இடுகைகள்

பாலசந்தர் என்றதொரு பல்கலை கழகம்...

ஆரம்ப நாட்களில் நான் சிவாஜி ரசிகன்.எம்.ஜி.ஆர்.ரசிகர்களுடன் பள்ளி நாட்களில் சூடான விவாதம் செய்வதுண்டு.எனது வகுப்பு தோழர்கள் இந்த வாக்கு வாதத்தை கைகலப்பு வரை கொண்டு செல்வார்கள்.இந்த ரசிகர் பிரியர்  வாக்குவாதம் குறுகி பிடி சண்டைகள் காரணத்தால் ஒருவருக்கு ஒருவர் வருடக்க கணக்கில் பேசாமல் இருந்ததுண்டு.    நண்பிகளுடன் தான் பார்த்த ஒரு திரைப்படத்தை என் சகோதரி ஓஹோ என்று பாராட்டியதால் நான் முதன் முதலாக சிவாஜி நடிக்காத அந்த படத்தை பார்க்க சென்றேன். அந்த திரைப்படம் தான் பாமா விஜயம். அந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.படத்தின் கவர்ச்சியே நாகேஷும், KB அவர்களின் சாதுர்யமான வசனங்களும். தான்.பெற்ற தாய் அடிக்கடி காட்டும் நாடக பாணி பாசம்,உடன் பிறந்த சகோதரன் தன் கள்ள காதலியுடன் செய்யும் மோசம்,கழுத்தில் புலிநகம் அல்லது கர்சிப் அணிந்து முரட்டு மீசை கெட்டவர்கள் செய்யும் நாசம் போன்றவை இல்லாதா அவரின் திரை படங்களால் நானும் என் வகுப்பு தோழர்களும் ஈர்க்கப்பட்டு அவரின் விசிறிகள் ஆகிவிட்டோம். புத்திசாலிதனமான நகைசுவை வசனங்கள், யதார்த்தமான காட்சிகள், வித்யாசமான பாத்திரங்கள்,ஏற்று நடிக்குக்கும்...
படம்
இரண்டு தமிழ் படங்கள்     தற்போதைய சுவாரஸ்யம் சமிபத்தில் வந்த இரண்டு தமிழ் திரைபடங்கள்ஒன்று சென்னை எக்ஸ்பிரஸ்;மற்றது தலைவா .இரண்டு படங்களின் நாயகர்களும் இளைய தலைமுறையினரால் ரசிக்கப்பட்டவர்கள்.அதிகமாய் விமர்சிக்கப்பட்ட ஆக்ஷன் ஹீரோக்கள். .ப ாக்ஸ் ஆபிஸ் சாதனையாளர்கள். இர ண்டு படங்களின் "ஆடெட் அட்ராக்ஷன் "சத்யராஜ். இந்த இரண்டு படங்களூம்.அதிக எதிர்பார்ப்புகளையும், ஏராளமான விமர்சன கணைகள் தாக்குதல்களுக்கு ஆளான படங்கள்.                   செ ன்னை எக்ஸ்பிரஸ் வெளி வந்து செமயாய் ஓடிக் கொண்டிருக்கிறது.      வழக்கமான செலுலாய்ட் ஹீரோக்களின் மசாலா கதை.சென்னை எக்ஸ்பிரஸ்.இக் கதையில் .மசாலா மிகவும் தூக்கலாய் இருந்தாலும்.ரசிகைகளும் சிலாகிக்கும் பதத் திதில் பறிமாறப்பட்டுள்ளதுதான் இதன் வெற்றி. வர்த்தக ரீதியில் எடுக்கப்படும் ஷாருக்கின் படங்களில் வித்யாசம் இருக்கும். "துவச்ச துணியையே துவைக்கும்" லிஸ்டில் வாராது. இந்த முறை-தி பவர் ஆப் காமன்மென்         ஒரு சாதரண மனிதன் ஸ்டேட் விட்டு ஸ்டே...

குமாஸ்தாவின் மகன்..

