தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை....


                               "தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை...."

காதலை பற்றி ஜெயகாந்தன் இப்படி குறிப்பிட்டுஇருந்தார்.' காதல் அற்பமானது.காரணம் அது அற்ப காரணங்களினால் தோன்றி அற்ப காரணங்களுக்காக மரித்துவிடும்.ஆகையால் அது அற்பமானது."
ஆனால் கல்லூரி நாட்களில் காதல் அற்புதமானது.சொப்பன உலக இசை மயமான கவிதை அது.
                            அப்போது மங்கையர் தம் கடைக்கண் பார்வையால் மாமலையும் ஓர் கடுகாய் காட்சியளிக்கும்.எனக்கு படிக்கும் நாட்களில் பஸ்ஸில் பயனிக்கும் போது உடன் பயணிக்கும் பிரியா மீது காதல் வரும். அவளின் கம்பிர தோற்றமும் comanding கண்களும் மனதை வருடும்..அது தெய்வீக காதலாயும், புனிதமான காவிய status  இருக்கிற மாதிரியும் படும். பின்னாளில் அவள்கண்டிப்பாய் ஒரு கல்லூரி பிரின்ஸியாய் வேலை பார்ப்பாள் என்று நினத்துக் கொள்வோம். 'டிரெயினில் போகும் சமயம் சக பயணி ஹேமா  என்னை காதலிப்பதாய் படும்.நானும் அவளை பதிலுக்கு நேசிக்க விரும்புவேன்.அந்த காதல் மரபு சாராத ஒன்றாயும்,மிக நவினத்துவம் வாய்ந்ததாயும், நடப்பு சமுதாயத்துக்கு அது ஒரு எடுத்துக்காட்டாய் கருதப்படும் தகுதியை உடையதாயும் தோன்றும்.அவளின் காற்றாய் அசையும் நடை இதயத்தில் இசை முழக்கத்தை ஏற்படுத்தும்.
கோவிலுக்கு போகும் சமயம் எதிர்பாராமல் எதிர்ப்படும் அலமுவின் மஞ்சள் நிற மேனி காதலின் வேகத்தை அதிகரிக்கும்.சாண்டில்யன் கதை நாயகி மாதிரியான தேக அமைப்பு அவளுக்கு.சிரித்தால் குழந்தை மாதிரி இருக்கும்.
                                               இதுகளை பார்கையில் பா' புனையும் ஆர்வம் வரும்.இயல்பாய் கவிதை கங்கையாய் ஊற்றெடுக்கும்.ஆனாலும் இறுதி யாய் "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்" என பாடும் காதல் தோல்வி ஹிரோதான் நினவுக்கு வருவான்.காதலியர்கள் தங்கள் தங்கள் கண்வர்களுடன் ரிசப்ஷன் சோபாவில் மாலையும் கழுத்துமாய் நிற்க மைக்கை பிடித்துக் கொண்டு காதல் தோல்வி சினிமாடிக் சீனுடன் முடியும் போது, நான் கிளம்ப வேண்டிய,அல்லது இறங்கவேண்டிய தருணம் அல்லது இடம் வந்திருக்கும்.
                                     வேலைக்கு போகும் முன் அல்லது வேலை தேடும் சந்தர்பங்களில் பெண்கள் தான் போட்டியாய் வருவார்கள்.தோல்விகளை ஜிரணிக்க கஷ்டமாய் இருக்கும்.நல்ல சிகப்பாய் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் படவாக்களை ரெண்டுஅப்பு அப்புனும்ன்னு தோணும். கூட சின்ன பொண் இருந்திட்ட  அதுகள் பண்ற அளப்பரை யை பார்க்க பார்க்க இன்னும் எரியும்;
சின்ன வேலை கிடைத்து.ஒரு மத்திய வர்க பெண்ணை கைபிடித்து,நான் காதலித்தவளை விட என்னை காதலிப்பவள் தான் தேவை என சீ..சீ இந்த பழம் புளிக்கும் பாணியில் வசனம் பேசி தாம்பத்தியம், போன்ற பொருள் விளங்கா விஷயங்களை நாலு பேர் மத்தியில் அவர்கள் மெச்ச அசட்டு சிரிப்புடன் சொல்லி, இரண்டு மூன்று குட்டி போட்டு, ...பின்னர்
                         இழந்து போன ஆகாயங்கள் அல்லது ஸ்வர்கங்கள் என கவிதை எழுதி  தனக்குத் தானே ஆனந்த்க்கும் சந்தர்பத்தில் மகள் அல்லது மகன் சமுக அவலங்களை விமர்சிப்பது போல் பேசும் போது.
20 வயசிலே காதலிக்காதவனும்,கம்யூனிசம் பேசாதவனும்  காலங்காலமாய் இருக்கத் தான் செய்வாங்க என்று தெளிந்துணரும் சமயம் இது நினவுக்கு வ்ருவது தவிர்க்க முடியா ஒன்று.
என்ன செய்வது-
10-ல் பரபரப்பு,20-ல் இறுமாப்பு 30-ல் முனுமுனுப்பு 40-ல் நாய். குணம் 50-ல் ஏக்கம் 60-ல் தூக்கம்
என்ற இந்த உலக இயல்பு என்ற சிந்தனயை தூர எரிந்துவிட்டு ஒர் தொலை நோக்கில் பார்வையை செலுத்திய போது....
                                                                                                (தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

பரத நாட்டியத்தை பற்றி ...