இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குமாஸ்தாவின் மகன்..

படம்
குமாஸ்தாக்களை தயாரிக்கும் கரிகுலம் காலாவதியாகிய பின்னும்,நினைத்த டார்ஜெட்டை நாம் தொடவில்லை.தந்தையை விட தனயன் அறிவாளி. பேரன் அவர்களை விட அதிகம் சிந்தித்து செயல் படுகிறான்.ஆனாலும் இது பெரிய நகரங்களிலும் ,மெட்ரோக்களிலும் மட்டுமே சாத்யமான நிகழ்வு. இந்திய சிறு நகரங்களில் கல்வி தரம் உயரவில்லை.காரணம் படிப்பை விட அரசியலும்,சினிமாவும் அதிக தாக்கத்தை எற்படுத்திய வண்ணம் இருப்பதுதான்.போஸ்டர் ஒட்ட,ஏணியை பிடித்துக்கொள்ள ஆள் தேவை; ஏணியில் சாமான்யர்கள் ஏறுவதை செமி அர்பன் சமுதாயம் பார்க்க விருப்புவதில்லை.                       ஆங்கில வழி  பாட போதனை,பேச்சு வழக்கு ஆங்கிலம், என அதிகமான தடைகள்.மீறி வந்தாலும் மெ ட்ரோ கலாச்சாரம் வசப்படுவதில்லை.ஆடை அணிகலன் முதல்,உண்ணும் சிறு தீனி வரை எல்லாவற்றிலும் ஈடுபட முடியா அந்நிய தன்மை விரவி இருக்கும்.இதனை ஜீரணிக்க முடிவதில்லை.இந்த Non-Urban காம்ப்ளெக்ஸ்க்கை தவிர்க்க , தேவை பர்ஸ்னலிட்டீ டெவலெப்மெண்ட் திட்டங்கள்.ஆங்கில பத்திரிக்கை வாசிப்பு, நண்பர்கள் மத்தியில் க்ரூப் டிஸ்கஷன் போன்றவை ஓரளவு நல்ல பலனை தரும்.தன்னம...
படம்
பரத நாட்டியத்திற்கு தன் வாழ்கையை அர்பணித்து கொண்டவர்கள் என்றால் அதில் முதல் இடத்தில் வருபவர்கள் - பாலசரஸ்வதி சமிபத்தில் மறைந்த சாந்தா ராவ் , ருக்மிணி தேவி , மிருணாளினி சாராபாய் , சந்திரலேகா , போன்றவர்களுடன் இன்றைய தலைமுறையை சார்ந்த பத்மாசுப்ரமனியம் அவர்களும் ஆவார்கள் தஞ்சையை ஆண்ட மகாராஜா துலாஜாவின் (1763-1783) அவை குறிப்புகளில் . பாலசரஸ்வதி அவர்களின் முன்னோற்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன இவர் காலத்தில்தான் மகாதேவ அன்னாவி என்ற நட்டுவநார் மகாராஜாவின் சொந்த ஊரில் இருந்து தருவிக்கப்படுகிறார் . அன்னாவியின்பங்களிப்பு பற்றி சிறப்பாக எத்வும் சொல்லப்படவில்லை . ஆனால் இவரின் சகோதரரின் பேரர்கள்தான் பின்நாட்களில் த ஞ்சை நால்வர்கள் என் அழைக்கப்பட்ட , சின்னையா , பொன்னையா , சிவனந்தம் மற்றும் வடிவேலு என்பவர்கள் . இளவயதில் இருந்தே இவ்ருக்கு நாட்டியத்தின் மீதும் கடவுளின் மீதும் மிகவும் பற்று இருந்தது . ஆரம்ப நாட்களில் இவர் தாயார் ஜெயம்மளூடனும் சகோதரன் சீனிவாசனுடனும் சென்னை ஜார்ஜ்டவுன் யானை கவுனியில் ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்தார் . கீழ் பகுதியில் வீட்டின் உரிமையாளர் இருந்தார...

பரத நாட்டியத்தை பற்றி ...