படம்
குமாஸ்தாக்களை தயாரிக்கும் கரிகுலம் காலாவதியாகிய பின்னும்,நினைத்த டார்ஜெட்டை நாம் தொடவில்லை.தந்தையை விட தனயன் அறிவாளி. பேரன் அவர்களை விட அதிகம் சிந்தித்து செயல் படுகிறான்.ஆனாலும் இது பெரிய நகரங்களிலும் ,மெட்ரோக்களிலும் மட்டுமே சாத்யமான நிகழ்வு. இந்திய சிறு நகரங்களில் கல்வி தரம் உயரவில்லை.காரணம் படிப்பை விட அரசியலும்,சினிமாவும் அதிக தாக்கத்தை எற்படுத்திய வண்ணம் இருப்பதுதான்.போஸ்டர் ஒட்ட,ஏணியை பிடித்துக்கொள்ள ஆள் தேவை; ஏணியில் சாமான்யர்கள் ஏறுவதை செமி அர்பன் சமுதாயம் பார்க்க விருப்புவதில்லை.                       ஆங்கில வழி  பாட போதனை,பேச்சு வழக்கு ஆங்கிலம், என அதிகமான தடைகள்.மீறி வந்தாலும் மெ ட்ரோ கலாச்சாரம் வசப்படுவதில்லை.ஆடை அணிகலன் முதல்,உண்ணும் சிறு தீனி வரை எல்லாவற்றிலும் ஈடுபட முடியா அந்நிய தன்மை விரவி இருக்கும்.இதனை ஜீரணிக்க முடிவதில்லை.இந்த Non-Urban காம்ப்ளெக்ஸ்க்கை தவிர்க்க , தேவை பர்ஸ்னலிட்டீ டெவலெப்மெண்ட் திட்டங்கள்.ஆங்கில பத்திரிக்கை வாசிப்பு, நண்பர்கள் மத்தியில் க்ரூப் டிஸ்கஷன் போன்றவை ஓரளவு நல்ல பலனை தரும்.தன்னம...
படம்
பரத நாட்டியத்திற்கு தன் வாழ்கையை அர்பணித்து கொண்டவர்கள் என்றால் அதில் முதல் இடத்தில் வருபவர்கள் - பாலசரஸ்வதி சமிபத்தில் மறைந்த சாந்தா ராவ் , ருக்மிணி தேவி , மிருணாளினி சாராபாய் , சந்திரலேகா , போன்றவர்களுடன் இன்றைய தலைமுறையை சார்ந்த பத்மாசுப்ரமனியம் அவர்களும் ஆவார்கள் தஞ்சையை ஆண்ட மகாராஜா துலாஜாவின் (1763-1783) அவை குறிப்புகளில் . பாலசரஸ்வதி அவர்களின் முன்னோற்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன இவர் காலத்தில்தான் மகாதேவ அன்னாவி என்ற நட்டுவநார் மகாராஜாவின் சொந்த ஊரில் இருந்து தருவிக்கப்படுகிறார் . அன்னாவியின்பங்களிப்பு பற்றி சிறப்பாக எத்வும் சொல்லப்படவில்லை . ஆனால் இவரின் சகோதரரின் பேரர்கள்தான் பின்நாட்களில் த ஞ்சை நால்வர்கள் என் அழைக்கப்பட்ட , சின்னையா , பொன்னையா , சிவனந்தம் மற்றும் வடிவேலு என்பவர்கள் . இளவயதில் இருந்தே இவ்ருக்கு நாட்டியத்தின் மீதும் கடவுளின் மீதும் மிகவும் பற்று இருந்தது . ஆரம்ப நாட்களில் இவர் தாயார் ஜெயம்மளூடனும் சகோதரன் சீனிவாசனுடனும் சென்னை ஜார்ஜ்டவுன் யானை கவுனியில் ஒரு வீட்டின் மாடியில் குடி இருந்தார் . கீழ் பகுதியில் வீட்டின் உரிமையாளர் இருந்தார...

பரத நாட்டியத்தை பற்றி ...

படம்
                கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாகிய தமிழ் சமுகத்தின் நாகரீகமும் பண்பாடும் மிகவும் தொன்மையானது.இதன் கலை இலக்கிய வடிவம் மிகவும் தேர்ந்த அறிவுஜீவிகளால் வடிவமைக்கப்பட்டவை.                   இதில் மிகவும் பிரதானமாகக் கருதப்படுவது, பரதம் நிகழ் கலை என்று சொல்லப்படும் Performed Arts களில் சிறப்பான இடத்தில் இருப்பது நமது பரதம்.காரணம் இது நுட்பமாய், மனித நுண் உணர்வுகளை வெளிப்படுதுகிறது.மேலும் மோகினி ஆட்டம், ஒடிசி.கதக் போன்ற நாட்டியங்களின் தாயக இருப்பதாலும் தான். நாகரிக வளர்ச்சியின் உச்சம் என்றும், இயற்கையுடன் இணைந்த தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லப் படுவது பரத நாட்டியம் பரதம் என்ற சொல்- ப-பாவம்=Expression ர-ராகம்=Tune அல்லது music த-தாளம்= Beats - என்று உருவானதாய் சொல்வார்கள் புராணவியல் ரீதியில் பரத நாட்டியம் பரத முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அவரின் நாட்டிய பாடங்கள் தில்லை அம்பலத்தின் ப்ரகார மதில் சுவர்களில் சிற்பங்கள் வழியாக எழு...

தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை....

படம்
                               "தாழ் இருங் கூந்தல் தையால் நின்னை...." காதலை பற்றி ஜெயகாந்தன் இப்படி குறிப்பிட்டுஇருந்தார்.' காதல் அற்பமானது.காரணம் அது அற்ப காரணங்களினால் தோன்றி அற்ப காரணங்களுக்காக மரித்துவிடும்.ஆகையால் அது அற்பமானது." ஆனால் கல்லூரி நாட்களில் காதல் அற்புதமானது.சொப்பன உலக இசை மயமான கவிதை அது.                             அப்போது மங்கையர் தம் கடைக்கண் பார்வையால் மாமலையும் ஓர் கடுகாய் காட்சியளிக்கும்.எனக்கு படிக்கும் நாட்களில் பஸ்ஸில் பயனிக்கும் போது உடன் பயணிக்கும் பிரியா மீது காதல் வரும். அவளின் கம்பிர தோற்றமும் comanding கண்களும் மனதை வருடும்..அது தெய்வீக காதலாயும், புனிதமான காவிய status  இருக்கிற மாதிரியும் படும். பின்னாளில் அவள்கண்டிப்பாய் ஒரு கல்லூரி பிரின்ஸியாய் வேலை பார்ப்பாள் என்று நினத்துக் கொள்வோம். 'டிரெயினில் போகும் சமயம் சக பயணி ஹேமா  என்னை காதலிப்பதாய் படும்.நானும் அவளை பதிலுக்கு நேசிக்க விரு...

ஏன் பிறந்தாய் மரமே...

படம்
இந்தப் படத்தைFace Book ல் பார்ததும் கவிதை புனைய ஆசை கற்பனை குதிரைக்கு கால் முளைத்து,அது காற்றில் பறந்தது..                                                  பாலியல் பலாத் காரத்து பலியான தமிழ்                          சினிமா பெண் மாதிரி                          ஏன் ,நீ...                          சிதைந்து கிடக்கிறாய்                          என ஏளனித்த, எனை பார்த்து                          மரம் சொல்லியது                          "ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்ததை  ...

ராஜாவின் நகர் வலம்

LUNATIC                ஒரு முறை ராஜா நகர் சோதனைக்கு மாறு வேடத்தில் பரிவாரங்கள் இல்லாமல் தனியாளாய் பொடி நடையாய் போயிருந்தாராம்.அன்று அமாவாசை.கும்மிருட்டு. எதிரில் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம்.மோதியது சரியான முரட்டு பாடி என்பதால், ராஜா உடம்பெல்லாம் வலி கண்டு விட்டதாம். நகர் சோதனை முடித்து அரண்மனைக்கு கடுப்புடன் வந்த ராஜா ஒரு அவசர சட்டம் போட்டாராம். அதன் படி ராத்திரியில் வெளியே யார் நடமாடினாலும் ஒரு விளக்குடன் நடமாடுதல் வேண்டும்.                       போட்ட சட்டம் எந்த மட்டில் அமல் ஆகிறது,என்பதை தெரிந்து கொள்ள ராஜா மீண்டும் மறு நாள் நகர் வலம் வந்தாராம் அமாவசைக்கு மறுநாள்.ராஜா   மீண்டும் எதிர் வந்தவன் மேல் மோதிக் கொண்டாராம். உடனே   ராஜா "மூடனே இரவில் வெளிவரும் போது பின்பற்ற   ராஜா போட்ட உத்தரவு என்ன தெரியுமா..?"என்றார்.அதற்கு அவன்," தெரியும். இரவில் வெளியே வருபவர்கள் விளக்கு ஒன்றை கொண்டு வர வே...

