Follow by Email

திங்கள், 14 மே, 2012

பரத நாட்டியத்தை பற்றி ...


                கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாகிய தமிழ் சமுகத்தின் நாகரீகமும் பண்பாடும் மிகவும் தொன்மையானது.இதன் கலை இலக்கிய வடிவம் மிகவும் தேர்ந்த அறிவுஜீவிகளால் வடிவமைக்கப்பட்டவை.
                  இதில் மிகவும் பிரதானமாகக் கருதப்படுவது, பரதம்
நிகழ் கலை என்று சொல்லப்படும் Performed Arts களில் சிறப்பான இடத்தில் இருப்பது நமது பரதம்.காரணம் இது நுட்பமாய், மனித நுண் உணர்வுகளை வெளிப்படுதுகிறது.மேலும் மோகினி ஆட்டம், ஒடிசி.கதக் போன்ற நாட்டியங்களின் தாயக இருப்பதாலும் தான். நாகரிக வளர்ச்சியின் உச்சம் என்றும், இயற்கையுடன் இணைந்த தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லப் படுவது பரத நாட்டியம்
பரதம் என்ற சொல்-
ப-பாவம்=Expression
ர-ராகம்=Tune அல்லது music
த-தாளம்= Beats - என்று உருவானதாய் சொல்வார்கள்
புராணவியல் ரீதியில் பரத நாட்டியம் பரத முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அவரின் நாட்டிய பாடங்கள் தில்லை அம்பலத்தின் ப்ரகார மதில் சுவர்களில் சிற்பங்கள் வழியாக எழுதப்பட்டுள்ளதாயும் ஒரு செவி வழி சொல் வழக்கு உண்டு.இதற்கு சான்றாய் அம்பலத்தில் எழுந்து அருளி இருக்கும் நடராஜரின் நாட்டிய கோலத்தையும்,அதன் வழி அவரது ஊழி த்தாண்டவம் என்கிற cosmioc Dance  என்ற தத்துவம் சொல்லப்படுவதாயும் ஒரு நம்பிக்கை உண்டு. நாட்டிய கடவுளாய் சிவ பிரானை சொல்வதுண்டு.அவரின் மகிழ்ச்சியை குறிப்பது ஆனந்த தாண்டவம் என்றும் கோபத்தை குறிப்பது ருத்ர தாண்டவம் என்றும் சொல்வதுண்டு.
                                      பரத நாட்டியத்தை பற்றி --.
ஆரம்ப நாட்களில் ஆதி மனிதன் குகைகளில் வாழ்ந்த போது, தன் உணர்வுகளை கோபம்,ஆனந்தம்,சோகம் போன்ற மன எழுச்சிகளை வித விதமான ஒலிகளை எழுப்புவதன் முலம் தன் எண்ணத்தை வெளிப் படுத்திக் கொண்டிருந்தான். காலப் போக்கில் ஒலியுடன் உடல் சமிக்கைகள் முலம்,தன் எண்ணத்தை இன்னும் சிறப்பாகவும் குறிப்பாகவும் வெளிப் படுத்தத் துவங்கினான்.மனிதன் குழுக்களாய் கூடி வாழும் நாட்களில், இரவு நேரங்க்களிலும்,ஓய்வு நேரங்களிலும் பொழுது போக்க, ஆடல்,பாடல்களில் ஈடுபட்டான்.ஒழுங்கில்லா சமிக்கைகளும் சத்தங்களும் காலப் போக்கில்,ஒருங்கினைந்த அசைவாகியது.அதாவது.harmonious Gesture.சலிப்பில்லாத, தொடர்ச்சியான பொழுது போக்கிற்கு அர்த்தமில்லாத ஆட்டம் பாட்டத்தை மிறிய புதிய வடிவங்கள் தேவைப்பட்டது

                     கதையுடன் கூடிய சம்பவக் கோர்வைகள், நீதி போதனைகள்,  புராண,இதிகாச கதைகள்,இவைகளின் தொகுப்பாய் ஆரம்ப நாட்களீல் நிகழ் கலைகள் இருந்து வந்தது,அந்த சமயங்களில் அதன் பிரதான வடிவு கூத்து என்று சொல்லப்பட்டது.கூத்து-
நாட்டுக் கூத்து,வள்ளி கூத்து,குரவைகூத்து என்று பல வகையாக இருந்தது.ஜனரஞ்சகமான அதன் வடிவம், தெருக்கூத்து எனப்பட்டது.கூத்துக்கள் நிகழ்த்த பெரிய அரங்கங்கள்,மனித சக்தி,ஒப்பனைகள்,அரங்கத்தில் வித விதமான மலர் அலங்கரிப்பு, வாத்திய வகைகள்,பல அரங்க நிர்மாண பொருட்கள் என பல விஷயங்கள் அடிப்படையில் தேவைபட்டது.மேலும் இதற்கு பொருளாதார நிர்பந்தங்களால் அரசின் அதரவு தேவைபட்டது
                                             