படம்
                கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாகிய தமிழ் சமுகத்தின் நாகரீகமும் பண்பாடும் மிகவும் தொன்மையானது.இதன் கலை இலக்கிய வடிவம் மிகவும் தேர்ந்த அறிவுஜீவிகளால் வடிவமைக்கப்பட்டவை.                   இதில் மிகவும் பிரதானமாகக் கருதப்படுவது, பரதம் நிகழ் கலை என்று சொல்லப்படும் Performed Arts களில் சிறப்பான இடத்தில் இருப்பது நமது பரதம்.காரணம் இது நுட்பமாய், மனித நுண் உணர்வுகளை வெளிப்படுதுகிறது.மேலும் மோகினி ஆட்டம், ஒடிசி.கதக் போன்ற நாட்டியங்களின் தாயக இருப்பதாலும் தான். நாகரிக வளர்ச்சியின் உச்சம் என்றும், இயற்கையுடன் இணைந்த தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லப் படுவது பரத நாட்டியம் பரதம் என்ற சொல்- ப-பாவம்=Expression ர-ராகம்=Tune அல்லது music த-தாளம்= Beats - என்று உருவானதாய் சொல்வார்கள் புராணவியல் ரீதியில் பரத நாட்டியம் பரத முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அவரின் நாட்டிய பாடங்கள் தில்லை அம்பலத்தின் ப்ரகார மதில் சுவர்களில் சிற்பங்கள் வழியாக எழு...

தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை....

படம்
                               "தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை...." காதலை பற்றி ஜெயகாந்தன் இப்படி குறிப்பிட்டுஇருந்தார்.' காதல் அற்பமானது.காரணம் அது அற்ப காரணங்களினால் தோன்றி அற்ப காரணங்களுக்காக மரித்துவிடும்.ஆகையால் அது அற்பமானது." ஆனால் கல்லூரி நாட்களில் காதல் அற்புதமானது.சொப்பன உலக இசை மயமான கவிதை அது.                             அப்போது மங்கையர் தம் கடைக்கண் பார்வையால் மாமலையும் ஓர் கடுகாய் காட்சியளிக்கும்.எனக்கு படிக்கும் நாட்களில் பஸ்ஸில் பயனிக்கும் போது உடன் பயணிக்கும் பிரியா மீது காதல் வரும். அவளின் கம்பிர தோற்றமும் comanding கண்களும் மனதை வருடும்..அது தெய்வீக காதலாயும், புனிதமான காவிய status  இருக்கிற மாதிரியும் படும். பின்னாளில் அவள்கண்டிப்பாய் ஒரு கல்லூரி பிரின்ஸியாய் வேலை பார்ப்பாள் என்று நினத்துக் கொள்வோம். 'டிரெயினில் போகும் சமயம் சக பயணி ஹேமா  என்னை காதலிப்பதாய் படும்.நானும் அவளை பதிலுக்கு நேசிக்க விரு...

ஏன் பிறந்தாய் மரமே...

படம்
இந்தப் படத்தைFace Book ல் பார்ததும் கவிதை புனைய ஆசை கற்பனை குதிரைக்கு கால் முளைத்து,அது காற்றில் பறந்தது..                                                  பாலியல் பலாத் காரத்து பலியான தமிழ்                          சினிமா பெண் மாதிரி                          ஏன் ,நீ...                          சிதைந்து கிடக்கிறாய்                          என ஏளனித்த, எனை பார்த்து                          மரம் சொல்லியது                          "ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்ததை  ...

ராஜாவின் நகர் வலம்

LUNATIC                ஒரு முறை ராஜா நகர் சோதனைக்கு மாறு வேடத்தில் பரிவாரங்கள் இல்லாமல் தனியாளாய் பொடி நடையாய் போயிருந்தாராம்.அன்று அமாவாசை.கும்மிருட்டு. எதிரில் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம்.மோதியது சரியான முரட்டு பாடி என்பதால், ராஜா உடம்பெல்லாம் வலி கண்டு விட்டதாம். நகர் சோதனை முடித்து அரண்மனைக்கு கடுப்புடன் வந்த ராஜா ஒரு அவசர சட்டம் போட்டாராம். அதன் படி ராத்திரியில் வெளியே யார் நடமாடினாலும் ஒரு விளக்குடன் நடமாடுதல் வேண்டும்.                       போட்ட சட்டம் எந்த மட்டில் அமல் ஆகிறது,என்பதை தெரிந்து கொள்ள ராஜா மீண்டும் மறு நாள் நகர் வலம் வந்தாராம் அமாவசைக்கு மறுநாள்.ராஜா   மீண்டும் எதிர் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம். உடனே   ராஜா "மூடனே இரவில் வெளிவரும் போது பின்பற்ற   ராஜா போட்ட உத்தரவு என்ன தெரியுமா..?"என்றார்.அதற்கு அவன்," தெரியும். இரவில் வெளியே வருபவர்கள் விளக்கு ஒன்றை கொண்டு வர வே...