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்

கற்பனை வளம் இல்லாத படைப்புகள்  சமிபமாய் வரும் நாளய இயக்குனர்களில் ஒளிபரப்பாகும் குறும் படங்களின் ஆரம்பத்திலேயே கதை போக்கும் சொல்லப் போகும் இதோபதேசமும் தெளிவாய் தெரிந்துவிடுகிறது. சிலரின் படைப்புகள் குழப்பமாயும் தெளிவின்மயுமாய் இருக்கிறது.பொதுவில் தொழில் நுட்பம் மற்றும் காமிரா கையாள்கயில் மிகவும் முதிர்சியும் கலை ஞானமும் தெரிகிறது.நமது இன்றைய பெரிய திரை இயக்குனர்களின் வித்யாசமான பார்வைக்கு உலக சினிமா பற்றிய விரிவான அறிவும் சம கால நல் இலக்கிய கதைகள் பற்றிய ப்ரக்ஞையும் தான்.(சில இயக்குனர்கள் முழுக்க முழுக்க வேற்று மொழி படத்தின் ஜெராக்ஸ் களை மொழி மாற்றம் செய்து தருவது தான் சோகம்) ஆண்டனி டிட்டோவின் God's Mistake என்ற குறும்படம் மிகவும் childish ஆக இருந்தது. தலைபாகை கட்டிக் கொண்டு அச்சிட்ட புத்தகத்தைப் பார்த்துப் படிக்கும் அச்சு பிச்சுதனமான  கடவுளும் அவரின் சிறுபிள்ளை தனமான பேச்சும் நகைப்பை தான் தருகிறது.த்ரேதாயுக கடவுள் வடிவவாய் இருக்குமோ? எதிரிடயாக நவின யுவன் கணிணி யுடன் கேள்விக்கனைகள் தொடுப்பது  மாதிரியாக காட்சி அமைத்திருப்பதன் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை.கடவுள் பழை...

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை

முரண்- அர்ஜுன் கண்ணனுக்கு சொல்லும் கீதை முரண் இதில் மட்டுமல்ல இன்னும் நிறையவே உண்டு. இரண்டு மாறுபட்ட முகங்களின், எதிர்பாராத சந்திப்பு; எதேச்சயாய் நிகழ்ந்த அது அந்த இருவரின் வாழ்கையிலும் அவர்கள் விரும்பாத பெரும் மாற்றத்தை குருரமாய் ஏற்படுத்திவிடுவதுடன், சீர் செய்ய இயலா இழப்பில் அவர்களை ஆழ்த்தி விட்டு நகர்ந்துவிடுகிறது. இது முரண் படத்தின் மைய புள்ளியாய் சொல்லலாம். இந்த கிருஷ்ணனுக்கு (நந்தா-கிருஷ்ணனின் வேறு நாமம்) (தே)காரோட்டியபடி அர்ஜுன் செய்யும் உபதேசமும் அதன் பின் விளைவும் முரண் கதையாய் விரிந்திருக்கிறது. contradiction களின்Conflict . ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் strangers on the train படத்தை நினவுருத்துகிறது கதையும், plot ம். ராஜன் மாதவ் இயக்கத்தில் சுமா பட்டாச்சாரியா,ஹரி பிரியா.நிக்கிதா,மெட்டி ஒலி நிலிமா, இவர்களுடன் சேரன், ப்ரசன்னா,ஜெய பிரகாஷ், போத்தன் நடித்த இந்த படத்தில் ரசிக்க நிறைய விஷயங்கள் உள்ளது.. இரண்டு முரண் பட்ட பாத்திரங்கள் ஒரு விபத்தின் காரணத்தால்ஒரே ஊர்தியில் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.இந்த எதிர்பாரா விபத்தால் நிறைய ...

கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,

படம்
கிர்த்தி, பாக்கிய ராஜ் கலாய்ப்பு,சுந்தர்.சியின் ஆக்கப் பூர்வ கமெண்ட், வித்யாசமான படைப்புக்கள் என்று 18-9-11 ல் ஒளிபரப்பான நாளைய இயக்குனரின் இந்த இரண்டாவது நிகழ்வு ஜனரஞ்சகமாயும், சுவாரஸ்யமாயும் இருந்தது ஸ்டீபனின் 1,4,3- ஒரு நிறைவுறா காதல் கதை..படத்தின் சிறப்பு சுருக்கமான script-ம்,அளவான வசனமும்தான்.டீச்சர்,வாத்தியாரின் நடிப்பு இயற்கையாய் சன்னமான தாளலயத்தில் சொல்லப்பட்டிருந்ததை நையாண்டி செய்வது மாதிரி இரைச்சலான பிண்னணி இசை.வாத்தியார் பேசியதே நாலு dialogue.அதில் இரண்டு முக்கியம் வாய்ந்தது,ஒன்று " நான் வேணும்னா parents ஐ அணுப்பி வைகட்டுமா," மற்றது டோக்கன் நம்பர்:1,4,3 என்றதும், "அது என்னைத்தான்".என்பதும். இவை இரண்டும் பிண்னணி இசை சத்தத்தில் காதில் விழாமல் படத்தை ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. தன் குறும்படத்தின் பெயரை பாரதி பாலா ஆரம்பத்தில் சொல்லவில்லை. படம் ஆரம்பித்ததும் புரிந்துவிடுகிறது.அவள் அழகி என்று.அது தான் அவள் பெயரும் என்று உணரும் போது நெஞ்சு கனக்கிறது.படத்தின் தலைப்பும் அதுதான் என முடிவில் தெரியும் போது நெருடல். பெண் கள் ஏமாற்றப்ப...

மங்காத்தா என்ற ஆட்டம்..

படம்
திரிஷா,ஆண்ட்ரியா,அஞ்சலி.லட்சுமி ராய் மற்றும் மங்காத்தா                                                                                                                                            இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாகமாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக தயரிக்கப்பட்டுள்ளது இது மாறி வரும் மக்கள் மன நிலையை காட்டுகிறது.                               மதராச பட்டிணம், வம்சம், மைனா,தெய்வத் திருமகள், அங்காடித் தெரு,அழகர் சாமியின் குதிரை,தென் மேற்கு பருவ காற்று, போன்ற படங்கள் தமிழனின் ரசனை வளர்ச்சிக்கான அறிவிப்பு.சினிமாவிற்க்கு இந்த ...

மீண்டும் நாளைய இயக்குநர்கள்....

                                    மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர்-சீசன்-3 ,  புதிய விமர்சக தேர்வுக் குழுவுடன் 11-9-2011 அன்று ஒளிபரப்பாகியது. சமிப காலமாக குறும்படங்கள் வெகு ஜன வரவேற்பை பெற்றதோடல்லாமல், ஜன ரஞ்சக பிரபல வார மாதா இதழ்கள் மட்டுமின்றி பிரபல தொலைகட்சிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது.இது ஒரு நல்ல முன்னேற்றம்.குறும்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் புதுமையாய் பரிட்ஷார்த்தமாய் தனி மனித எண்ணங்க்களை விஷுவலாய் பதிவு செய்யும் ஒரு களமாய் உள்ளது.         .இன்றைய தமிழ் திரை உலகம் மிகவும் வேகமாக மாறி வருகிறது.உயிர் துடிப்புள்ள பல கதைகள் வித்தியாசமாக படமக்கப்பட்டுள்ளது இது ஒரு ஆரோக்கிய சுழல் உருவாகி வருதலை காட்டுகிறது.  குறிப்பாக-மதராச பட்டிணம், வம்சம், மைனா போன்ற படங்கள் தமிழில் வருமா என ஏங்கிய நாட்கள் போய்விட்டது.                     இந்த அசுர வேகத்தின் வெளிப்பாடே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிர...

AARAKSHAN

படம்
AARAKSHAN              ஆரக்க்ஷன் என்றால் reservation   அல்லது இட ஒதுக்கீடு . அமிதாப் நடிப்பில்   பிரகாஷ் ஜா   ( தாமுல் , கங்கா ஜல் , ராஜநிதீ போன்ற parell cinema க்களை இயக்கியவர் )   இயக்கதில் சமிபத்தில் வந்த படம் . இந்த இருவரின் இணைப்பில் அதுவும் இட ஒதுக்கீட்டை களமாய் கொண்ட படம் என்பதாலும் 15 ஆகஸ்ட்   ரீலீஸ் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தது           . படம் ரீலீஸுக்கு முன்பே இரண்டு மாநிலத்தில் (UP and Panjab)   இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது . ஆந்திர மாநிலத்தில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது . 12-8-11 அன்று மும்பயில் பிரிமியர் ஷோ ரத்து செய்யப்பட்டது . சில மாநிலத்தில் அரசியல் கட்சிகள் படத்தை தடை செய்ய கோரி ஊர்வலம் நடத்தினர் . மும்பயில் ஆர்பாட்டமும் நடந்தது .                          தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு ' ஜா ' பட தடையை   நீக்க கோர...