                                               காலப் போக்கில் கோவில்கலாச்சாரம் முக்கியத்துவம் பெற்றதும்,கலைகளும் கலை வடிவங்களும் மாற்றங்களுக்கு உட்படவேண்டிய கட்டாயதுக்குள்ளானது.அதனால் உருவம்,உள்ளடக்கம்,மற்றும் நிகழ்விடங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டது.பெரிய அரங்கத்தில் இரண்டு மூன்று நபர்கள் பங்கேற்ற கூத்து,ஒரு தனியாரின் நிகழ்ச்சியாகி, சதுரமான சிறிய அரங்கத்தில்,கோவிலில் நடைபெற்றது.அதனால் அது சதிர் என்று சொல்லப்பட்டது.அபினயங்களுடன் ஆட்டம் பாட்டும் சேர்ந்து கொண்டதால் முக பாவங்கள் மூலம் உணர்ச்சிகளையும் கண்கள் முலம் கதை சொல்லும் ஆற்றல் பெண்களிடம் அதிகம் இருந்ததால் சதிராட்டங்களில் பெண்கள் அதிகம் பங்கேற்றனர்.இதன் அடிபடையில் தான் தேவதாசி முறை வந்திருக்கலாம்.
                      மேலும் ஆலயங்களீல் எழுந்து அருளி இருக்கும் இறைவனுக்கு தரவேண்டிய 15 உபசரணகளில்(Hospitality) ,பொறிகளுக்கு இன்பம் அளிக்க வல்ல இசையும், நடனமும் ஒன்று.
இயல் இசை,நாடகம் என்ற முத்தமிழின் வடிவத்தை காலப்போக்கில் பரதம் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு ஒரு பிரதான இடத்தை பரதக்கலை நாளடைவில் தனக்கு ஏற்படுத்தி கொண்டது.
பரதத்தின் அடிப்படை என்று சொல்லப்படுவது-நிருத்தம்,நாட்டியம்,நிருத்தியம்.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றூம் மேலக்கடம்பூர்ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
                                 பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' எனப்படும் . இக்கலையின் ஆசிரியர்களில், 'வழுவூர் ராமையா பிள்ளை,திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை', 'தனஞ்சயன்', 'அடையார் லக்ஷ்மணன்', 'கலாநிதி நாராயணன்' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்.
தஞ்சை தரணியும், மெய் பொருள் உறைக்கும் சிதம்பரமும்.பரத பயிர் வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சிய பூமி.
                                    தஞ்சை நால்வர்கள் என்று சொல்லப்பட்ட சின்னையா, பொன்னையா,சிவனந்தம் மற்றும் வடிவேலு என்கிற இவர்கள் சரபோஜி மாமன்னனின் அரசசபையில் இருந்தவர்கள்.இவர்கள் தான் பரத நாட்டியத்தின் தற்போதய வடிவான, அலாரிப்பு,ஜதிஸ்வரம்,வர்ணம்,சதனம்,பதம்,தில்லாணா அகிய இவைகளை உருவாக்கியவர்கள்.
இதற்கு முன்பு ஸ்வர ஜதி.பத வர்ணம், தில்லாணா என்ற வடிவம் மட்டும் இருந்தது.இந்த தஞ்சை நால்வரின் வாரிசுகளால் பின் சந்ததியினருக்கு பரத நாட்டியம் போதிக்கப்பட்டது.பரம்பரை நட்டுவாங்கம் இவர்களால் தொடர்ந்தது.
                    பரத நாட்டியத்திற்கு தன் வாழ்கையை அர்பணித்து கொண்டவர்கள்பற்றி சில வரிகள் குறிப்பிட்டு விட்டு நான் விடை பெற்றுக்கொள்ள ஆசை படுகிறேன்.
                                                                                                                    (மீதி அப்புறம்ந்தேன்..! )

கருத்துகள் இல்லை: