ராஜாவின் நகர் வலம்


LUNATIC
               ஒரு முறை ராஜா நகர் சோதனைக்கு மாறு வேடத்தில் பரிவாரங்கள் இல்லாமல் தனியாளாய் பொடி நடையாய் போயிருந்தாராம்.அன்று அமாவாசை.கும்மிருட்டு. எதிரில் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம்.மோதியது சரியான முரட்டு பாடி என்பதால், ராஜா உடம்பெல்லாம் வலி கண்டு விட்டதாம். நகர் சோதனை முடித்து அரண்மனைக்கு கடுப்புடன் வந்த ராஜா ஒரு அவசர சட்டம் போட்டாராம். அதன் படி ராத்திரியில் வெளியே யார் நடமாடினாலும் ஒரு விளக்குடன் நடமாடுதல் வேண்டும்.
                      போட்ட சட்டம் எந்த மட்டில் அமல் ஆகிறது,என்பதை தெரிந்து கொள்ள ராஜா மீண்டும் மறு நாள் நகர் வலம் வந்தாராம் அமாவசைக்கு மறுநாள்.ராஜா  மீண்டும் எதிர் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம். உடனே  ராஜா "மூடனே இரவில் வெளிவரும் போது பின்பற்ற  ராஜா போட்ட உத்தரவு என்ன தெரியுமா..?"என்றார்.அதற்கு அவன்," தெரியும். இரவில் வெளியே வருபவர்கள் விளக்கு ஒன்றை கொண்டு வர வேண்டும்"எனறான்.
                  பின் எங்கே விளக்கு-என்றார் ராஜா.பையில் இருக்கு என்றான் அவன்.
என்ன பையிலா என்ற ராஜாவின் அதிர்ச்சி வினவலுக்கு அவன் பதிலாக,"கையில் கொண்டு வா என உத்தரவு சொல்லவில்லையே" என்றான்.
                  மறு நாள் காலை மீண்டும் திருத்தப்பட்ட புது உத்தரவு.அதன் படி அனைவரும் இரவு நேரங்களில்.கையில் விளக்குடன் தான்  வெளியே வரவேண்டும்.
 இரவு மீண்டும் நகர் வலம்
                   ராஜா மீண்டும் எதிவந்தன் மேல் மோதிக் கொண்டாராம். உடனே ராஜா "மூடனே இரவில் வெளிவரும் போது பின்பற்ற  ராஜா போட்ட புது உத்தரவு என்ன தெரியுமா..?"என்றார்.அதற்கு அவன்," தெரியும். இரவில் வெளியே வருபவர்கள் விளக்கு ஒன்றை கையுடன் கொண்டு வர வேண்டும்".பின் எங்கே விளக்கு"-என்றார் ராஜா.
கையில் இருக்கும் விளக்கை அவன் காட்டினான்.
அதற்கு ராஜா-
            "விளக்கை ஏற்றினால் தானே வெளிச்சம் வரும். முட்டாளே நீ ஏன் விளக்கை ஏற்றிக் கொண்டு வரவில்லை" என்றார்.
           "அப்படி உத்தரவில் சொல்லவில்லை. கையில் விளக்குடன் வரச் சொல்லி தான் அரசு ஆணை சொல்கிறது" என்றான் அவன்.தொடர்ந்த்து,"என் விளக்கை கேட்ட நிர்முடா  விளக்கு இல்லாது வரும் உன் விளக்கம் என்ன?" என்றான். அதை கேட்க ராஜா அங்கு இல்லை. மறு நாள் திருத்தப்பட்ட உத்தரவு புதிதாய் அறிவிக்கப்பட்டது.அதன் படி அனைவரும் இரவு நேரங்களில்கையில் ஏற்றிய விளக்குடன் தான்  வெளியே வரவேண்டும்.
               இரண்டு நாடகளுக்குப் பின் இரவு வேளை.மீண்டும் ராஜாவின் நகர் வலம்.இந்த முறை ராஜா யார் மீதும் முட்டிக் கொள்ளவில்லை.ராஜாவுக்கு எக மகிழ்ச்சி.பிரஜைகள் எல்லோரும் கையில் ஏற்றிய விளக்குடன்.
                 எதிர் பட்டவனிடம் ராஜா கேட்டார்" இந்த நள்ளிரவில் எதனால் இத்தனை நல் வெளிச்சம் தெரியுமா " என்றார்.அதற்கு அவன் 'தெரியும்" எனறான்.ராஜா," எதனால் இப்படி வெளிச்சம் என்ற காரணத்தை சொல்" என்றார் மிகவும் கம்பிரமாக பாராட்டு மழையை எதிர் பார்த்தபடி
அதற்கு அவன், " இன்று பௌர்னமி" என்றான் அமைதியாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

பாலசந்தர் என்றதொரு பல்கலை கழகம்...