பாலசந்தர் என்றதொரு பல்கலை கழகம்...

ஆரம்ப நாட்களில் நான் சிவாஜி ரசிகன்.எம்.ஜி.ஆர்.ரசிகர்களுடன் பள்ளி நாட்களில் சூடான விவாதம் செய்வதுண்டு.எனது வகுப்பு தோழர்கள் இந்த வாக்கு வாதத்தை கைகலப்பு வரை கொண்டு செல்வார்கள்.இந்த ரசிகர் பிரியர்  வாக்குவாதம் குறுகி பிடி சண்டைகள் காரணத்தால் ஒருவருக்கு ஒருவர் வருடக்க கணக்கில் பேசாமல் இருந்ததுண்டு.  
 நண்பிகளுடன் தான் பார்த்த ஒரு திரைப்படத்தை என் சகோதரி ஓஹோ என்று பாராட்டியதால் நான் முதன் முதலாக சிவாஜி நடிக்காத அந்த படத்தை பார்க்க சென்றேன்.
அந்த திரைப்படம் தான் பாமா விஜயம்.
அந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.படத்தின் கவர்ச்சியே நாகேஷும், KB அவர்களின் சாதுர்யமான வசனங்களும்.
தான்.பெற்ற தாய் அடிக்கடி காட்டும் நாடக பாணி பாசம்,உடன் பிறந்த சகோதரன் தன் கள்ள காதலியுடன் செய்யும் மோசம்,கழுத்தில் புலிநகம் அல்லது கர்சிப் அணிந்து முரட்டு மீசை கெட்டவர்கள் செய்யும் நாசம் போன்றவை இல்லாதா அவரின் திரை படங்களால் நானும் என் வகுப்பு தோழர்களும் ஈர்க்கப்பட்டு அவரின் விசிறிகள் ஆகிவிட்டோம்.
புத்திசாலிதனமான நகைசுவை வசனங்கள், யதார்த்தமான காட்சிகள், வித்யாசமான பாத்திரங்கள்,ஏற்று நடிக்குக்கும் இளைஞர் பட்டாளம்,இது தான் KB. குமுதம் வார இதழில் அவர் எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகள் தான் எனக்கு சினிமா மீது ஒரு காதலை ஏற்படுத்தியது
வெள்ளிக்கிழமைகளில் பாலசந்தர் படம் ரிலீஸ் ஆகும்.சனிக்கிழமை கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு, காலைகாட்சிக்கு போய்விடுவோம்..
கல்லூரி நாட்களில் பாலசந்தர் அவர்களின் படங்கள் பற்றிய முழு தகவல்கள் இருக்கும்.புன்னகை படத்தையும்  அரங்கேற்றத்தையும்  நான்கைந்து முறை பார்த்து வியந்தோம்.சத்யஜித்ரே படங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு அந்த நாட்களில் கிட்டியதில்லை.சென்னை போன்ற பட்டின வாசிகள் தான் அந்த படங்களை பார்க்க இயலும்.இந்த குறையை ஓரளவு KB அவர்கள் ஈடுகட்டின.
பின்நாளில் ஓரளவு திருச்சி சினி போரம் இதை நிவர்த்தி செய்தது.
இவரின் படைப்புகளில் அதிகம் பேசப்படாதது –பத்தாம்பசலியும், நான்கு சுவர்கள் என்ற வண்ண படமும்தான். அற்புதமான படைப்புகள்.முன்னதில் நாகேஷ் அசத்தி இருப்பார்.பின்னதில் ரவிச்சந்திரனும் ஜெய சங்கரும்
ஒப்பனையும் இசையும் நடனமும் மனதை தொடும்

. மோசக்கரனுக்கு மோசக்காரன் என்ற தெலுங்கு டப்பிங் படத்துக்கு  கிடைத்ததில் பாதி வரவேற்பை  கூட பெறாத இந்த திரைப்படம்  ஹாலிவுட் ஜாங்கோ படங்களுக்கு நிகரானது..

தன் வாழ்நாளை கலைக்கு அர்ப்பணம் செய்த இவர் ஒரு பல்கலை கழகம்......   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குமாஸ்தாவின் மகன்..

மங்காத்தா என்ற ஆட்டம்..