கப்பட்டது.12-8-11 அன்று மும்பயில் பிரிமியர் ஷோ ரத்து செய்யப்பட்டது.சில மாநிலத்தில் அரசியல் கட்சிகள் படத்தை தடை செய்ய கோரி ஊர்வலம்
நடத்தினர். மும்பயில் ஆர்பாட்டமும் நடந்தது.
தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு 'ஜா' பட தடையை நீக்க
கோரி உச்சநீதி மன்றத்தை அணுகினார். அவர் மனுவில் "ஒரே ஒரு கிராமத்திலே" தமிழ் படத்தை தடை செய்ய சில அமைப்புகள் உச்ச நீதி மன்றத்தை அணுகிய
சமயத்தில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைத்தான் மேற்கோளாய் சுட்டி காட்டி இருந்தார்.அடிப்படை
உரிமையான 'கருத்து சுதந்திரத்தின் முக்கியத்தை குறிப்பிட்டு திரு'ஜா' அவர்கள் தடையை விலக்கும் படிUrgent
hearing க்கு மனு செய்திருந்தார்.வழக்கு
16-8-11எடுத்துக் கொள்ளபடும் என்று சொல்லப்பட்டது
13-8-11 அன்று இரவு படத்தின் மிது இருந்த தீயெட்டாரில்
திரையிடக்கூடாது என்ற தடையை ஆந்திர அரசு விலக்கிகொண்டது.14-8-11 முதல் 10.00AM.,4.00PM, 7.00PM என மூன்று காட்சிகள்
மட்டும் போலிஸ் பந்தோபஸ்துடன் நடந்தது.
அமிதாப்புடன் ராணா புகழ்(!) தீபிகா படுகோன்,சாயிஃப் அலி கான் நடித்துள்ளனர்.

படத்தின் ஆரம்பத்தில் பிற்படுத்தப்பட்ட இன மக்கள் நலன் கருதி அவர்களுக்காக கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. இந்த reservation காரணத்தால், quotta system காரணத்தினால் சந்தோஷமும் சிரிப்புமுமாய் இருந்த கல்லூரியில் அமைதி குலைகிறது.cut of mark ,Backlog என்று BC(Backward class)மாணவர்களுக்கு FC(forward class)மாணவர்களீன் இடங்கள் விடுத்தரும்படியாகிறது திறமையான FC மாணவனுக்கு மார்க் அதிகமாய் கிட்டி இருந்தாலும் reservation காரணத்தால் கல்லூரியில் அட்மிஷன் மறுக்கப்படுகிறது .எதிர்காலம் பாதிக்கபடுவதால் நண்பர்கள் பகைவர்களாகிவிடுகிறார்கள்.மாணவர்கள் மத்தியில் பிணக்கு ஏற்படுகிறதுபகை உணர்ச்சி உருவாகிறது.
மாணவர்கள் இவ்வளவு நாட்களாய் தங்களின் திறமையை வெளி உலகுகுத் தெரிய விடாமல் உயர் ஜாதிகாரர்கள் ஒரு தடையாய் இருந்தது quotta system வருகையால் தொலைந்து விட்டது என்று ஆனந்திக்கிறார்கள்.இதுவரை ஒற்றுமையாய் இருந்த மாணவர்கள் சமுதாயம் ,quotta system காரணத்தால் பிளவு படுகிறது.போட்டி,பொறாமை,காழ்ப்பு உணர்ச்சி கோலோச்சுகிறது.
முதல் பாதியை மிகவும் யதார்தமாயும்,ஜாக்கிரதையாயும் எடுத்துள்ளார்கள்.
இந்த மாணவ சமூகத்துக்கு மேற் படிப்பொன்று இருப்பதும், அதை அடைய தனித் திறமை வேண்டும் என்பதும் தெரியாமல் போய்விடுகிறது.
இட ஒதுக்கீடு இருந்தாலும், மேற் படிப்பு நுழைவு தேர்வுக்கு தனி கோச்சிங்க் தேவை என்பதும் அதை பெற தனியார் coaching centreகள் இருப்பதும் ,அதில் பங்கு பெற 'டப்பு' என்ற நுழைவுச்சீட்டுத் தேவை என்பதையும் பின் பாதியில் மறைமுகமாய் சொல்லுகிறார்கள்.
coaching centreகள் என்று தனி மனிதர்களும் அவர்களின் நிறுவனங்களும் சாமான்யர்கள் கொள்ளைஅடிக்கப்படுகிறார்காள்.கல்வி வர்த்தகமயமாகிவிட்டதால், reservation இருந்தும், ஏழை களால் வெற்றி பெற முடியாமல் போய்விடுகிறது என்பது தான் கதை.
அதாவது ஆரக்க்ஷன் அல்லது reservation அல்லது இட ஒதுக்கீடு இருந்தாலும்,கல்வியில் ஜெயிப்பவர்கள் வசதி உள்ளவர்களே என்பதுதான் moral of the story.
வழக்கம் போல் ஹிரோஅமிதாப் தன் வழியில் இதற்க்கு ஒரு தீர்வை காண்கிறார்.
முடிவாக ஹேமா மாலினி Guest ஆக திரையில் தோன்றி நல்ல முறையில் படத்துக்கு மங்களம் பாடி முடிக்கிறார்.
இதற்க்கு இத்தினி build up தேவை இல்லை.
கருத்துகள்