இடுகைகள்

படம்
பரத நாட்டியத்திற்கு தன் வாழ்கையை அர்பணித்து கொண்டவர்கள் என்றால் அதில் முதல் இடத்தில் வருபவர்கள் - பாலசரஸ்வதி சமிபத்தில் மறைந்த சாந்தா ராவ் , ருக்மிணி தேவி , மிருணாளினி சாராபாய் , சந்திரலேகா , போன்றவர்களுடன் இன்றைய தலைமுறையை சார்ந்த பத்மாசுப்ரமனியம் அவர்களும் ஆவார்கள் தஞ்சையை ஆண்ட மகாராஜா துலாஜாவின் (1763-1783) அவை குறிப்புகளில் . பாலசரஸ்வதி அவர்களின் முன்னோற்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன இவர் காலத்தில்தான் மகாதேவ அன்னாவி என்ற நட்டுவநார் மகாராஜாவின் சொந்த ஊரில் இருந்து தருவிக்கப்படுகிறார் . அன்னாவியின்பங்களிப்பு பற்றி சிறப்பாக எத்வும் சொல்லப்படவில்லை . ஆனால் இவரின் சகோதரரின் பேரர்கள்தான் பின்நாட்களில் த ஞ்சை நால்வர்கள் என் அழைக்கப்பட்ட , சின்னையா , பொன்னையா , சிவனந்தம் மற்றும் வடிவேலு என்பவர்கள் . இளவயதில் இருந்தே இவ்ருக்கு நாட்டியத்தின் மீதும் கடவுளின் மீதும் மிகவும் பற்று இருந்தது . ஆரம்ப நாட்களில் இவர் தாயார் ஜெயம்மளூடனும் சகோதரன் சீனிவாசனுடனும் சென்னை ஜார்ஜ்டவுன் யானை கவுனியில் ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்தார் . கீழ் பகுதியில் வீட்டின் உரிமையாளர் இருந்தார...

பரத நாட்டியத்தை பற்றி ...

படம்
                கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாகிய தமிழ் சமுகத்தின் நாகரீகமும் பண்பாடும் மிகவும் தொன்மையானது.இதன் கலை இலக்கிய வடிவம் மிகவும் தேர்ந்த அறிவுஜீவிகளால் வடிவமைக்கப்பட்டவை.                   இதில் மிகவும் பிரதானமாகக் கருதப்படுவது, பரதம் நிகழ் கலை என்று சொல்லப்படும் Performed Arts களில் சிறப்பான இடத்தில் இருப்பது நமது பரதம்.காரணம் இது நுட்பமாய், மனித நுண் உணர்வுகளை வெளிப்படுதுகிறது.மேலும் மோகினி ஆட்டம், ஒடிசி.கதக் போன்ற நாட்டியங்களின் தாயக இருப்பதாலும் தான். நாகரிக வளர்ச்சியின் உச்சம் என்றும், இயற்கையுடன் இணைந்த தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லப் படுவது பரத நாட்டியம் பரதம் என்ற சொல்- ப-பாவம்=Expression ர-ராகம்=Tune அல்லது music த-தாளம்= Beats - என்று உருவானதாய் சொல்வார்கள் புராணவியல் ரீதியில் பரத நாட்டியம் பரத முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அவரின் நாட்டிய பாடங்கள் தில்லை அம்பலத்தின் ப்ரகார மதில் சுவர்களில் சிற்பங்கள் வழியாக எழு...

தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை....

படம்
                               "தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை...." காதலை பற்றி ஜெயகாந்தன் இப்படி குறிப்பிட்டுஇருந்தார்.' காதல் அற்பமானது.காரணம் அது அற்ப காரணங்களினால் தோன்றி அற்ப காரணங்களுக்காக மரித்துவிடும்.ஆகையால் அது அற்பமானது." ஆனால் கல்லூரி நாட்களில் காதல் அற்புதமானது.சொப்பன உலக இசை மயமான கவிதை அது.                             அப்போது மங்கையர் தம் கடைக்கண் பார்வையால் மாமலையும் ஓர் கடுகாய் காட்சியளிக்கும்.எனக்கு படிக்கும் நாட்களில் பஸ்ஸில் பயனிக்கும் போது உடன் பயணிக்கும் பிரியா மீது காதல் வரும். அவளின் கம்பிர தோற்றமும் comanding கண்களும் மனதை வருடும்..அது தெய்வீக காதலாயும், புனிதமான காவிய status  இருக்கிற மாதிரியும் படும். பின்னாளில் அவள்கண்டிப்பாய் ஒரு கல்லூரி பிரின்ஸியாய் வேலை பார்ப்பாள் என்று நினத்துக் கொள்வோம். 'டிரெயினில் போகும் சமயம் சக பயணி ஹேமா  என்னை காதலிப்பதாய் படும்.நானும் அவளை பதிலுக்கு நேசிக்க விரு...

ஏன் பிறந்தாய் மரமே...

படம்
இந்தப் படத்தைFace Book ல் பார்ததும் கவிதை புனைய ஆசை கற்பனை குதிரைக்கு கால் முளைத்து,அது காற்றில் பறந்தது..                                                  பாலியல் பலாத் காரத்து பலியான தமிழ்                          சினிமா பெண் மாதிரி                          ஏன் ,நீ...                          சிதைந்து கிடக்கிறாய்                          என ஏளனித்த, எனை பார்த்து                          மரம் சொல்லியது                          "ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்ததை  ...

ராஜாவின் நகர் வலம்

LUNATIC                ஒரு முறை ராஜா நகர் சோதனைக்கு மாறு வேடத்தில் பரிவாரங்கள் இல்லாமல் தனியாளாய் பொடி நடையாய் போயிருந்தாராம்.அன்று அமாவாசை.கும்மிருட்டு. எதிரில் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம்.மோதியது சரியான முரட்டு பாடி என்பதால், ராஜா உடம்பெல்லாம் வலி கண்டு விட்டதாம். நகர் சோதனை முடித்து அரண்மனைக்கு கடுப்புடன் வந்த ராஜா ஒரு அவசர சட்டம் போட்டாராம். அதன் படி ராத்திரியில் வெளியே யார் நடமாடினாலும் ஒரு விளக்குடன் நடமாடுதல் வேண்டும்.                       போட்ட சட்டம் எந்த மட்டில் அமல் ஆகிறது,என்பதை தெரிந்து கொள்ள ராஜா மீண்டும் மறு நாள் நகர் வலம் வந்தாராம் அமாவசைக்கு மறுநாள்.ராஜா   மீண்டும் எதிர் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம். உடனே   ராஜா "மூடனே இரவில் வெளிவரும் போது பின்பற்ற   ராஜா போட்ட உத்தரவு என்ன தெரியுமா..?"என்றார்.அதற்கு அவன்," தெரியும். இரவில் வெளியே வருபவர்கள் விளக்கு ஒன்றை கொண்டு வர வே...

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்  சமிபமாய் வரும் நாளய இயக்குனர்களில் ஒளிபரப்பாகும் குறும் படங்களின் ஆரம்பத்திலேயே கதை போக்கும் சொல்லப் போகும் இதோபதேசமும் தெளிவாய் தெரிந்துவிடுகிறது. சிலரின் படைப்புகள் குழப்பமாயும் தெளிவின்மயுமாய் இருக்கிறது.பொதுவில் தொழில் நுட்பம் மற்றும் காமிரா கையாள்கயில் மிகவும் முதிர்சியும் கலை ஞானமும் தெரிகிறது.நமது இன்றைய பெரிய திரை இயக்குனர்களின் வித்யாசமான பார்வைக்கு உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் சம கால நல் இலக்கிய கதைகள் பற்றிய ப்ரக்ஞையும் தான்.(சில இயக்குனர்கள் முழுக்க முழுக்க வேற்று மொழி படத்தின் ஜெராக்ஸ் களை மொழி மாற்றம் செய்து தருவது தான் சோகம்) ஆண்டனி டிட்டோவின் God's Mistake என்ற குறும்படம் மிகவும் childish ஆக இருந்தது. தலைபாகை கட்டிக் கொண்டு அச்சிட்ட புத்தகத்தைப் பார்த்துப் படிக்கும் அச்சு பிச்சுதனமான  கடவுளும் அவரின் சிறுபிள்ளை தனமான பேச்சும் நகைப்பை தான் தருகிறது.த்ரேதாயுக கடவுள் வடிவவாய் இருக்குமோ? எதிரிடயாக நவின யுவன் கணிணி யுடன் கேள்விக்கனைகள் தொடுப்பது  மாதிரியாக காட்சி அமைத்திருப்பதன் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை.கடவுள் பழை...

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை முரண் இதில் மட்டுமல்ல இன்னும் நிறையவே உண்டு. இரண்டு மாறுபட்ட முகங்களின், எதிர்பாராத சந்திப்பு; எதேச்சயாய் நிகழ்ந்த அது அந்த இருவரின் வாழ்கையிலும் அவர்கள் விரும்பாத பெரும் மாற்றத்தை குருரமாய் ஏற்படுத்திவிடுவதுடன், சீர் செய்ய இயலா இழப்பில் அவர்களை ஆழ்த்தி விட்டு நகர்ந்துவிடுகிறது. இது முரண் படத்தின் மைய புள்ளியாய் சொல்லலாம். இந்த கிருஷ்ணனுக்கு (நந்தா-கிருஷ்ணனின் வேறு நாமம்) (தே)காரோட்டியபடி அர்ஜுன் செய்யும் உபதேசமும் அதன் பின் விளைவும் முரண் கதையாய் விரிந்திருக்கிறது. contradiction களின்Conflict . ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் strangers on the train படத்தை நினவுருத்துகிறது கதையும், plot ம். ராஜன் மாதவ் இயக்கத்தில் சுமா பட்டாச்சாரியா,ஹரி பிரியா.நிக்கிதா,மெட்டி ஒலி நிலிமா, இவர்களுடன் சேரன், ப்ரசன்னா,ஜெய பிரகாஷ், போத்தன் நடித்த இந்த படத்தில் ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ளது.. இரண்டு முரண் பட்ட பாத்திரங்கள் ஒரு விபத்தின் காரணத்தால்ஒரே ஊர்தியில் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.இந்த எதிர்பாரா விபத்தால் நிறைய ...